நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 14, 2014

சித்திரை முதல் நாள்

மங்களகரமான ஜய வருடம்!..

உத்ராயண புண்ய காலத்தின் நான்காவது மாதம் - சித்திரை .

விஷூ புண்ய காலம் - இன்று!..  மதியத்திற்கு மேல் பௌர்ணமி திதி!.. 

உதயாதி வேளையின் நித்ய வழிபாடுகளுடன் - மாலைப்பொழுதில் திருவிளக்கேற்றி வைக்கும் வேளையில், ஜகத் ஜனனி ஜகத் காரணியாகிய அம்பாளின் திருவடிகளைப் போற்றி நிற்போம்!..
 
ஸ்ரீஅகத்தியர் அருளிய
ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை

ஞான கணேசா சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரோ சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்!..


காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே!..


நூல்

கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய்
மாதா!.. ஜய ஓம் லலிதாம்பிகையே!.. - 1 

மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திருமேனி யிலே நினைவாய்
நினைவற் றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா!.. ஜய ஓம் லலிதாம்பிகையே!.. - 2  


முத்தே வரும் முத்தொழி லாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவா சினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய்நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு ததிக்கிணை வாழ்வை யடையேன்
மாதா!.. ஜய ஓம் லலிதாம்பிகையே!.. - 3

அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்
தேன்பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணு பவர்க்கருள் எண்ண மிருந்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா!.. ஜய ஓம் லலிதாம்பிகையே!.. - 4

காணக் கிடையா கதியா னவளே
கருதக் கிடையாக் கலையா னவளே
பூணக் கிடையாப் பொலிவா னவளே
புனையக் கிடையாப் புதுமை த்தவளே
நாணித் திருநா மமும்நின் துதியும்
நவிலா தவரை நாடா தவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா!.. ஜய ஓம் லலிதாம்பிகையே!.. - 5  


மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதி ஜதிலயமே இசையே சரணம்
ஹரஹர சிவஎன் றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா!.. ஜய ஓம் லலிதாம்பிகையே!.. - 6
 
பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமே ருவிலே வளர் கோகிலமே
மாதா!.. ஜய ஓம் லலிதாம்பிகையே!.. - 7

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா!.. ஜய ஓம் லலிதாம்பிகையே!.. - 8


வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாரொலி யொத்த விதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற் றநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா!.. ஜய ஓம் லலிதாம்பிகையே!.. - 9

நூற்பயன்

எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே!..




ஜயவருடந் தன்னிலே செய்புவனங்கள் எல்லாம் 
வியனுரவே பைங்கூழ் விளையும் - நயமுடனே 
அஃகம் பெரிதாம் அளவில் சுகம் பெருகும் 
வெஃகுவார் மன்னர் இறைமேல்.. 

- என்பது இடைக்காட்டு சித்தர் அருளிய  வெண்பா. இதன்படி நஞ்சை புஞ்சை தானியங்கள் விளைச்சல் பெருகும். அறுவடை சிறக்கும்.  

மக்கள் மனதில் மகிழ்ச்சி உண்டாகும், வழக்கம் போல நாடாள்பவர் மனங்களில் - நானா!.. நீயா? என பிரச்னைகள் வந்து போகும். 

திங்கட்கிழமை (14.04.2014 ) சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, 
ஹஸ்த நக்ஷத்திரம் இரண்டாம் பாதம் கன்னி ராசி ,
நவாம்சத்தில் மேஷ லக்னம் ரிஷப ராசி,
வியாகாத நாமயோகமும்  வனசை நாமகரணமும் சித்தயோகமும் கூடிய சுபதினத்தில் உதயாதி காலை  6.06 மணிக்கு   மேஷ லக்னம் முதல் பாதத்தில் கன்யா ராசியில் சந்த்ர மகா தசையில் ராகு புத்தியில் செவ்வாய் அந்தரத்தில் 

சந்திர ஹோரையில் ஸ்ரீஜய வருஷம் பிறக்கிறது.

இந்த வருடத்தின் அரசனும் அமைச்சனும் - சந்திரன். 

இதனால், மக்கள் தங்கள் பலவீனங்களை  அறிந்து கொள்வர். பணத்தை விட ஆரோக்யமும் நிம்மதியும் தான் முக்கியம் என்பதை உணர்வார்கள். ஆள்பவர்கள் - மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஆர்வம் காட்டுவார்கள்.  

இந்த வருடத்தில் காடு மலை முதலான பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வேளாண்மை பெருகும்.முக்கியமாக பெண்களின் ஆதிக்கம் ஓங்கும். அனைத்துத் துறைகளிலும் சாதனை புரியும் அளவுக்கு பெண்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும்.

- என்றெல்லாம்  வருட பலன்கள் கூறப்படுகின்றன. எனினும்,

எல்லாவகையிலும் - பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். அதிலும் தன்னைத் தானே காத்துக் கொள்ளும்  மனோவலிமை பெருக வேண்டும் .

அத்தன்மைக்கெல்லாம் - அம்பிகையே அருளவேண்டும்.


அம்பிகையைச் சரணடைந்தால் 
அதிக வரம் பெறலாம்!..

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!..

அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
வாழ்க.. வளமுடன்!..
வாழ்க.. நலமுடன்!..

20 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  2. உளங் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  3. சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று
    லலிதா நவரத்ன மாலிகை தனை வெளியிட்டு
    அம்பிகை அருள் மழை பொழியச்செய்த
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    உளம் கனிந்த நன்றி.

    நவ ரத்ன பாடல்களை,
    நவ ராகங்களில் பாடி மகிழ்கின்றேன்.

    விரைவில் தொடர்பு தருகிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.pureaanmeekam.blogspot.com
    www.movieraghas.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      அனைவருக்கும் அம்பாள் துணையிருப்பாளாக..
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் -
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  4. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா அவர்களுக்கு,
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி..
      எல்லா நலன்களும் நின்று நிலை பெறுக!..

      நீக்கு
  5. இனிய நாள். தங்களிடமிருந்து வழக்கம்போல் இனிய, சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்,
      தாங்கள் வருகையும் வாழ்த்துக்களும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      எல்லா நலன்களும் நின்று நிலை பெறுக!..

      நீக்கு
  6. மங்களகரமான ஜய வருடம்!..ஆற்புதமான லலிதா நவரத்ன மாலிகை பகிர்வுகளுக்கு இனிய பாராட்டுக்கல்..!
    தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி..
      எல்லா நலன்களும் நின்று நிலை பெறுக!..

      நீக்கு
  7. தித்திக்கும் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்,
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி..
      தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
      எல்லா நலன்களும் நின்று நிலை பெறுக!..

      நீக்கு
  8. https://www.youtube.com/watch?v=KOBPF21Gcsgஇந்த அற்புதமான நவரத்ன மாளிகை
    இங்கு நவ ராகங்களில் பாட கேளுங்கள்.

    சுப்பு தாத்தா.
    www.wallposterwallposter.blogspot.in
    www.pureaanmeekam.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா அவர்களுக்கு,
      தாங்கள் செய்த அரும்பணிக்கு மிக்க மகிழ்ச்சி..
      எல்லா நலன்களும் நின்று நிலை பெறுக!..

      நீக்கு
  9. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சில ஆண்டுகளுக்கு முன் தை முதல் நாளே வருடப்பிறப்பு என்று சட்டம் கொண்டுவந்தார்கள் (களா.?) என்று நினைவு. ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.. மகிழ்ச்சி!..

      நீக்கு
  10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் -
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்தினுக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..