நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 16, 2017

ஒளி விளக்கு

இன்று ஈஸ்டர்...
இறைமகன் இயேசு உயிர்தெழுந்த நன்னாள்..


இயேசு பெருமானின் வாக்கும் வாழ்வும்..

கேளுங்கள்.. தனது நிலத்தில் விதைப்பதற்காக ஒருவர் விதைகளுடன் சென்றார்.. 

அவர் செல்லும்போது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன.. வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன..

வேறு சில விதைகள் மண் இல்லாத பாறைப் பகுதியில் விழுந்தன.. 
அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவாக முளைத்தன..

ஆனாலும், கதிரவன் மேலே எழுந்ததும் ஈரமில்லாததால் அவை காய்ந்தன.. வேரில்லாததால் கருகிப் போயின..

மற்றும் சில விதைகள் முட்செடிகளுக்கு இடையே விழுந்தன..
கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விடவே
அவைகளும் விளைச்சலைக் கொடுக்காமல் போயின..

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் முளைத்து வளர்ந்தன..
அவை முப்பது மடங்காகவும் அறுபது மடங்காகவும்
நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன..

இதைச் சொன்னதும் -
கேட்கச் செவியுடையோர் கேட்டுக்கொள்ளட்டும்!.. - என்று, இயேசு உரக்கக் கூறினார்..


பரிசேயருள் ஒருவரான சீமோன் -
இயேசுவைத் தம்முடன் உணவு உண்பதற்கு அழைத்திருந்தான்..

இயேசுவும் சீமோனுடைய வீட்டிற்குச் சென்று பந்தியில் அமர்ந்தார்...

அந்நகரில் பாவியான பெண் ஒருத்தி இருந்தாள்..
அவள் தனது பாவத்திலிருந்து வெளியில் வருவதற்கு எண்ணினாள்..

அவள் இயேசுவைப் பற்றி அறிந்திருந்தாள்..
ஆனாலும் அவரைச் சந்திக்க இயலுமா என்று ஐயம் கொண்டிருந்தாள்..

இழந்த ஆடுகளை மீட்கவே வந்திருக்கின்றேன்!.. என்று சொன்னவர் எனது பாவங்களில் இருந்து என்னை மீட்டளிப்பாரா!..  அவரை எப்படியும் சந்தித்தே ஆக வேண்டும்..

- என, உறுதி கொண்டாள்..

அதில் நம்பிக்கை கொண்டாள்..

இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்த வருகின்றார் என்பது
அந்தப் பெண்ணுக்கு தெரிந்திருந்தது...

அந்தப் பெண் நறுமணத் தைலம் நிறைந்த சிமிழ் ஒன்றினை
எடுத்துக் கொண்டு பரிசேயரின் வீட்டுக்குள் நுழைந்தாள்.

இயேசுவுக்குப் பின்னால் நின்று அழுதபடியிருந்தவள் -
இயேசுவுடைய காலருகில் குனிந்தாள்..


அவரது காலடிகளைத் தனது கண்ணீரால் நனைத்தாள்..
தனது கூந்தலால் துடைத்தாள்..

இயேசுவினுடைய கால்களைத் தொடர்ந்து முத்தமிட்டாள்..

தான் கொண்டு வந்திருந்த நறுமணத் தைலத்தை
இயேசுவின் கால்களில் பூசி விட்டாள்..

இயேசுவை அழைத்திருந்த சீமோன் இதைக் கண்டு -

இவர் ஓர் இறைவாக்கினர் என்றால் இவள் யார்.. எத்தகையவள் என்று அறிந்திருப்பாரே!.. இவள் பாவியாயிற்றே!..

- என்று, தம்முள் சொல்லிக் கொண்டார்..

இயேசு அவரைப் பார்த்து -
சீமோனே!.. நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்!.. - என்றார்..

அதற்கு அவர் - போதகரே!.. சொல்லும்.. - என்றார்..

