நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வியாழன், அக்டோபர் 06, 2016

நவராத்திரி 2

ஸ்ரீ மஹாலக்ஷ்மி.

அவள் நிதர்சனமானவள்.. நித்ய சுமங்கலி..

நவராத்திரி நாட்களின் நடுநாயகமாகப் பொலிபவள்..

அண்ட ப்ரபஞ்சம் எங்கிலும் வியாபித்திருப்பவள். 

அப்படி இருந்தும் மக்களின் நல்வாழ்வுக்கென - 
மண்ணுலகில் மங்கலமாக மக்களுடன் கலந்திருப்பவள். 
   
நாம் வாழும் இந்த பூமியே அவள் தான்!. 

வளமெலாம் பெருகிடவே வருக..
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை.. (0594)

வள்ளுவப் பெருமான்  கூறுகின்றாரே - ஆக்கம் என்று!.. 

அந்த ஆக்கத்தின் மறு பெயர் தான் - மஹாலக்ஷ்மி!..

ஊக்கத்துடன் உழைப்பவர் தமக்கு உதவிக் கரம் நீட்டுபவள் - அவளே!..

மஹாலக்ஷ்மியை - பசுக்களுடன்  வசிப்பவள் என்பர்.. 

உண்மைதான்!..

பசுக்களால் - இயற்கை மேலும் வளம் அடைகின்றது. 
அந்தப் பசுக்களை - தனதாக உடையவனும் வளம் எய்துகின்றான். 

எனில், 
பசுக்கள் ஆக்கம் எனும் மஹாலக்ஷ்மியின் மறு வடிவம் தானே!.. 


வீடும் நாடும் குறைபட்டுப் போனதற்கு மிக முக்கிய காரணம் - 

பசு வளர்ப்பு குன்றியது தான்!.. 

காலத்தின் கோலம் என்று சொல்லிக் கொண்டே, 
நாம் - நம் கண்களை விற்றுக் கொண்டிருக்கின்றோம். 

தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு..
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு!.. - என்பது ஆன்றோர் வாக்கு..

நவநாகரிக வாழ்வில் மூழ்கிக் களிப்பதற்காக -

நாம் பசுக்களை விட்டு வெளியேறி விட்டோம்..

பசுக்களும் மற்றைய கால்நடைச் செல்வங்களும் கிராமங்களில் கூட குறைந்து விட்டன..

வயல்வெளிகளை அழித்தோம்.. குளங்குட்டைகளைத் தூர்த்து ஒழித்தோம்...

ஆனால், குன்றாத நல்வாழ்வினைத் தேடி -
கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருக்கின்றோம்..

ஸ்ரீ கமலவல்லி, உறையூர்
சர்வ மங்கலங்களையும் அள்ளித் தரும் அன்னை அவளின்  விருப்பத்துக்குரிய எதுவுமே நம்மிடம் இல்லாமல் - நாம் அவளுடைய அருளைப் பெற்று உய்வது எவ்வாறு?..

இனியாவது - மீண்டும் விழிப்பு வர வேண்டும்..

இயற்கையைக் காக்க வேண்டும்!.. - என்ற எண்ணம் மனதில் வேரூன்ற வேண்டும்.. 

எல்லா நல்ல எண்ணங்களும் ஈடேறுதற்கு
அன்னை அவளையே சரணடைவோம். 

நவராத்திரியின் நாயகியாகப் பொலிகின்ற நாயகியை
மங்கல தீபங்களேற்றி வைத்து வேண்டுவோம்!..

ஒவ்வொரு மனிதனிடமும் கல்வியாக,
பொன் பொருள் - என வளர் செல்வமாக,
நெஞ்சுரமாக, நல்வாழ்வில் விளையும் மகிழ்ச்சியாக,
கூடிவாழ்வதில் மலரும் அன்பாக, நிறை வாழ்வில் புகழாக,
நிறை வாழ்வில் நித்ய சாந்தியாக - பொலிபவள் அவளே!..  

காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளின் அருள் வாக்கு!.. 

வாஸ்தவத்தில் இருக்கிறது ஒரு பராசக்திதான்!.. அவள்தான் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த விதமாக அநுக்ரஹம் செய்து பக்குவத்தைத் தரவேண்டுமோ - அப்படிச் செய்வதற்காக மஹாலக்ஷ்மியாக ஸ்ரஸ்வதியாக ஞானாம்பிகையாக வருகின்றாள். ஏதோ ஒரு ரூபத்தில் பக்தி என்று வத்து விட்டால் போதும். அப்புறம் நடக்க வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள். 

