நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திடவேண்டும்..
***
இன்றைய பதிவில்
அருணகிரி நாதர் செய்தருளிய
திருப்புகழ் அமிர்தம்
திருத்தலம் - திருத்தணிகை
எம்பெருமானின் ஐந்தாவது படைவீடு..
வள்ளி நாச்சியாரின் திருக்கரம் பற்றியருளிய திருத்தலம்..
கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாளனே தென்தணிகைக் குமர நின் தண்டையந்தாள்
சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே.. 76
-: கந்தர் அலங்காரம் :-
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி - விடமேநீ
ரிழிவு விடாத தலைவலி சோகை
யெழுகள மாலை - இவையோடே
பெருவயி றீளை எரிகுலை சூலை
பெருவலி வேறு - முள நோய்கள்
பிறவிகள் தோறு மெனை நலியாத
படியுன தாள்கள் - அருள்வாயே...
வருமொரு கோடி அசுர பாதாதி
மடியஅ நேக - இசை பாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை - விடுவோனே..
தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தருதிரு மாதின் - மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு - பெருமாளே..
***
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண - பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அனலென எழவிடு - மதிவீரா
பரிபுர கமலம தடியிணை அடியவர்
உளமதி லுறவருள் - முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி - களிகூர
ஸ்ரீ தணிகாசல மூர்த்தி |
உரைதரு குருபர - உயர்வாய
உலகம னலகில உயிர்களும் இமையவர்
அவர்களு முறுவர - முநிவோரும்
பரவிமு னநுதின மனமகிழ் உறவணி
பணிதிகழ் தணிகையில் - உறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையும்
இருபுடை யுறவரு - பெருமாளே..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
முருகா வா... முத்துக் குமரா வா..
பதிலளிநீக்குஉன்னிடம் நாங்கள் தஞ்சம்.
உடல்நிலை சரியாகி விட்டதா? நலம்தானே?
பதிலளிநீக்குஉடம்பு எப்படி இருக்கு துரை? நலம் தானே? இப்போதுள்ள உலகப் பேரிடருக்கு இந்தத் திருப்புகழும், கந்த சஷ்டி கவசமும் தான் படிக்கச் சொல்கிறார்கள். நல்லதொரு திருப்புகழ்.. நம் முன்னோர்கள் ஆண்டவனை வேண்டிக் கொள்வதையும் ஓர் அழகான பாடலாகச் சொல்லி அதில் நோய்களையும் குறிப்பிட்டு அனைவருக்குமாக வேண்டிக் கொண்டிருக்கின்றனர். திருத்தணித் திருப்புகழைப் பாடி அனைவருக்கும் நோய்க் கொடுமை நீங்கப் பிரார்த்திக்கிறேன். திருத்தணிக்குப் போனது 20 வருஷம் முன்னால்! அதுக்கப்புறம் போகவே வாய்க்கவில்லை.
பதிலளிநீக்குமுருகா...
பதிலளிநீக்குமுருகா...
முருகா...
கந்தா போற்றி கடம்பா போற்றி....
பதிலளிநீக்குதிருத்தணி - ஒரு முறை அலுவல் சம்பந்தமாக திருவண்ணாமலை, திருத்தணி என பயணித்தபோது திருத்தணி முருகனை மாலை வேளையிலும் காலை வேளையிலும் தரிசித்தேன். நிம்மதியான தரிசனம் கிடைத்தது. இன்றைக்கும் மனதில் அந்த நினைவுகள்...
திருப்புகழ் பாடி முருகனை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குநோய்களை போக்கி எல்லோரும் நலமாக வள்ளி மணவாளன் அருள்புரிவார்.
உங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது? விறைவில் நலம்பெற
வாழ்த்துக்கள்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
முருகா சரணம்
பதிலளிநீக்குவாழ்க வையகம்
நல விளையட்டும்
பதிலளிநீக்குதிருப்புகழ் முந்தைய பகுதிகளையும் பார்த்துவிட்டோம்.
பதிலளிநீக்குஎன்னாயிற்று உங்கள் உடல் நலம்? இப்போது எப்படி இருக்கிறீர்கள்? பிரார்த்திக்கிறோம். விரைவில் குணமடைந்திடட்டும்.
எங்கும் நலமே விளையட்டும்
துளசிதரன்,
கீதா