இன்றைய பதிவிலும் சில படங்கள்...
அபுதாபி பேருந்து நிலையம்...
மிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றது..
பேருந்துகள் குறிக்கப்பட்ட நேரத்தில் வருகின்றன.. செல்கின்றன..
பேருந்துகளில் டிக்கெட் வழங்கப்படுவதில்லை...
பயணத்திற்காக பல்வேறு மதிப்புகளில் வழங்கப்படும் மின்னணு அட்டைகளை முன்னதாகவே வாங்கிக் கொள்ள வேண்டும்..
குறிக்கப்பட்ட கட்டணம் என்பதால் -
எந்தப் பேருந்திலும் எவ்வளவு தூரமும் பயணிக்கலாம்...
இரண்டு வாசல்களிலும் மின்னணு அட்டையைப் பதிவு செய்து கொள்வதற்கான தொடுகைப் பேழைகள் உள்ளன (Sensor Box/Bio Metric)...
அட்டையின் மதிப்பு தீர்ந்து விட்டால் -
மீண்டும் அதில் பண மதிப்பை ஏற்றிக் கொள்ளலாம்...
பேருந்துகளின் சுத்தம் சொல்லத்தக்கது...
பேருந்து நிலையத்தின் வாசலில் மட்டுமல்லாது
நகரின் பல இடங்களிலும் வேப்ப மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன..
![]() |
| வழித்தடம் குறித்த விவரங்கள் |
நகரில் எல்லா இடங்களிலும் நெருங்கி வரும் பெருநாளை நோக்கி
மின்னலங்காரம் செய்யப்பட்டிருந்தது....
அதீத வெளிச்சத்தில் சில படங்கள் சரியாக அமையவில்லை..
இருப்பினும் ஒரு சில...
![]() |
| களைப்பு மேலிட்டாலும் காசு போட்டால் தான் குடிநீர்.. |
இன்று அரபு நாடெங்கும்
ஈகைத்திருநாள் கொண்டாடப்படுகின்றது...
![]() |
| Sheikh Zayed Grand Mosque., AbuDhabi.. (Thanks - Google) |
அன்பும் அறநெறியும் எங்கெங்கும்
தழைத்து ஓங்குவதாக..
வாழ்க நலம்..
ஃஃஃ



