இந்தப் பக்திதான் நமக்குப் பெரிய செல்வம். 
அதுவே மஹாலக்ஷ்மி!

ஸ்ரீ ரங்கநாயகி, திருஅரங்கம்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி.

நிலைத்த செல்வங்களைப் பெறுதற்கு.. 
பெற்ற செல்வங்கள் நிலைப்பதற்கு.. 

ஆதிலக்ஷ்மி நமஸ்தேஸ்து பரப்ரம்ஹ ஸ்வரூபிணி 
யசோ தேஹி தனம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே

தான்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாபரண பூஷிதே 
தான்யம் தேஹி தனம் தேஹி  ஸர்வகாமாம் ச  தேஹிமே  


வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வகார்ய ஜயப்ரதே 
வீர்யம் தேஹி பலம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 

கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதேவ ஸ்வரூபிணி 
அஸ்வாம் ச கோகுலம் தேஹி  ஸர்வகாமாம் ச  தேஹிமே 

ஸ்ரீ பத்மாவதி, திருச்சானூர்
சந்தானலக்ஷ்மி நமஸ்தேஸ்து புத்ர பெளத்ர ப்ரதாயினி 
புத்ராந் தேஹி தனம் தேஹி  ஸர்வகாமாம் ச  தேஹிமே 


ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்தி ஸ்வரூபிணி 
ஜயம் தேஹி சுபம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 

வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரம்ஹ வித்யா ஸ்வரூபிணி 
வித்யாம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 

தனலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வ தாரித்ரிய நாசினி 
தனம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 


மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே 
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா 

ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே 
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே 


மலரின் மேவு திருவே - நின்மேல்
மையல் பொங்கி நின்றேன்
நிலவு செய்யும் முகமும் காண்பார்
நினைவ ழிக்கும் விழிஉம்
கலக லென்ற மொழியும் தெய்வ
களிது லங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் கண்டுன்
இன்பம் வேண்டுகின்றேன்!..

கமலமேவு திருவே நின்மேல்
காதலாகி நின்றேன்
குமரி நின்னை இங்கே பெற்றோர்
கோடி இன்பமுற்றார்
அமரர் போல வாழ்வேன் என்மேல்
அன்பு கொள்வை யாயின்
இமய வெற்பின் மோத நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன்!..
-: மகாகவி பாரதியார் :-


அனைத்து மங்கலங்களையும் அருள்பவளே!..  
மஹாலக்ஷ்மியே.. உன்னைச் சரணடைகின்றேன்!.. 

சுமங்கலியே!.. சுபம் வழங்கியருள்க!.. 
செந்தாமரைத் திருவே 
செல்வங்களை வழங்கியருள்க!.. 

திருவே.. திருவிளக்கே!.. 
உன் திருவடிகளுக்கு வணக்கம்!..

ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ..
***

16 கருத்துகள்:

 1. அற்புதமான பதிவு.

  பாரதி பாடல்கள் இதமாக இருக்கின்றன.

  நமஸ்தேஸ்து ஸ்தோத்திரம்
  தினமும் துதிக்க நன்று.

  வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வணக்கம் ஜி அற்புதமான பாரதியின் கவியுடன் நவராத்திரி படங்களும், விளக்கமும் நன்று வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பாரதியின் பாடல்களுடன் விளக்கங்கள் அருமை ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. நல்ல அருமையான பாடலுடன், ஸ்லோகங்களுடனான பதிவு அருமை ஐயா படங்களும் அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ” காலத்தின் கோலம் என்று சொல்லிக் கொண்டே நாம் -நம் கண்களை விற்றுக் கொண்டிருக்கிறோம் “
  ஆனால் குன்றாத நல் வாழ்வினைத் தேடி கோவில் கோவிலாக அலைந்து கொண்டிருக்கிறோம் “
  நான் ரசித்த சில வரிகள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. நல்ல பாடல்கள். மனதிற்கு சுகம் தரும் பயனுள்ள செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. அற்புதமான பகிர்வு ஐயா...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அருமையான படங்கள். பாடல்கள் மற்றும் ஸ்லோகங்கள் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு