நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
செவ்வாய்க்கிழமை
நவீன கல்வி முறையினால்
நாம் இழந்த நலங்கள்
**
கொன்றைவேந்தன்
கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே..
1.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
[ஈயார் = பிறக்குக் கொடாதவர்]
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
[உண்டி = உணவு]
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்
[எண் = கணிதம்; எழுத்து = மொழி]
8. ஏவா மக்கள் மூவா மருந்து
[ஏவு = வேலை செய்யென்று கட்டளையிடுதல்;
மூவா = மூப்படையாத ., வயதாகாத பெற்றோர் ]
9. ஐயம் புகினும் செய்வன செய் [ஐயம் = பிச்சை]
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு [ஔவியம் = பொறாமை]
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு [அஃகம் = தானியம்; சிக்கென = சிக்கனமாக; வீண்செய்யாமல் தக்க வைக்குமாறு]
ஆத்திசூடி
ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
1. அறம் செய்ய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புர வொழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அஃகம் சுருக்கேல்
நன்றி
விக்கி
ஔவையார் திருவடிகள் போற்றி
***


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..