அன்பின் இனிய
விஜய தசமி நல்வாழ்த்துகள்!..
மங்கலகரமாகிய நவராத்திரி வைபவத்தில் -
வீரத்துக்கு அதிபதியான ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும்
செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ ஆனந்த லக்ஷ்மியையும்
கல்விக்கு அதிபதியான ஸ்ரீ ஞான சரஸ்வதியையும்
- நெஞ்சார வணங்கி மகிழ்ந்தோம்.
இன்று விஜயதசமி.
அநீதியை எதிர்த்து ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி -
மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்தாள்.
ஒன்பதாம் நாளன்று மகிஷன் வீழ்ந்தான்.
மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்தாள்.
ஒன்பதாம் நாளன்று மகிஷன் வீழ்ந்தான்.
அத்துடன் ஆணவமும் அகந்தையும் அடியோடு அழிந்தன...
அன்னை போர்க்கோலத்தில் இருந்து மீண்டாள்..
சாந்த ஸ்வரூபிணியாக மங்களத் திருக்கோலம் கொண்டருளினாள்.
மறுநாள் தேவர்களும் முனிவர்களும் சகல உயிர்களும்
அன்னை ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அன்னை ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஊர்க்கும் உண்டு உடையானின் சிறப்பு என்பது சிவநெறி.
அதுபோல அம்பிகை தனது திருக்கரங்களில் ஏந்தியருளிய
ஆயுதங்களுக்கும் சிறப்பு உண்டு!..
அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே..
என்று, ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும்
அவள் தாங்கி நின்ற ஆயுதங்களையும் வணங்கி மகிழ்ந்தனர்.
அவள் தாங்கி நின்ற ஆயுதங்களையும் வணங்கி மகிழ்ந்தனர்.
விமலையின் வெற்றியைக் கொண்டாடியபடியால் - விஜய தசமி.
சிறார்களுக்கான கல்வி பயிற்றுவிப்பதற்கும்
இல்லத்தில் நல்லனவற்றை மேற்கொள்வதற்கும்
புதிய வணிகம் தொடங்குவதற்கும் உகந்த நாளாக - இந்நாள் விளங்குகின்றது.
இல்லத்தில் நல்லனவற்றை மேற்கொள்வதற்கும்
புதிய வணிகம் தொடங்குவதற்கும் உகந்த நாளாக - இந்நாள் விளங்குகின்றது.
ஸ்ரீராமபிரான் - ராவணனை வெற்றி கண்ட நாள் என்றும்,
பஞ்சபாண்டவர்கள் தங்களது அஞ்ஞாத வாசம் முடிந்தபின் -
வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களை மீண்டும்
எடுத்துக் கொண்டு - ஸ்ரீதுர்கா தேவியை வழிபட்ட நாள் என்றும்
நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால்
நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்!..
மக்களிடையே தனது அருள்மொழிகளால் நல்லுறவை வளர்த்தவர் மகான் ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
அவதார புருஷராகிய ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா மகாசமாதி அடைந்த நாள் விஜயதசமி (15 அக்டோபர் 1918) நாளாகும்.
மேலும்,
ஜீவசமாதியிலிருந்து வெளிப்பட்டு அன்பர்களின் இடர் தீர்த்தருள்பவர் -
ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்.
மதுரைக்கு அருகில் சமயநல்லூரில் - ஸ்ரீ மீனாட்சி அன்னையின் அருளால், சங்கு சக்கர ரேகையுடன் பிறந்தவர்.
ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் சித்தி ஆனதும் (1932) விஜய தசமி நாளில் தான்!..
ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் ஜீவசமாதி மதுரை அரசரடியில் உள்ளது.
ஆக, உத்தம புருஷர்களை சிந்திக்கவும் வந்திக்கவும் உகந்த நாள்.
எல்லாவற்றையும் விட இன்னொரு சிறப்பு!..
ஒன்பது நாட்களும் ஒருமித்த சிந்தையுடன் -
அன்புடனும் தன்னை வழிபட்டவர்களின் இல்லங்களைத் தேடி, விஜயதசமியன்று அன்னை பராசக்தி வருகின்றாள்...
அம்பிகை நம்மைத் தேடி வருகின்றாள் என்பது எத்தனை மகத்தானது!..
அவளை மகிழ்வுடன் நாம் வரவேற்போம்!..
அவள் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்!..
எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா!.. - அங்கு
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?.. - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!..
காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கே நடம் புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வையம் முழுவதும் துண்டு செய்வேன் - என
நீளஇடை யின்றி நீநினைத்தால் - அம்மை
நேர்ப்படுவாள் உந்தன் தோளினிலே!..
- : பாவேந்தர் பாரதிதாசன் :-
உனக்கே வெற்றி!.. உந்தனுக்கே வெற்றி!..
உன் திருவடிகளைப் போற்றுகின்றேன்!..
மஹிஷனை வென்றவளே!..
மண்ணுலகைக் காத்தவளே!..
மண்ணுலகைக் காத்தவளே!..
ஏலவார்குழலீ!.. எங்கள் அன்னையே!..
நின் திருவடிகள் சரணம்!.. சரணம்!..
விஜய தசமி எனும் நன்நாள்
பொலிவு கொண்ட பெண்மை போரிட்டு வென்ற நாள்!..
பேர் கொண்ட பெண்மை பெருமை கொண்ட நாள்!..
காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்:
ஓம் சக்தி!.. ஓம் சக்தி!..
ஓம் சக்தி!..
* * *
தீமைகள் தோற்க நன்மைகள் வெற்றியடையும் நாள் என்பது உகந்ததாய்த் தெரிகிறது வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஜி விஜயதசமி திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
உங்களுக்கும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நன்னாளில் அருமையான பதிவு.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான தகவல்களுடன் குறிப்பாக பாபாவைப் பற்றியது புதிய தகவல். நல்ல பதிவு. மிக்க நன்றி ஐயா பகிர்விற்கு. படங்கள் மிக அழகு!
பதிலளிநீக்குஅன்பின் துளசிதரன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..