கீழ்வேளூர் ஸ்ரீ வாருலாவிய வனமுலை நாயகி உடனாகிய
ஸ்ரீ அட்சய லிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருக்கின்றோம்....
திருஆரூரில் இருந்து நாகை செல்லும் வழித்தடத்தில் உள்ளது....
கீழ் வேளூரைக் கடந்து தான் சிக்கல் திருக்கோயில்...
விரைவுப் பேருந்துகளைத் தவிர்த்து அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்கின்றன..
தஞ்சை - நாகை இருப்புப்பாதைத் தடம் இவ்வூர் வழியே செல்கிறது...
விரைவு ரயில்களைத் தவிர்த்து
ஏனைய பயணியர் வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன...
![]() |
| விமானத்தில் ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி |
![]() |
| சிவபூஜை செய்கின்ற ஆஞ்சநேயர் |
![]() |
| ஸ்ரீ யக்ஞ புருஷன் |
![]() |
| இலந்தையின் கீழ் சந்நிதி |
![]() |
| வடக்கு பிரகாரத்திலிருந்து ராஜகோபுரங்கள் |
பிள்ளைத்தாய்ச்சி அம்மன் வடிவமைக்கப் பெற்றிருக்கின்றாள்..
மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கோயிலில்
ஸ்வாமி சந்நிதிக்குச் செல்லும் வழியில் தூண் ஒன்றில்
பிள்ளைத் தாய்ச்சிக்கு சிற்பம் உள்ளது...
அந்த சிற்பத்திற்கு நாமே நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யலாம்..
அந்த அபிஷேக எண்ணெய்யை கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் தடவினால் - சுகப்பிரசவம் என்பது நம்பிக்கை...
ஆனால் இங்கு அவ்வாறு முடியாது...
கீழிருந்தபடியே கோபுரத்தை அண்ணாந்து நோக்கி
வணங்கிக் கொள்ள வேண்டியது தான்!...
![]() |
| ஸ்ரீ குபேரன் .. (நன்றி - FB) |
மஹாலக்ஷ்மி - இங்கு இலந்தை மரமாக விளங்குவதனால் -
வடதிசை அதிபதியான குபேரன் இத்தலத்தில் நித்ய வாசம் செய்கின்றான்!.. (இது போதாதா... நமக்கு!..)
![]() |
| ஸ்ரீ வீதி விடங்கர்.. ( நன்றி - FB) |
கீழ்வேளூர் திருக்கோயிலில் ஸ்ரீ விடங்கர் சந்நிதி அமைந்துள்ளது...
![]() |
| ஸ்ரீ பத்ரி விநாயகர் ( நன்றி - FB) |
பத்ரி விநாயகர் என்று விளங்குகின்றார்...
![]() |
| மேற்கிலிருந்து ராஜகோபுரத்தின் தோற்றம் |
![]() |
| வண்ணமயமான சுதை சிற்பங்கள் |
![]() |
| ஸ்ரீ கேடிலியப்பர் (நன்றி - FB ) |
தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
தன்னடைந்த மாணிக்கு அன்றருள் செய்தானை
உடுத்தானைப் புலியதளோடு அக்கும் பாம்பும்
உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
வானவர்கள் கூடிய அத்தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூர் ஆளுங்கோவைக்
கேடிலியை நாடும் அவர் கேடிலாரே..(6/67)
-: அப்பர் பெருமான் :-
முற்பிறப்பினை உணர்த்தும் திருக்கோயிலை வலம் வந்து
கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்கி நிற்கின்றோம்...
அளவிடற்கரிய கருணையுடன் அஞ்சு வட்டத்து அம்மை
காத்தருள்கின்றாள்!..
வாருலாவிய வனமுலையாளும் அட்சயலிங்கேஸ்வரரும்
நாளும் நாளும் நல்லருள் பொழிகின்றார்கள்!...
தலைக்கு மேல் கைகள் குவிகின்றன..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ













