நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 11, 2018

ஸ்ரீஅகத்திய தரிசனம்

தாமிரபரணிக் கரையில்
ஸ்ரீ பாபநாசர் திருக்கோயில் மற்றும்
ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில் - என,
தரிசனம் செய்த பிறகு,

மலையிறங்கு முகமாக -
பாபநாசத்திலிருந்து பத்து கி.மீ., தொலைவிலுள்ள
அம்பாசமுத்திரத்திற்கு விரைந்தோம்...

அம்பாசமுத்திரம் - 
நெல்லைச்சீமையின் புகழ்பெற்ற ஊர்களுள் ஒன்று..

இவ்வூரின் குறிப்பிடத்தக்க அடையாளம் -
ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்...

இத்திருக்கோயிலின் வரலாறு - இதோ!..


ஸ்ரீ அகத்தியர் - லோபமுத்ரா., (கல்யாண தீர்த்தம்)
பொதிகை மலைக்கு அகத்தியர் வந்த பிறகு
தாழ்ந்திருந்த வடகோடு மீண்டும் சமநிலையை அடைந்தது...

அகத்திய மகரிஷிக்கு - அவர் விரும்பியபடி
சிவ சக்தியின் திருக்கல்யாண தரிசனமும் கிடைத்தது...

அகத்தியரின் அரும்பணிகள் இம்மண்ணில் தொடர்ந்த நிலையில்
லோபமுத்ரா அம்மையுடன் திருமணமும் நிகழ்ந்தது...

இதையெல்லாம் கண்ணுற்ற ஏனைய முனிவர்கள் சிந்திக்கலாயினர்..

அகத்தியருக்கு மட்டும் எப்படி இத்தனை வல்லமை!?...

விடையொன்றும் கிடைக்கவில்லை அவர்களுக்கு..

நாளடைவில் -
அவர்களது மனக் குடைச்சல் மண்டைக் குடைச்சல் ஆனது...

இதை உணர்ந்த ஈசன் - அவர்கள் முன்பாகத் தோன்றி

தானும் அகத்தியனும் வேறு வேறல்லர்!.. 
- எனக் காட்டி மற்ற முனிவர்களின் ஆற்றாமையை அகற்றியருளினார்...

அந்த அளவில் மனம் தெளிந்த முனிவர்கள் -
எம்பெருமானையும் அகத்திய மாமுனிவரையும் போற்றி நின்றனர்...

ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சித்திரம் .
நன்றி - Tamilnadu Tourism..
இத்தகைய திருக்காட்சி நல்கப் பெற்ற திருத்தலம் - அம்பாசமுத்திரம்...

இவ்வூரில் விளங்குவது தான் -
ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்...

திருக்கோயிலின் கிழக்கு வாசல் 
திருக்கோயிலின் வாசலில் பந்தல் அமைக்கப்பட்டிருந்ததால்
முழுமையாக படம் எடுக்க இயலவில்லை..



அகத்திய மாமுனிவர் சிவாம்சத்துடன் திகழ்வதால்
கருவறைக்கு எதிரே நந்தியம்பெருமான் சேவை சாதிக்கின்றார்..


ஸ்ரீ அகத்தியர் திருமூலத்தானத்தில் விளங்க
சிவாலயம் போலவே திகழ்கின்றது...


திருமூலஸ்தானத்தில் -
ஸ்ரீ அகத்தியர் நின்ற திருக்கோலத்தில்
வலக்கரத்தில் சின்முத்திரை காட்டி
இடக்கரத்தில் ஏடு தாங்கிய வண்ணம் திகழ்கின்றார்..

தனிச் சந்நிதியில் தெற்குமுகமாக
ஸ்ரீ லோபமுத்ரா அம்மை - வலக்கரத்தில் பூச்செண்டுடன்
அம்பிகையைப் போல திருக்காட்சி நல்குகின்றாள்...

திருச்சுற்றில் 
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர் சந்நிதிகளுடன்
சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது..


திருக்கோயிலின் வடக்குப் பக்கமுள்ள வாசல் 
தை மாதத்தின் அஸ்த நட்சத்திரத்தில்
அகத்தியருக்கும் லோபமுத்ரா தேவிக்கும் திருக்கல்யாண வைபவம்...


நாங்கள் சென்றிருந்தபோது பங்குனிப் பெருவிழா நடந்து கொண்டிருந்தது....

தனியார் அறக்கட்டளையின் பொறுப்பிலுள்ளது திருக்கோயில்.. 
மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றது..

