நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 07, 2020

வெள்ளித் திருவிளக்கு 2

இன்று
தை வெள்ளிக்கிழமையாகிய நன்னாளில்
திருமுருகனின் திருப்பெயர் போற்றும்
திருப்புகழ்...


நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸ்வாமீ நமோநம... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம... பரசூரர்


சேத தண்டவி நோதா நமோநம 
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம... கிரிராஜ

தீப மங்கல ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம... அருள்தாராய்..


ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங் குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையும்... மறவாத

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை 
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பிர நாடா ளுநாயக... வயலூரா


ஆத ரம்பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி... லையிலேகி

ஆதி அந்த உலாஆசு பாடிய 
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள்... பெருமாளே!...


கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கதிர்வேல் அழகா சரணம்.. சரணம்..
முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்..

இன்றைய பதிவில்
தஞ்சை பெரியகோயில்
திருக்குட முழுக்கினை அடுத்து சந்நிதியில் எழுந்தருளியிருக்கும்
முருகப் பெருமானுக்கு
நிகழ்த்தப்படும்
திருமுழுக்கு தரிசனம்


வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!..
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நல்ல பகிர்வு. எல்லாம் அருமையான பாடல்கள். திருப்புகழைப் பாடப்பாட வாய்மணக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு நல்வரவு...

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

      மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  2. சனிக்கிழமை தைப்பூசம், இங்கேயும் காவடிகள், பால்குடம் போன்றவை எடுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்கவும் ஆமோ மாமயில் முருகப்பெருமானை!...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. கந்தா சரணம்...

    முருகா சரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்... முதல்வா சரணம்...
      முத்துக்குமரா சரணம்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. பதில்கள்
    1. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
      மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  5. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
    அருமையான தரிசனம்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஆறுமோ .ஆவல்...     ஆறுமுகனைக் காணாமல் ஆறுமோ ஆவல்...

    பதிலளிநீக்கு
  7. அரோகரா!

    தைப்பூச நன்னாளில் - சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..