நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 03, 2020

குடமுழுக்கு வைபவம் 3

தஞ்சையிலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றது மனம்..

நேரில் தரிசிக்க வாய்ப்பு அமையவில்லை என்றாலும்
இந்த அளவுக்கு சிந்திக்கும் பேற்றினைப் பெற்றதற்கு
என்ன தவம் செய்தோமோ!.. - என்றிருக்கின்றது...

தஞ்சை பெரிய கோயிலின் திருக்குடமுழுக்கு விழாவினை
முன்னிட்டு சனிக்கிழமை (1/2) அன்று துவங்கிய யாகசாலை பூஜைகள்...

மேலும் சில அழகான திருக்காட்சிகள்..காணொளிகள்..

வலையேற்றிய அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...





தமிழகம் முழுதிருந்தும் மக்கள் தஞ்சை மாநகரை நோக்கி வந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன...

சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன...

திருக்குடமுழுக்கு வைபவத்தைக் காண்பதற்கு வருகை தரும் பக்தருக்கான பாதுகாப்பு சுகாதாரம்  மற்றும்அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன...

கொடிமர ஸ்தாபனம்



மூலஸ்தானம்





பழைய பேருந்து நிலையத்திலிருந்து
திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் அரசு மருத்துவமனையின்
சுவர்களில் சுகாதார விழிப்புணர்வுத் தகவல்களை எழுதி வைத்திருந்தாலும் -

அவற்றை அழித்து விட்டு வேறொன்றை எழுதி வைத்திருப்பார்கள்...

அப்படி அலங்கோலமான சுவர்கள் புதுப் பொலிவினைப் பெற்றுள்ளன..

அச்சுவர்களில் - கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவர்கள்
ஈசனின் நூற்றெட்டு தாண்டவக் கோலங்களையும் வண்ண மயமாகத்
தீட்டியுள்ளனர்...





ஓவியங்களை வரைந்த கலைச்செல்வங்கள் 


கீழுள்ள காணொளிகள் மனதை மகிழ்விக்கின்றன...



முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்குங்
கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.. (4/74)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. பதிவுத்தகவல்கள் அருமை ஜி

    காணொளிகள் கண்டேன்

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி ஐயா. நேரில் பார்த்துக்கொண்டும், உங்கள் பதிவு மூலமாக பார்த்துக்கொண்டும் இறையருளைப் பெறுகின்றோம்.

    பதிலளிநீக்கு
  3. நேரில் பார்த்தது போல் உணர்ந்தேன்.
    படங்களும், காணொளிகளும் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மிக மிக அருமை அன்பு துரை. இறையின் அருளை நேரில் அனுபவிக்க முடியாவிட்டால் என்ன.
    உங்கள் பதிவுகளும் ,முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் பதிவுகளும்
    நேரில் காணும் பாக்கியத்தை அளிக்கின்றன.
    காணோளி மகிழ்ச்சி தரும் அருமை. நன்றி மா.
    இறை எங்கும் நிறைந்த பெருவுடையார் நம்மையும் காப்பார்.

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்கள். ஓவியங்கள் வரைந்த மாணவச் செல்வங்கள் அந்த தெய்வத்தன்மையை அப்படியே கொண்டு வந்திருக்கின்றனர். எனக்கும் வந்தன வாட்சப் மூலமாக. கும்பாபிஷேஹம் சிறப்பாக நடைபெறவேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். கோயிலின் வண்ண விளக்கு அலங்காரங்கள் சிறப்பாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி. முனைவரின் பதிவுக்கு இன்னிக்குத் தான் போகணும். நேற்றுப் போக முடியலை.

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்கள். காணொளிகள் வழி சில காட்சிகளையாவது பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

    நீங்கள் பார்த்து ரசித்தவற்றை எங்களுடனும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    தொடரட்டும் குடமுழுக்கு சிறப்புப் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  7. குடமுழுக்கோடு 108 தாண்டவங்கள் ஓவியங்கள் வெகு அற்புதம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கோவிலின் கருங்கல் சுவர்களை சுத்தம்செய்ய sand blasting or shot blasting செய்தால் எழுத்துகள் மறையலாம்

    பதிலளிநீக்கு
  9. ஆஹா.....


    மிக அழகிய நிகழ்வின் அருமையான படங்கள்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..