நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
ஞான சம்பந்தப்பெருமான் அருளிச்செய்த
திருப்பதிகம்
முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 92
திருத்தலம்- திருவீழிமிழலை
இறைவன் - ஸ்ரீ வீழிநாதேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை
தலவிருட்சம் - வீழிச்செடி, பலா மரம்
தீர்த்தம் - விஷ்ணு தீர்த்தம்
இறைவனின் திருமணத் திருத்தலங்களுள்
இதுவும் ஒன்று..
சலந்தாராசுனைப் பிளந்த சக்கரத்தை
இதுவும் ஒன்று..
சலந்தாராசுனைப் பிளந்த சக்கரத்தை
ஈசன் எம்பெருமானிடமிருந்து பெறுவதற்காக
ஸ்ரீ ஹரிபரந்தாமன் சிவ வழிபாடு செய்த திருத்தலம்..
நாளும் ஆயிரம் தாமரை கொண்டு பூஜை செய்யும்
வேளையில் - ஒருநாள் ஒரு மலர் குறைந்தது..
மாதவனும் தயங்காமல்
தனது ஒரு கண்ணை இடந்து
வழிபாட்டினை நிகழ்த்த
இறைவன் சக்கரத்தை வழங்கியதாக
தல புராணம்..
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே.. 1
இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.. 2
செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே.. 3
நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறும் மிழலையீர் பேறும் அருளுமே.. 4
காமன் வேவ ஓர் தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர் சேமம் நல்குமே.. 5
பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணி கொண்டருளுமே.. 6
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.. 7
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்மினே.. 8
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே.. 9
பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.. 10
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் தாழு மொழிகளே.. 11
-: திருச்சிற்றம்பலம் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
ஓம் நமச்சிவாய.
பதிலளிநீக்குஓம் நமச்சிவாய
பதிலளிநீக்குஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
வாழ்க வையகம்
நலமே விளையட்டும்.
பதிலளிநீக்குஓம் நம சிவாய:
என்ன ஆச்சரியம்? எ.பியில் ஒரு கருத்துக்கு ஞானசம்பந்தரைக் குறிப்பிட்டுவிட்டு இங்கே வந்தால் அவர் பதிகம் வரவேற்கிறது. அருமையான பதிகங்களும் அற்புதமான தரிசனமும் நிறைந்த பதிவுக்கூ நன்றி. எங்கும் நன்மையே விளையட்டும்.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் வளமும், நலமும் திருவீழிமிழலை இறைவனால் கிடைக்கட்டும்.
பதிலளிநீக்குபதிகம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.