நெல்லையிலிருந்து பாபநாசம் செல்லும் பேருந்துகள்
அம்பாசமுத்திரம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலின்
அருகாக நின்று செல்கின்றன...

தாமிரபரணி இங்கிருந்து தான் சமவெளியில் பாய்கின்றாள் என்பது
குறிப்பிடத்தக்கது..

அம்பாசமுத்திரத்தில் வேறு சில கோயில்களும் உள்ளன..
நேரம் காலம் கூடிவரும்போது ஆர அமர தரிசிக்க வேண்டும்..

இன்றைய பதிவில் -
ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 
எடுக்கப்பெற்ற சில படங்கள் இடம் பெற்றுள்ளன!...
***

ஸ்ரீ லோபமுத்ராம்பிகா சமேத
ஸ்ரீ அகத்தீஸ்வர ஸ்வாமி திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
ஃஃஃ  

29 கருத்துகள்:

  1. குட்மார்னிங். அகத்திய தரிசனம் தேடி வந்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. அப்பவே, முனிவர்களிடமே போட்டியும் பொறாமையும் இருந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...
      வசிஷ்ட மகரிஷியிடம் போட்டி போட்டுக் கொண்டு தானே கௌசிக மன்னன் விஸ்வாமித்ரர் என ஆனார்... இடையில் மேனகா வேறு!...

      நீக்கு
  3. படங்கள் அருமையாக வந்துள்ளன. இப்படி ஒரு கோவிலைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான கோயில்..
      பாபநாசம் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது அம்பாசமுத்திரம் சென்று வாருங்கள்....

      நீக்கு
  4. அன்பின் ஜி
    ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலின் தரிசனம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. அம்பாசமுத்திரம் கோயில்கள் பற்றியும் கிருஷ்ணாபுரம் கோயில் பற்றியும் கேள்விப் பட்டிருந்தாலும் போக நேரம் அமையவில்லை. போனதில்லை. கல்லிடைக்குறிச்சியில் பிரபலமான கனடியன் வாய்க்கால்/கால்வாய் பார்த்தோம். எல்லா வீட்டின் கொல்லைப்புறங்களிலும் ஆறு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லிடைக்குறிச்சி என்றாலே இப்போல்லாம் அப்பளாமுக்கு அடுத்தபடி ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ் ஞாபகம் வருது. போன்ல ஆர்டர் பண்ணினா கொரியர்ல அனுப்சுர்றாங்க. ஹாஹாஹா

      நீக்கு
    2. நீங்க வேறே நெ.த. கல்லிடைக்குறிச்சியிலே அப்பளம் இட்டு வியாபாரம் செய்யும் வீட்டுக்கே போய் அப்பளங்கள் கட்டுக் கட்டாய் வாங்கினோம். அதே போல் அங்கே பட்சணம் செய்பவர்களிடம் புழுங்கலரிசி முறுக்கும், மாலாடும் வாங்கினோம். இரண்டிலும் நல்லா ஏமாந்தோம். அப்பளம் ஒரே சிவப்பாய்ச் சிவந்தது, காஸ் அடுப்பிலோ குமுட்டியிலோ வாட்டினால் கூட! முறுக்கு கடிக்கத் தனிப் பற்கள் கேட்டது. மாலாடில் மாவு தான் இருந்தது! :( சுண்டைக்காய் சைஸ் வேறே! நான் எதிர்பார்த்தது கிரிக்கெட் பந்தை விடப் பெரிய அளவில்! :(

      நீக்கு
    3. ஒரு காலத்தில் ஆனையடி அப்பளாம்னு பொரிச்சால் பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா இருக்கும். இப்போ அந்தப் பெயரே அங்கே இருப்போர்க்குத் தெரியலை!

      நீக்கு
    4. அன்பின் கீதா S .. அவர்களுக்கு நல்வரவு....

      தங்களது கருத்துரை வாயிலாக நிறைய செய்திகள்...

