நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 26, 2017

பதிவுக்குள் பதிவு..

அண்ணே!.. அண்ணே!..

தம்பி!.. வாங்க.. எப்படியிருக்கீங்க?..

எங்கே..ண்ணே!.. ஒரு வாரமா குளிரும் மழையும் புரட்டி எடுத்துடிச்சி.. அது சரி.. உங்களுக்கும் உடம்பு சரியில்லை.. ந்னு கேள்விப்பட்டேன்!..

என்னப்பா.. செய்றது.. நானும் இருக்கேன்... னு, எதிர்பாராத விருந்தாளியா  தலைவலி, ஜூரம்...

இத்தனை வருஷமா ஐயப்ப விரதம்.. ன்னு ஒவ்வொரு நாளும் இரண்டு தரம் குளியல்... அப்போதெல்லாம் வராத ஜூரம் இப்போது!..

ஆனாலும் - காய்ச்சல் போவதும் வருவதுமாக மிகுந்த சிரமமாகி விட்டது...

ஏன்.. ண்ணே!.. ஓய்வு எடுத்து இருக்கலாம்..ல்லே!..

ஓய்வா?.. சரியாப் போச்சு.. போ!.. ஜனவரி பதினைஞ்சில இருந்து தினமும் கூடுதலாக நாலு மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்...

8 + 4 + 2 ..ன்னு பதினாலு மணி நேரம்.. மீதமுள்ள நேரத்தில் தான் வலைத் தளம், உணவு, உறக்கம்...

அடடா?..

அதுக்கு இடையில தான்.. தலைவலி, ஜூரம்..
ஓய்வு நாள் இல்லாம எல்லா நாளும் வேலை.. ன்னு அறுபது நாள்...
கூடுதலான நாலு மணி நேர வேலை போன வாரம் தான் என்னை விட்டது.. 

என்னமோ.. அண்ணே!.. ஊரு விட்டு ஊரு போனாலே -  நாம தான் நம்மை நல்லபடியா பார்த்துக்கணும்.. அதிலயும் நாம கடல் கடந்து வந்திருக்கோம்!.. அது சரி.. நீங்க என்ன சினிமா பொட்டியை...

ஏ.. இது சினிமா பொட்டியில்லை!.. கம்ப்யூட்டர்.. தமிழ்..ல கணினி!..

இருக்கட்டுமே.. கம்பியூட்டர்..ல.. சினிமாவும் பார்க்கிறீங்கதானே!.. அதுக்குள்ள என்ன குடைஞ்சிக்கிட்டு இருக்கீங்க?..

அதுவா!.. நம்ம மனசு குமார் தெரியுமா?..

அங்கே அபுதாபி..ல இருக்காரே.. நீங்க கூட சொல்லுவீங்களே... இந்த வயக்காட்டு கதையெல்லாம் எழுதுவாருன்னு!..

வயக்காடு மட்டுமா!.. குடும்பம்.. அரசியல்.. இலக்கியம்.. சினிமா..ன்னு நாலா பக்கமும் சலங்கை கட்டி ஆடுறவராச்சே!... அவரு கேட்டிருந்தார்... 

என்னைப் பற்றி நான்!.. - ன்ற தலைப்பு..ல நீங்க உங்களைப் பற்றி எழுதுங்க ஐயா..ன்னு!.. அது ஆச்சு.. மூனு மாசம்..

அப்போ இதுவரைக்கும் எழுதிக் கொடுக்கவே இல்லையா?.. இத்தனை நாள் என்ன..ண்ணே செஞ்சுக்கிட்டு இருந்தீங்க?..

என்னப்பா.. இது!.. விடிய விடிய கதை கேட்டமாதிரி ஆயிடுச்சு?.. இப்ப தானே பிரச்னையை சொன்னேன்!..

ஆமா..மா!.. குழம்பிட்டேன்!.. அது இருக்கட்டும்... அவங்க கேட்டதுக்கு என்ன.. ண்ணே எழுதப் போறீங்க?..

அது தான்..யா குழப்பமா இருக்கு!.. அந்த அளவுக்கு நம்ம கிட்ட விஷயம் இருக்கா..ன்னு!..

உங்களுக்கும் குழப்பமா!.. அண்ணே உங்களப் பத்தி உங்களுக்கு தெரியாது!..

உனக்குத் தெரியுமா?..

எனக்கும் தெரியாது.. நீங்க தான் சொல்லணும்!.. நானும் தெரிஞ்சுக்கிறேன்!.. 

..... ..... .....!..

என்ன.. ண்ணே.. சும்மா இருக்கீங்க!.. உங்களப் பத்தி சொல்லுங்க.. சரி.. நானே கேக்கிறேன்?.. உங்க சொந்த ஊர் எது?..

நீர்வளமும் நிலவளமும் நெறைஞ்சிருக்கும் தஞ்சாவூர் தான் சொந்த ஊர்.. இங்கே தான் பிறந்தேன்.. ஏழு வயசு வரைக்கும் இங்கே தான் வளர்ந்தேன்..

அதுக்கு அப்புறம்?..
* * *

அதுக்கு அப்புறம்!?..

மனசு திரு. குமார் அவர்களின் 
வலைத்தளத்தில் காண்க!..

அன்பு நண்பர்களுக்கு...

என்னைப் பற்றி நான்!.. - என, எழுதித் தரும்படி 
வலைத் தள நண்பர்களை அழைத்திருக்கும் 
திரு. குமார் அவர்களுக்கு நன்றி..


பதிவுக்குள் பதிவாக நானும் என்னைப் பற்றி எழுதியிருக்கின்றேன்...

இன்றைய தினம் (ஏப்ரல் 26) வெளியாகியுள்ளது..

எனக்கு முன்பாக - கடந்த வாரங்களில்
தம்மைப் பற்றி அறியத் தந்த அனைவருக்கும் வணக்கம்..

சில மாதங்களாக - அவ்வப்போது குமார் அவர்களின் தளமும் 
திரு துளசிதரன் அவர்கள் தளமும் 
திருமதி மனோசாமிநாதன் அவர்கள் தளமும்
எனது கணினியில் திறப்பதில் மிகுந்த தாமதமாகின்றது 

பதிவுகளில் கருத்துரையிடுவது என்பது வெகு சிரமமாக இருக்கின்றது...

ஆண்ட்ராய்டு வழியாக வந்தால் - 
செல்லினம் தட்டச்சு ஒத்துழைப்பதில்லை... 

மேற்குறித்த தளங்களில் பதிவைப் படித்து விட்டு
பதில் ஒன்றும் சொல்லாமல் செல்வது மனதை உறுத்துகின்றது....

இங்கே குவைத்தில் -
தற்போது இருக்கும் இடத்தில் இணைய வேகம் குறைவு..

மாதந்தோறும் இணைய இணைப்பிற்கான அட்டைகளை விற்று
பல்லாயிரக் கணக்கில் பெட்டியைக் கட்டுகின்றார்களே தவிர - 
கவனத்தில் கொண்டு ஒழுங்கு செய்வார் யாரும் இல்லை...

நாள்முழுதும் கைத் தொலைபேசியில் பேசுபவர்கள்
இணைய வேகத்தைப் பெரிதாய்க் கொள்வதில்லை...

இணைய வேகம் சீராக இல்லாததனால் -
கணினியில் பதிவுகளைச் செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள் அதிகம்...

உண்ணாமல் உறங்காமல் பதிவுகளைச் செய்து முறைப்படுத்தி விட்டு -
தளத்தினை ஒருமுறை மூடித் திறந்தால் - 

ஏதாவது ஏடாகூடமாகியிருக்கும்...

இன்னும் ஒருபுறம் -

இரவு வேலை முடிந்து - 
காலையில் அறைக்குத் திரும்பியதில் இருந்து 
பதிவுகளில் மூழ்கி விட்டு 
மதியம் உறங்கலாம் என்று நினைக்கும்போது -

வேலைத் தளத்திலிருந்து அவசர அழைப்பு வரும் - 

இன்றைக்கு மதியமும் சேர்த்துப் பாருங்கள்!.. -  என்று...

அப்போது ஏற்படும் மன உளைச்சல் இருக்கின்றதே!?..

இதிலெல்லாம் உழன்று தான் -
தஞ்சையம்பதியின் பதிவுகள் உங்கள் முன் மலர்கின்றன...

பலதரப்பட்ட மனிதர்கள் வேலையின் காரணமாக
ஒன்றாகத் தங்கியிருக்கும் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில்

எனக்கு உற்ற துணை எனது கணினியும் எனது வலைத் தளமும் தான்!..

இரவு வேலை முடிந்து அறைக்குத் திரும்பியதும் முதல் வேலை
கணினியைத் திறந்து சகோதர வலைத் தளங்களில் சுற்றி வருவது தான்!..

அன்புக்குரிய அனைவருடைய தளங்களையும் வாசிப்பது மகிழ்ச்சி.. .

அவர்களது கை வண்ணங்களில் - ஆழ்ந்திருப்பது உற்சாகம்.. 

மற்றபடிக்கு,
ஆறுதல் தேறுதல் -  இவற்றுக்கெல்லாம் அருகில் யாரும் இல்லை...

எனக்கு நான்!..
நானே நண்பன்.. நானே எதிரி!..

எனினும் -
இப்படியான அறிமுகத்தால்
மனம் சற்றே நெகிழ்ந்தாற்போல இருக்கின்றது..

திரு. குமார் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவிற்கான இணைப்பு இதோ..

என்னைப் பற்றி நான்...  

இன்னும் கூட சொல்லலாம்... இருக்கட்டும் .. 
மீண்டும் ஒரு இனிய பொழுது கிடைக்கும்...

வாழ்கின்ற வாழ்க்கையை ஓரளவுக்கு 
நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதில் 
மனம் நெகிழ்வாக மகிழ்வாக இருக்கின்றது..

நம்பிக்கை எப்படி வாழ்க்கை ஆகின்றதோ -
அப்படியே நன்னெறியும் வாழ்க்கை ஆகின்றது!...

வாழ்க நலம்!..
***  

19 கருத்துகள்:

  1. பதிவுக்குள் பதிவு - நல்ல பகிர்வு. இதோ அவரது தளத்தில் படிக்கச் செல்கிறேன்.

    கணினி தான் நம்மைப் போல தனியாக இருப்பவர்களுக்கு பொழுது போக்க கிடைக்கும் நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஆகா
    பதிவுக்குள் பதிவு
    அருமை ஐயா
    இதோ நண்பரின் தளத்திற்குச் செல்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி தங்களது அறிமுகமே தனி இதோ உடன் செல்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஜி..
    சற்றே தாமதம் ஆகின்றது என நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  5. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை தாண்டி பதிவுகளுக்கு கருத்திடுவது அறிந்து மகிழ்ச்சி. குமார் தளத்திற்கு சென்று வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அன்புள்ள பிரதர், வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியுள்ள தங்களைப்பற்றி பல விஷயங்கள் அறிய முடிந்தது. சோதனைகளை பலவற்றையும் சாதனைகளாக மாற்றி வெற்றிபெற்றுள்ளீர்கள். அன்பான நல்வாழ்த்துகள்.

    அங்கும் படித்து கருத்திட்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      குமார் அவர்களுடைய தளத்திலும் தங்களது கருத்துரையைப் படித்தேன்.

      தங்களது கருத்துரை கண்டு மனம் நெகிழ்ந்தேன்..

      அன்பான வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அவரது தளத்துக்கும் சென்று படித்தேன் இப்போது குவைத்தில் தனியாகவா இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      இங்கே தனி வாழ்க்கை தான்..
      வருடாந்திரம் விடுமுறைக்குச் சென்று வருவது தான் வாழ்க்கையாகிப் போனது..

      குறையொன்றும் இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. இங்கே தமிழ் நாட்டிலேயே வெய்யில் பின்னி எடுக்கிறதே... அங்கு எப்படியோ! உடல் நலத்தில் கவனம் வையுங்கள். குமார் தளம் சென்று படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      இங்கே இன்னும் வெயில் காலம் முழுமையாக ஆரம்பிக்கவில்லை..
      உடல் நலனுக்குக்கு குறைவேதும் இல்லை..

      தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அங்கே குமார் பக்கமும் சென்று பதிவை வாசித்து பின்னூட்டமிட்டாச்சு ஐயா ,,
    நேர்மை நன்னெறி என வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை கூறியவிதம் மிக அருமை ..
    இப்போ உடல் நலமா ..உடல்நலனை கவனியுங்கள் 14 மணிநேர உழைப்பு அதிகம் ஐயா ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      குமார் அவர்களுடைய தளத்தில் தங்களது இனிய கருத்துரைகளால் சிறப்பு செய்தீர்கள்..

      அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      சாதாரண காய்ய்ச்சல் அப்போதிருந்தது..
      தற்சமயம் உடல் நலக்குறைவு ஏதும் இல்லை..

      மேலதிக வேலை கூட இப்போது இல்லை..

      மீண்டும் மகிழ்ச்சியும் நன்றியும்..

      நீக்கு
  10. 'மனசு' குமார் தளத்தில் இதே பதிவை (இவ்வளவு வண்ணங்கள் இல்லாமல்)படித்தேன். அங்கே நீண்ட பின்னூட்டம் இட்டேன். அதையே இங்கு இட்ட பின்னூட்டமாகக் கருதிக்கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      எங்கெங்கிருந்தெல்லாமோ நிறை அன்பின் உள்ளங்கள் ஒன்று கூடி வாழ்த்திப் பேசும்போது செய்வதொன்று அறியேன்.. சொல்வதற்கு வார்த்தை ஒன்றறியேன்..

      மீண்டும் மீண்டும் என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் பண்படுத்திக் கொள்ளவும் ஆயிற்று..

      எத்தனை எத்தனையோ இடைஞ்சல்கள்.. இடையூறுகள்..

      அத்தனையையும் கடந்து வந்தது இதற்காகத் தானோ!..

      பெரியோர்களாகிய தங்களின் வாழ்த்துகளுக்குத் தலைவணங்குவதோடு
      நெஞ்சார்ந்த நன்றிகளை பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன்..

      வாழ்க நலம்!..

      நீக்கு
  11. குமார் அவர்களின் தளத்தில் வாசித்துவிட்டோம். ஐயா.

    தங்களது வாழ்க்கையே சிறந்த உதாரணம்தான்!! இப்போதும் பல இன்னல்களுக்கிடையில் வலைத்தளம் வருகையும், பதிவுகளும் என்று அசத்துகிறீர்களே!!! தங்கள் உடல் நலனில் கருத்தும் கொள்க ஐயா!

    வாழ்க நலம்

    --இருவரின் கருத்தும்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..