நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 08, 2017

மதுரைக்கு வாங்க.. 7

வாத்யாரே.. என்ன சொல்றதுன்னே... புரியலை!.. யப்பா.. எவ்வளவு கூட்டம்.. எவ்வளவு கூட்டம்!...

வருஷா வருஷம் நடக்கிற திருவிழாக்கள்...ல பெரியது இது தான்... லட்சக் கணக்கில மக்கள் கூடுறாங்க...

மதுரை பெரிய ஊர் தானே வாத்யாரே?..

தமிழகத்தில மூன்றாவது பெரிய ஊர் மதுரை..
ஆனாலும் மிக மிகத் தொன்மையானது..
தமிழ் வளர்த்த தலைநகரம் மதுரை..
இந்நகருக்கு தூங்கா நகரம் ..ன்னு சிறப்பு பேர்...

பாண்டியர்களுடைய தலைநகரம் மதுரை..
மதுரைக்கு மணிமகுடம் தான் மீனாட்சியம்மன் கோயில்!..

தமிழகத்தின் சிறப்பான கோயில்கள்...ல மீனாட்சியம்மன் கோயிலும் ஒன்று..
வருடம் முழுதும் திருவிழா தான்... அதுல சித்திரைத் திருவிழாதான் விசேஷம்...

வாத்யாரே.. எப்படி இந்தக் கூட்டதுக்குள்ள புகுந்து கோயிலுக்கு போறது?..

கோயிலுக்கு இப்போ போக முடியாது.. இந்த மாசி வீதியிலேயே நிற்போம்... இன்னும் கொஞ்ச நேரத்தில தேர் வரும்... அதுக்கு அப்புறம் கூட்டம் குறைஞ்சதும் போகலாம்!...

கூட்டத்துல.. கலந்திடாதீங்க!.. மலர் கையப் பிடிச்சுக்க... பசங்களை விட்டுடாதே!..

சரிங்க!.. நீங்க கவனமா நில்லுங்க!..


நேற்று காலை...ல திருக்கல்யாணம்.. இரவு பூப்பல்லக்கில் ஊர்வலம்..
இன்னைக்கு பிரம்மாண்டமா தேர்த் திருவிழா!..


அதோ பாருங்க.. தேர் வருது.. தேர் வருது!..
தோரணங்களும் தொம்பைகளும் மாலைகளும்... என்ன அழகு.. என்ன அழகு!..

சொக்கநாதா.. தாயே.. மீனாட்சி!..

7/5 ஞாயிற்றுக்கிழமை
பத்தாம் திருநாள்
-: காலை :-

ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசர் 
திருக்கல்யாணம்
காலை 8.45 மணியளவில் 
மிதுன லக்னத்தில் சிறப்புற நிகழ்ந்தது..








குண்டோதரனுக்கு கல்யாண விருந்து
7/5 ஞாயிற்றுக்கிழமை
பத்தாம் திருநாள்
-: இரவு :-

ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசர் 
திருவீதியுலா..

ஆனை வாகனத்தில் 
அம்மையப்பன்


பூப்பல்லக்கில்
மணக்கோலம் கண்ட மரகதவல்லி






8/5 திங்கட்கிழமை
பதினோறாம் திருநாள்
-: காலை :-

ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசர் 
திருத்தேரில் பவனி..







மதுரையம்பதியில்
இன்று காலையில் நிகழ்ந்த 
திருத்தேரோட்டத் திருக்காட்சிகள் 
இன்றைய பதிவில் வெளியாகி உள்ளன..


சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியாஅரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!.. (028)
-: அபிராமி பட்டர் :-

மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

6 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய புகைப்படங்களுடன் திருவிழா கண்டு மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  2. புகைப்படங்களின் உதவியால் மனதால் மதுரையில் இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. நேற்று இரவு பூபல்லாக்கு பார்த்தேன் உறவினர்களுடன். யானை வாகனத்தில் சுவாமியும் பிரியாவிடையும் வந்தனர். திருபரங்குன்ற முருகன், கூடல் பெருமாள் ஆகியோரும் வந்தனர். கல்யாணம் வேறு கோவிலில் பார்த்தேன்., தேர் தொலைக்காட்சியில்.
    உங்கள் பதிவிலும் கண்டு களித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. தஞ்சையம்பதியில்
    மதுரை திரு விழா குறித்த படங்களுடன்
    கூடிய பதிவு அற்புதம்

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  5. நேரில் சென்று பார்க்க முடியாத காட்சிகளை உங்கள் பதிவின் மூலம் கண்டதில் மகிழ்ச்சி. தேரோட்டம் வெகு சிறப்பு!

    பதிலளிநீக்கு
  6. அம்மை அப்பன் திருமணம் நடந்து முடிந்ததும் சக்தியும் சிவமுமாய் ஊரெல்லாம் காட்சி கொடுத்து அருளிட தேர் பவனி!!! என்னே அழகு!!!

    நேரில் கண்டது போன்ற உணர்வு!! மிக்க நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..