      கல்லிடைக்குறிச்சி அப்பளம் என்றாலும் கூடுதல் செய்திகள் புதியன...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    5. கீதாக்கா இப்போது கல்லிடைக் குறிச்சி அப்பளங்கள் அத்தனை பாப்புலராக இல்லை. அதைச் செய்து வந்த அந்தக் குடும்பத்தின் பெரியவர்கள் இப்போது இல்லையே (ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வருடத்துப் பழைய கதை இது) அப்போது வரை அது புகழ் வாய்ந்ததாக இருந்தது. முறுக்கும் நன்றாக இல்லை சமீபத்தில் உறவினர் வழி வந்தது. அது நெல்லை சொல்லியிருக்கும் ஆஞ்சனேயாவா தெரியலை

      கீதா

      நீக்கு
  6. அகத்தியர் தரிசனம் அருமை. இடுகை முழுமைபெறவில்லையோ எனத் தோன்றியது. காவிரி, நாடிஜோதிடம் மற்றும் பதிகங்கள் மிஸ்ஸிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..
      தங்களுக்கு நல்வரவு...

      முன்னிரவு 10 மணிக்குத் தான் பதிவினைத் தொகுத்தேன்...

      அகத்தியர் நமக்கு ஆசான்... தமிழ் வளர்த்த மாமுனிவர்...

      எனவே பொதுவான செய்திகளைத் தரவில்லை...

      அகத்திய மகரிஷியைப் போற்றி நிறைய செய்திகளைத் தரலாம்..

      தனிப்பதிவாகத் தருகின்றேன்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. மறுமொழியைப் பார்க்க மிக்க மகிழ்ச்சி.

      அகத்தியர், நோயினைத் தீர்க்க மருந்துகளும் (சித்தா) சொல்லியிருக்கிறார் என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. அன்பின் நெ.த.

      அகத்தியர் பெருமான் வைத்திய முறைகளையும் அருளியுள்ளார்..

      சுருக்கமாகச் சொல்வதற்கும்
      பெருமானின் நல்லாசிகளை வேண்டி நிற்கின்றேன்...

      நீக்கு
  7. தகவல்களுடன் படங்கள் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  8. மிக அழகிய படங்களுடன் தரிசனம் ...


    முதல் படம் வெகு அழகு ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அந்த முதல் படம் இணையத்தில் இருந்து பெற்றேன்..

      கல்யாண தீர்த்தம் களக்காடு காட்டினுள் உள்ளது..

      அதனைத் தரிசிக்க இன்னும் எத்தனை நாட்களாகுமோ...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தமிரபரணி ஆறு எனக்கு மிகவும் பிடிச்ச ஆறு.. அதில் இறங்கியிருக்கிறீங்களோ துரை அண்ணன்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்குத் தான் சொல்றது -
      பதிவுகளைச் சரியாகப் படிக்க வேணும்...ன்னு!..

      தாமிரபரணி ஆற்றங்கரையில் நீராடி சாமி தரிசனம் செய்ததை
      பாபநாசம் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்...

      அதிராவின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  10. அம்பாசமுத்திரம் கோவில், பாபசம் கோவில் எல்லாம் பார்த்து இருக்கிறோம். அம்பாசமுத்திரத்தில் கோவில் பக்கத்தில் என் சித்தி வீடு இருந்தது. அண்ணன் அங்கு வேலைப்பார்த்தார்கள்.

    மீண்டும் உங்கள் தளத்தின் மூலம் தரிசனம் கிடைத்தது.
    நன்றி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. இதுவரை செல்லாத கோயிலைக் காணும் வாய்ப்பினைத் தந்தமைக்கு நன்றி. அவசியம் இக்கோயிலுக்குச் செல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    முதல் வரவாக தமிழ் வளர்த்த கடவுள் ஸ்ரீ அகத்தியர் முனிவரின் ஆசியோடு தங்கள் தளத்திற்கு வருகிறேன்.

    படங்களும் பதிவும் மிக அருமையாக இருக்கிறது. அம்பைக்கு நான் என உறவின் இல்லத்திற்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த கோவிலை காணும் பாக்கியம் கிடைக்கவில்லை. கோவிலின் அழகை விவரித்து எழுதியது அங்கு சென்று வந்த உணர்வை தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    என் தளம் வந்து பதிவினை படித்து கருத்துக்கள் தந்தமைக்கும் மிக்க நன்றி.
    இனி நானும் கடவுளருளால் தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு...

      தளத்திற்கு வருகை தந்து கருத்துரைத்ததற்கு மகிழ்ச்சி...

      மறுமுறை அம்பைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அகத்தியர் திருக்கோயிலுக்குச் சென்று வாருங்கள்..

      வாழ்க நலம்...

      நீக்கு
  13. அகத்தியர் கோயில் சிறப்பு. உங்கள் மூலம் தரிசனம். அழகான படங்கள் ஐயா.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..