அப்போது, இயேசு -

செல்வந்தர் ஒருவரிடம் ஒருவர் ஐநூறு தெனாரியமும் மற்றொருவர் ஐம்பது தெனாரியமும் கடன்பட்டிருந்தனர்.. கடனை அவர்களால் கடனைத் தீர்க்க இயலாமல் போனது.. அதனால் இருவரது கடன்களையும் செல்வந்தர் தள்ளுபடி செய்து விட்டார்.. இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?.. - எனக் கேட்டார்..

அதற்கு சீமோன் மறுமொழியாக -

அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கின்றேன்!.. - என்றான்..

நீர் சொன்னது சரியே!.. - என்றார் இயேசு..

பின்பு அப்பெண்ணின் பக்கம் திரும்பி,


இந்தப் பெண்ணைப் பார்த்தீரா!.. நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் எனது கால்களைக் கழுவுதற்குத் தண்ணீர் தரவில்லை.. இவளோ தம் கண்ணீரால் எனது கால்களை நனைத்து அவற்றைத் தனது கூந்தலால் துடைத்தாள்..

நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை.. இந்தப் பெண்ணோ உள்ளே வந்தது முதல் எனது கால்களை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கின்றாள்..

நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை..
இந்தப் பெண்ணோ எனது கால்களில் நறுமணத் தைலத்தைப் பூசினாள்..

ஆகவே, நான் உமக்குச் சொல்கிறேன்.. இவள் செய்த பாவங்கள் பலவும் மன்னிக்கப்பட்டன.. இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார்..

குறைவாக மன்னிப்பு பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்..

- என்று சொன்னார்..

அப்பெண்ணைப் பார்த்து -

உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன!.. - என்றார்..

அப்போது, இயேசுவுடன் பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் -

பாவங்களை மன்னிக்கும் இவர் யார்?..  -  என, தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்..

இயேசு அப்பெண்ணை நோக்கி -

நம்பிக்கை உன்னை மீட்டது.. அமைதியுடன் செல்க!.. - என்றார்..


சீர்இயேசு நாதனுக்கு ஜய மங்களம் - ஆதி 
திரியேக நாதனுக்கு சுப மங்களம்!.. 

பாரேறு நீதனுக்குப் பரம பொற்பாதனுக்கு 
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
சீர் இயேசு நாதனுக்கு ஜய மங்களம்  - ஆதி 
திரியேக நாதனுக்கு சுப மங்களம்!..
- தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் -

உலகெங்கும் அன்பினால் நிறைக!.. 
***

15 கருத்துகள்:

  1. எங்கும் அன்பு பரவட்டும்.....

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஈஸ்டர் தினத்துக்கு அருமையான பகிர்வு ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தங்களுக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. புத்தன், ஏசு, காந்தி ..என்று அனைவரையும் கொண்டாடும் மனம் கொண்டவர்கள் நாம். உங்கள் பதிவு வரவேற்கத்தக்கது.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அன்பு நிலைத்திருக்கட்டும்...
    அருமையான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கடைசி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பி. லீலா, ஜிக்கி இருவரும் இந்த பாடலை பாடி இருக்கிறார்கள் முன்பு அடிக்கடி வானொலியில் வைப்பார்கள்.
    ஈஸ்டர் திருநாள் பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமையான பதிவு! பதிவின் சமயம் பயணத்தில் இருந்ததால் கருத்து இட முடியவில்லை...

    சமீபத்தில் பைபிள் புதிய வேதாகமம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி வாசித்த போது தோன்றியது...எழுத வேண்டும் என்று...ஆனால் பயணத்தில் இருந்ததால் அதுவும் முடியவில்லை. எங்கும் அன்பு பரவி நிலைக்கட்டும்!
    வேதநாயகம் அவர்களின் பாடலையும் வாசித்திருக்கிறோம்..இப்போது மீண்டும்..தங்கள் வழி வாசிக்கக் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...நன்றி! எங்கும் இன்பம் பொங்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      மகிழ்ச்சி ததும்பும் கருத்துரை சிறப்பு..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..