நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 01, 2015

ராஜேந்திர சோழன்

சோழ மன்னர் முதலாம் ராஜேந்திரச் சோழன் பெயரில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தினார். 

நேற்று (28/2) காணக் கிடைத்த செய்தி - அது!.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (27/2) மாநிலங்களவையில் தருண் விஜய் அவர்கள் பேசியதன் விவரம் :-

இந்தியாவின் மிகப்பெரிய கடற்படை பேரரசராக விளங்கியவர் முதலாம் ராஜேந்திர சோழன். அவர் தனது தந்தை ராஜராஜ சோழனுக்கு பிறகு 1014-ஆம் ஆண்டில் சோழப் பேரரசரானார்.

அவரது ஆட்சிக் காலத்தில் வட இந்தியாவில் உள்ள கங்கை நதிக்கரை வரை தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவடையச் செய்தார்.

கடற்பகுதியிலும் மேலாதிக்கம் செலுத்தினார்.

அவரது ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு இந்தியாவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவானது.

ராஜேந்திர சோழன் தனது எல்லையை அந்தமான், நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் - என விரிவுபடுத்தினார்.


ஜயங்கொண்டார் இயற்றிய ''கலிங்கத்துப் பரணியிலும்''
ஒட்டக்கூத்தரின் இயற்றிய ''உலா'' படைப்பிலும் -
முதலாம் ராஜேந்திர சோழனின் படையெடுப்பு வெற்றிகள் புகழப்பட்டுள்ளன.

கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்றெல்லாம் சிறப்புப் பெயர்களை அவர் பெற்றார். இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் படையெடுத்து வெற்றி பெற்றார்.
எனவே, அவரது ஆயிரமாவது பிறந்த நாள் ஆண்டை மத்திய அரசு கொண்டாட வேண்டும்.

அதன் நினைவாக இந்திய போர்க் கப்பலுக்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டுவதுடன், அவரது பெயரில் அஞ்சல் தலையும் வெளியிட வேண்டும்!..''

இவ்வண்ணமாக -

மாமன்னன் இராஜேந்திர சோழனைப் புகழ்ந்து - பாராளுமன்றத்தின் ஏடுகளில் அவரைப் பற்றிய அருமை பெருமைகளைப் பதிவு செய்தாகி விட்டது.

கப்பற்படை கப்பலுக்கு அவர் பெயர் சூட்ட வேண்டும். அஞ்சல் தலை வெளியிட வேண்டும். ஆயிரமாவது ஆண்டை மத்திய அரசு கொண்டாட வேண்டும்!.. 

தருண் விஜய் அவர்கள் எழுப்பிய கோரிக்கையை தமிழக மக்கள் மகிழ்வுடன் ஆதரித்துள்ளனர்.


உத்ரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரான திரு.தருண்விஜய் சென்ற ஜனவரி மாதத்தில் கங்கை கொண்டசோழபுரத்திற்கு வருகை தந்து மாமன்னன் ராஜேந்திர சோழன் எழுப்பிய பெருங்கோயிலைக் கண்டு வியந்தார்.

அப்போது அவர் மனம் மகிழ்ந்து கூறிய வார்த்தைகள் - இதோ.,

மிக நெகிழ்வான தருணமாக இன்றைய தினம் இந்தக் கோவிலைத் தரிசிப்பதில் உணருகிறேன். மாமன்னன் இராஜேந்திரன் மாபெரும் இந்திய மன்னன். கடற்படை நடத்துவதை அவர் மூலமாகத்தான் மற்றவர்கள் பயின்றனர். 

அவருடைய படத்தை மிகப் பெரிய அளவில் இந்திய கப்பற்படை தலைமை இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளோம். அந்த பெருமைக்குரிய தகுதி அவருக்கு மட்டும் தான் உள்ளது. 

அவருக்கு மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிடும். அத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் இந்திய கப்பற்படை முலம் ஆயிரமாவது ஆண்டுவிழா எடுக்கப்படும். தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய விழா எடுக்கப்படும்!.."

ராஜேந்திர சோழன் சிறப்பிக்கப்படவேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்படும் திரு. தருண் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!.. 


" பூர்வதேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன் " - என புகழப்படுபவன் இராஜேந்திர சோழன். 

சிவபாத சேகரனாகிய ராஜராஜ சோழனுக்கும் திரிபுவனமாதேவி எனப்பட்ட  வானவன்மாதேவிக்கும் மகனாக ஆடித் திருவாதிரையில் பிறந்தவன்.

ராஜேந்திரனின் இயற்பெயர் மதுராந்தகன். கி.பி.1012-இல் இளவரசனாக முடி சூட்டப்பட்டபோது இராசேந்திரன் என்ற பெயரைக் கொண்டான். 

கி.பி.1014 வரை தன் தந்தையுடன் இணைந்து ஆட்சி புரிந்தான். 

ராஜேந்திர சோழனுக்கு - கங்கைகொண்டசோழன், மும்முடிச் சோழன், உத்தம சோழன், வீரசோழன் - என்றெல்லாம் பட்டபெயர்கள் உண்டு. 

ராஜேந்திர சோழனது ஆட்சிக்காலம் 1012 முதல் 1044 வரை.

"வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், குடதிசை மகோதையும், குணதிசை கடாரமும்" இம்மன்னனது நாட்டின் எல்லைகளாகக் குறிக்கப்படுகின்றன.


குண திசை கடாரம் எனப்படுவது இன்றைய மலேஷிய நாட்டின் கெடா மாநிலம்.

கடாரம் எனும் நாடு - காழகம் எனும் பெயருடன் - 
இரண்டாம் நூற்றாண்டிலேயே சிறப்புடன் விளங்கியதை - பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் நமக்கு அறியத் தருகின்றார்.


குட திசை மகோதை என்பது மேற்கே அரபிக் கடலின் கரையில் உள்ள சிறப்புடைய நகரம். 

இங்குள்ள சிவாலயமே - திருநாவுக்கரசு ஸ்வாமிகளாலும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளாலும் புகழப்பட்ட - திருஅஞ்சைக் களம் என்பது. 

இங்கிருந்து தான் சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாள் நாயனாரும் திருக்கயிலைக்கு ஏகினார்கள் என்பது திருக்குறிப்பு!..

ராஜேந்திரன் இளவரசனாக இருந்தபோது சுமார் ஒன்பது லட்சம் வீரர்களுக்குத் தலைமை தாங்கி படையெடுத்து சென்று சாளுக்கியரை வென்று - வெற்றி வாகை சூடி - தந்தை ராஜராஜ பெருஞ்சோழனின் மனம் குளிர்வித்தவன். 

இந்திய நாட்டின் பல பகுதிகளை வென்றதோடு கடல் கடந்து பல கீழ்த்திசை நாடுகளையும் தன் அடிமைப்படுத்தி ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் தான் - கடல் கடந்து கடாரத்தில் -  சோழர் தம் புலிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

தஞ்சையில் தன் தந்தையால் எழுப்பப் பெற்ற பெருங்கோயிலைப் போலவே தானும் எழுப்பினான்.

படதிசை கங்கையில் இருந்து நீர் கொணர்ந்து தான் உருவாக்கிய ஏரியில் வார்த்து - சோழ கங்கை  - என திருப்பெயரிட்டு மகிழ்ந்தான்.

அன்றைக்கே - கங்கையைக் கொணர்ந்து காவிரி பாயும் மண்ணில் நிறைத்து நதி நீர் இணைப்பு எனும் சிந்தனைக்கு வித்திட்ட மாமன்னன்.

இப்பெருமன்னனின் சிற்பம் ஒன்று - திருஆரூர் தியாகராஜ ஸ்வாமி திருக் கோயிலின் மேற்குத் திருச்சுற்றில் விளங்கும் ஆனந்தீஸ்வரர் சந்நிதியின் அருகில் திகழ்கின்றது.  

ராஜேந்திர சோழனின் அருகில் திகழும் பெண் பாவை - 
அவனது அன்புக்குரிய பரவை நாச்சியார் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

கடந்த ஆண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் - 
ராஜேந்திர சோழன் அரியணை அமர்ந்த ஆயிரமாவது ஆண்டு விழா மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அதனை முன்னின்று நடத்தியவர் - திரு. ராஜாராம் கோமகன்.


கடந்த மஹாசிவராத்திரி அன்று, கங்கை கொண்டசோழபுரம் கோயிலில் 
நாட்டியாஞ்சலியையும் நடத்தப்பட்டுள்ளது.

இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள சில படங்கள் திரு. ராஜாராம் அவர்களது முகநூலில் இருந்து பெறப்பட்டவை. 

திரு. தருண் விஜய் - திரு. ராஜாராம் கோமகன்



திரு. ராஜாராம் கோமகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!..
* * *


புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் !.. என்று ஒரு சொல் வழக்கு.

தந்தை நடத்திய வழியில் புலிக்கொடியை ஏந்திச் சென்று, 
கடல் கடந்து - நாட்டியவன் மாமன்னன் ராஜேந்திர சோழன்!..

பெருமைக்குரிய மாமன்னன் 
மிகப்பெரிய அளவில் சிறப்பிக்கப்பட வேண்டும் 
என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மாமன்னன் ராஜேந்திர சோழனைச் சிறப்பித்து 
பெருமை கொள்ள வேண்டும் பாரத அரசு!..

வாழ்க பாரதம்..
வளர்க தமிழகம்!..  
* * * 

26 கருத்துகள்:

  1. அருமையான செய்திகளை தாங்கிய பதிவு. மாமன்னன் ராஜேந்திர சோழனைச் சிறப்பித்து பெருமை கொள்ளும் பாரத அரசு.
    படங்கள் எல்லாம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மாமன்னன் சிறப்பிக்கப்பட வேண்டும்.
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சிறக்கட்டும்...

    நல்லதொரு தகவலுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      ராஜேந்திர சோழன் சிறப்பிக்கப்பட வேண்டும்.
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மாமன்னன் இராசேந்திர சோழனின் புகழ் பரவட்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மாமன்னன் சிறப்பிக்கப்பட்டு தமிழகம் பெருமை கொள்ளவேண்டும்.
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. எத்தனை அருமையான செய்திகள்!!! தகவல்கள் பல அறிந்தோம். நல்ல செய்தி!!! சிறப்பிக்கப்படவேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை ஐயா! நல்லதொரு விடயத்தை அறியத் தந்ததற்கு மனமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கங்கை கொண்ட சோழபுரம் மீண்டும் எழுச்சி பெற வேண்டும்.
      விரிவான கருத்து வழங்கியதற்கு நன்றி..

      நீக்கு
  5. உங்கள் பதிவின் மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொண்டேன். எனது வலைப்பூவுக்கும் வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி. எனது இன்றைய பதிவு பக்கோடாகுழம்பு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு நன்றி..
      கருத்துரையுடன் பக்கோடா குழம்பு வழங்கியதற்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. மாமன்னன் இராஜேந்திர சோழன் சிறப்பிக்கப்படவேண்டும். தகவல்கள் பலவற்றை அறிந்து கொண்டேன். நல்ல பதிவாக அறியத்தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மன்னர்களின் படை எடுப்பால் அவதிப் பட்ட இடங்களில் அவர்களுக்கு எதிராகக் கல்வெட்டுக்கள் இருப்பதாகப் படித்த நினைவு. பாதிப்பாக ஒரு எதிர்வினைப் பின்னூட்டம் . ஆங்கிலத்தில் சொல்வார்கள் Nothing succeeds like success.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தாங்கள் சொல்வதிலும் நியாயம் உள்ளதே!..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      புதிய கருத்து வழங்கியதற்கு நன்றி..

      நீக்கு
  8. தமிழர் அல்லாத திரு. தருண்விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றினை நினைவு கூர்வோம்.
    மாமன்னன் இராஜேந்திர சோழன் புகழ் ஓங்குக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.. அவர்களுக்கு நல்வரவு..

      ராஜேந்திர சோழன் புகழ் ஓங்குக!..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மகிழ்ச்சியான செய்தி. ராஜேந்திர சோழனின் புகழ் எங்கும் பரவட்டும்! கங்கை கொண்ட சோழபுரத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது. உங்களது இந்தப்பதிவைப் பார்த்த பிறகு அவசியம் பார்த்தே தீர வேண்டும் என்று ஆசையாக உள்ளது. படங்கள் அருமை. தபால் தலையும் வெளியிடப்போவதறிந்து மிகவும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      உண்மையில் மகிழ்ச்சியான செய்திதான்..
      தங்களின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சியே.. நன்றி..

      நீக்கு
  10. நன்றி.
    உங்கள் பதிவுகள்,ஆர்வத்திற்கு பெருவுடையார் துணையிருப்பாராக.,
    மாமன்னன் இராசேந்திரனுக்கு அஞ்சல் தலை வெளியிடுவது, கப்பற்படை தலைமையகத்தில் அவரின் படத்தை நிறுவது மற்றும் போர்ப்படை கப்பலுக்கு அவரின் பெயரை வைப்பதில் முனைப்பாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்ட செய்தியாக உள்ளது.
    இராசேந்திரன் புகழை ஏந்துவதை இறையால் அளிக்கப்பட்ட வாய்ப்பாக கருதுகிறேன்.
    நமது முயற்சிகள் அடுத்த தலைமுறைக்கானதாக கருதுகிறேன்.
    உங்கள் பதிவுகள் ஊக்கம் தருகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      //இராஜேந்திரனின் புகழை ஏந்துவதை இறையால் அளிக்கப்பட்ட வாய்ப்பாகக் கருதுகின்றேன்..//

      நெஞ்சம் இனிக்கின்றது..

      அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லத் தோள் கொடுப்போம்!..

      செய்திகள் உறுதி செய்யப்பட்டவை எனும் போது மகிழ்ச்சி பொங்குகின்றது..

      தங்களின் வருகையும் கருத்தும் கண்டு மேலும் மகிழ்ச்சியே.. நெஞ்சார்ந்த நன்றிகள்..

      நீக்கு
  11. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான தகவல் தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. ரூபன்!..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  12. உலகமே வியக்கும் விந்தையாளன் மாமன்னன் புகழ் தங்கள் பதிவாலும் மேன்மையடைகிறது.சிறப்பாக அமைந்துள்ளது. தாமத வருகைக்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மாமன்னன் ராஜேந்திர சோழனை முன்னிட்டுத் தான் -
      நமது பெருமையெல்லாம்!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. ராஜேந்திரசோழனைப் பற்றிப் படித்துள்ளேன். தற்போது தங்களது பதிவு மூலமாக புதியன தெரிந்துகொண்டேன். புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களது வருகைக்கு நன்றி. கருத்துரைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  14. இங்கு மகேஸ்வரி பாலசந்திரன் அவர்கள் தமது இனிய கருத்தினை மீண்டும் பதிவு செய்திருந்தார்கள்.. ஒழுங்கமைப்பில் அழிந்து விட்டது.

    வேறொன்றும் பிழையாகக் கருத வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..