நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 02, 2013

காந்தி ஜயந்தி


வாழ்க நீ எம்மான்!..

(02.10.1869 - 31.01.1948)
மகாத்மாவின் பொன் மொழிகள் எக்காலத்திலும் உடன் வரக்கூடியவை. அவற்றுள் ஒரு சில நமது பதிவில் இடம் பெறுகின்றன.


தன்னம்பிக்கையும் அடக்கமும் ஒருவனிடம் இருக்குமானால் 
அவன் வாழ்வு தித்திக்கும் .


அன்பு எங்கே இருக்கின்றதோ - அங்கே கடவுள் இருக்கின்றார்.
அன்பு எப்போதும் எதையும் கேட்காது. கொடுக்கத்தான் செய்யும். 
அன்பு எப்போதும் வன்மம் கொள்ளாது பழி வாங்காது.

தண்டி யாத்திரை
அனைவரும் செயலாற்ற வேண்டும். 
எதிர்காலத்தை அறிவது நமது நோக்கம் அல்ல. 
நிகழ் காலத்தில் 
நாம் எப்படி செயலாற்றுகின்றோம் என்பது தான் முக்கியம்.
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
         அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். - See more at: http://gandhiworld.in/tamil/quotessan.html#sthash.Us4mFTgr.dpuf
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
         அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். - See more at: http://gandhiworld.in/tamil/quotessan.html#sthash.Us4mFTgr.dpuf
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
         அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். - See more at: http://gandhiworld.in/tamil/quotessan.html#sthash.Us4mFTgr.dpuf

காந்திஜி - நேதாஜி - வல்லபபாய் படேல்
நீ என்ன செய்கின்றாய் என்பது முக்கியமல்ல!..
நீ செய்கின்றாய் என்பது தான் முக்கியம்!..


மகத்தான மாமனிதர் 
லால்பகதூர் சாஸ்திரி
(02.10.1904 - 11.01.1966)
நேருவின் மறைவுக்குப் பின் பிரதமராக - 
காமராஜரால் அடையாளம் காட்டப்பட்டவர் - லால்பகதூர் சாஸ்திரி. 

அதற்கு முன் - இரயில்வே அமைச்சராக இருந்தபோது 
அரியலூரில் நிகழ்ந்த விபத்துக்குத் 
தார்மீக பொறுப்பேற்று பதவியை விட்டு விலகிய வீரமகன்!..

படிக்காத மேதையும் பண்பின் சிகரமும்
கையில் காசில்லாததால் கங்கையை நீந்திக் கடந்து 
இளமையில் தன் வாழ்க்கையை நடத்தியவர்.
பசுமைப் புரட்சியின் மூலம் இந்தியாவில் 
உணவு உற்பத்திக்கு வித்தவர்.
 

கட்ச் தீபகற்பத்தில் உரிமை கோரி, ஆகஸ்ட் - 1965ல் பாகிஸ்தான் அப்பகுதியில்  படைகளுடன் ஊடுருவியது.  அந்த நேரம் - சீனாவும்,  இந்தியா - தனது பகுதியில் நிறுத்தியுள்ள படைகளை விலக்கிக் கொள்ளாவிட்டால் தனது சீற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்று கொக்கரித்தது. சீனாவின் கூச்சலுக்கு அஞ்சாமல் போர் நடத்திய அஞ்சாநெஞ்சன்.

அப்போது அவர் எழுப்பிய முழக்கமே 
''ஜெய் ஜவான்!.. ஜெய் கிசான்!..''


நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து ரஷ்யாவில் 
அகால மரணம் அடைந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு 
ஒரு வீடு கூட  சொந்தமாகக் கிடையாது. 


கடைசி காலத்தில் தவணை முறையில் வாங்கிய கார் ஒன்றின்  
கடனைத் தான்  - தன் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார். 


தாய்நாட்டின் மீது பெருமதிப்பு கொண்ட தூயவர்களால் 
வழி நடத்தப்பட்ட பெருமை உடையது இந்நாடு.  
மீண்டும் நம் நாடு மகோன்னதமான நிலையை எய்த வேண்டும்.
தன்னலமற்ற தலைவர்களை காலம் நமக்குக் காட்டியருள வேண்டும்.

ஜெய் ஹிந்த்!..
அனைவரும் செயலாற்ற வேண்டும். எதிர்காலத்தை அறிவது நம் நோக்கமல்ல. நிகழ்காலத்தில் நாம் எப்படிச் செயலாற்றுகிறோம் என்பதுதான் முக்கியம். - See more at: http://gandhiworld.in/tamil/action_ta.php#sthash.J8IAM8Dc.dpuf

12 கருத்துகள்:

  1. லால் பகதூர் அவர்களை நினைவுக்கு கொண்டு வரும் நாளும் இதுவே.




    வாழ்த்துக்கள்.

    நன்றி.

    சுப்பு தாத்தா.
    www.wallposterwallposter.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. அன்பின் கருத்துக்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்!.. தங்களின் மேலான வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. உகந்த ஒருநாளில் அருமையான சிறந்த தொகுப்பு!

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி!.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. காந்தி ஜெயந்தியன்று நம் மாபெரும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவு.
    வாழ்த்துக்கள்.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. காந்திஜி கூறியவற்றில் என்னைக் கவர்ந்தது THE SOLE JUSTIFICATION FOR EXISTENCE IS THE SEARCH FOR TRUTH.காந்திஜியின் ஒளியால் லால் பகதூர் சாஸ்திரியும் அடையாளப் படுத்தப் படுகிறார். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகைக்கும் கனிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. அனைவரும் செயலாற்ற வேண்டும்.
    எதிர்காலத்தை அறிவது நமது நோக்கம் அல்ல.
    நிகழ் காலத்தில்
    நாம் எப்படி செயலாற்றுகின்றோம் என்பது தான் முக்கியம்.

    மகத்தான மனிதர்களைப் பற்றி மகத்தான பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். அன்பின் கருத்துரைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..