நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 07, 2015

சோலைவனச் சுற்றுலா 2

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகராகிய அபுதாபியில் இருந்த நாட்களில் - ஆங்கே கண்டு மகிழ்ந்த இடங்களை -

அப்போதே பதிவில் வழங்கிட நினைத்தேன்..

ஆனால் - அவ்வாறு செய்திட இயலவில்லை..

ஆயினும், முயற்சியில் தளர்வதாக இல்லை..

Burj Khalifa
இதோ,
தங்களுக்காக - துபை மால்!.. (Dubai Mall)

உலகின் பிரம்மாண்ட வணிக வளாகம் இது!.. - என்று அங்குள்ளோர் சொன்னாலும்,

உலகின் பிரம்மாண்ட வணிக வளாகங்களுள் இதுவும் ஒன்று!.. - என்றுதான் விக்கிபீடியா கூறுகின்றது..


இந்த வளாகத்தினுள் நுழையும் முன் எங்கள் காரினை நிறுத்துவதற்கு மூன்றாவது தளத்தில் தான் இடம் கிடைத்தது..

சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காகவே - பெரும் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது - துபை வணிக வளாகம்..

22 திரையரங்குகள், மருத்துவ வளாகம், வங்கிகள் இவற்றுடன்1200 கடைகள் இங்கே இருக்கின்றனவாம்..

நான்கு தளங்களாக அமைந்துள்ள வணிக வளாகத்தில் - பிரம்மாண்டம் தான் எங்கெங்கும்..

சுறா மற்றும் திருக்கை இவற்றுடன் இன்னும் பலவகை மீன்களும் நீந்திக் களிக்கும் -  Under Water World..

மிக - மிகப் பெரிதான மீன் காட்சியகம்..

துல்லியமாக விளங்கும் மீன் காட்சியகத்தின் கண்ணாடியும் மிகப் பிரம்மாண்டமானது..

கீழ் தளத்தில் ஐஸ் ஸ்கேட்டிங் தளம் அழகாக அமைந்துள்ளது..

ஸ்கேட்டிங் பழகியவர்கள் - வயது வித்தியாசமின்றி சந்தோஷத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்..

அந்தப்பக்கமாக - அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட டைனோசாரின் எலும்புக்கூடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


கீழ்தளத்தில் - இரவு எட்டு மணியளவில் அழகுப் பெண்களின் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி (Fashion Parade) என்று குறிக்கப்பட்டிருந்தது..

அதை முன்னிட்டு - அங்குமிங்குமாக, சர்வதேச அழகிகள் நடைபயின்று கொண்டிருந்தனர்.. ஆயினும்,

அடுத்து வேறு வேலை எங்களுக்கு இருந்ததால் - அழகிகளின் அணிவகுப்பைப் பார்க்க முடியவில்லை..


துபை மாலின் எதிரில் பெரிதான தடாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தான் வண்ண மயமான துபை நீரூற்று (Dubai Fountain)..

இந்த நீரூற்றின் கரையில் தான்  - 160 தளங்களுடன் வானுயர விளங்கும் -
புர்ஜ் கலீஃபா.. (Burj Khalifa)..

Thanks - Google.,
மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரையில் -
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இசையுடன் கூடி வண்ண மயமாக நீரூற்று மகிழ்ச்சியூட்டுகின்றது..


Dubai Fountain
நீரூற்றிலிருந்து அதிவேகத்துடன் நீர் பீய்ச்சப்படுவது - உலகிலேயே இங்கு தான்..

நீரூற்றிலிருந்து பீய்ச்சப்படும் நீரின் உயரம் 500 அடி..


நீரூற்றின் இக்கரையில் - அரபு பாரம்பர்ய அங்காடி (Souk Al Bahar) வளாகமும் அமைந்துள்ளது..


ஒவ்வொரு தளத்திலும் பல இடங்களில் மின்னணு தகவல் - தொடு திரைகள் உள்ளன..

அதன் மூலம் பற்பல தகவல்களையும் அறிந்து கொள்ளமுடிகின்றது..

பன்னாட்டு உணவகங்களும் இங்கே இருக்கின்றன..

மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டு - ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதில் முன்னிலையில் இருப்பது - துபை மால்!..

துபை வணிக வளாகத்தில் எடுக்கப்பட்ட படங்களுள் சிலவற்றை -
இன்றைய பதிவில் பகிர்வதில் மகிழ்ச்சி..









மீன் காட்சியகம்
25 அடி உயரமுடைய டைனோசரின் எலும்புக்கூடு
நீருற்றின் இசை நடனத்தைக் காணொளியாக்கிக் கொண்டு வந்தேன்..
அதன் அளவு அதிகமாக இருப்பதால் பதிவேற்ற இயலவில்லை..

மேலும், இங்கே இணையமும் சரியாக ஒத்துழைக்கவில்லை..

பல்வேறு சிறப்பம்சங்கள்..
ஆனாலும் - நான் முழுதுமாகச் சுற்றிப் பார்க்கவில்லை..

அடுத்த ஆண்டு மறுபடியும் வந்து பார்ப்பதற்கு இடங்கள் வேண்டும் அல்லவா!..

இன்னும் - சில பதிவுகளுக்கு தகவல்கள் உள்ளன..

அவற்றுடன் அடுத்து வரும் பதிவுகளில் சந்திக்கின்றேன்..

வாழ்க நலம்!..
* * *