நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 01, 2023

திருக்காளத்தி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 15
வெள்ளிக்கிழமை

இன்றைய
திருப்புகழ்
திருக்காளத்தி


தனத்தா தத்தத் ... தனதான 
தனத்தா தத்தத் ... தனதான
 
சிரத்தா னத்திற் ... பணியாதே 
செகத்தோர் பற்றைக் ... குறியாதே

வருத்தா மற்றொப் ... பிலதான 
மலர்த்தாள் வைத்தெத் ... தனையாள்வாய்..

நிருத்தா கர்த்தத் ... துவநேசா 
நினைத்தார் சித்தத் ... துறைவோனே

திருத்தாள் முத்தர்க் ... கருள்வோனே 
திருக்கா ளத்திப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


தலை வணங்கி  உன்னைப்
பணியாமல் இருக்கும் யான்  -
உலகின் பந்த பாசங்களில்
மனம் வைத்து வருந்தி விடாமல் 

நிகர் வேறு இல்லாத மலர் போன்ற 
உனது மலரடிகளில் சேர்த்து
ஏமாற்றுக்காரனாகிய என்னையும் 
ஆண்டருள்வாயாக..

(ஈசனைப் போல) நடனம் ஆட வல்லவனே..
சகல  காரியங்களுக்கும் காரண கர்த்தனே..
(அன்பர் தமக்கு) பிரியமானவனே..

 நெஞ்சார நினைப்பவரது
சித்தத்தில் வீற்றிருப்பவனே..

ஜீவன் முக்தரான அடியவர் தமக்கு 
திருவடிப் பேற்றினைத் தந்தருள்பவனே..

திருக்காளத்தியில் 
உறைகின்ற பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா..
***


ஓம் சக்தி சக்தி ஓம்
***