நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 08, 2014

மகளிர் தினம்

இன்று மார்ச் எட்டாம் நாள்.

சர்வதேச மகளிர் தினம்.

இப்பூவுலகில் காலங்கள் தோறும் 
போற்றி வணங்கப்பட வேண்டிய புனிதம் 
பெண்மை!..


எந்நேரமும் இயங்கிக் கொண்டேயிருப்பது - சக்தி!..

அது சூட்சுமம் !.. கண்களுக்குப் புலனாகாதது என்பர். 

கண்களுக்குப் புலனாக வேண்டுமெனில்  - எதிர் வந்து நிற்பது - 

பெண்மை!.. 
அதுவே வாய்மை!.. அதுவே தூய்மை!.. அதுவே தாய்மை!.. 


''..என் முகத்தில் ஆசிட் வீசியபோது சிதைந்தது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும் தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்ல!..''

அந்த இளம்பெண் பேசியபோது மேடையிலிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர்.

ஆனால் - கண்ணீரைப் பெறவோ கருணையைப்பெறவோ அவர் பேசவில்லை.

அவர் பேசிய இடம் - அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாண சபை.

அங்கே  வெளி விவகாரத்துறை சார்பில் நடந்த மாபெரும் விழாவில், நாட்டின் பிரமுகர்கள் பலரும் கூடியிருந்த மேடையில்,

இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண் என சிறப்பிக்கப்பட்டு அமெரிக்காவின் முதல் பெண்மணி மைக்கேல் ஒபாமா கையால் விருது வழங்கப் பெற்றார்.

இத்தகைய விருதினைப் பெற்றவர் - லக்ஷ்மி.

புதுதில்லியைச் சேர்ந்த லக்ஷ்மி 2005 ஆம் ஆண்டு, பள்ளிக்குச் செல்லும்போது - அமிலத் தாக்குதலுக்கு உள்ளானார். அப்போது லக்ஷ்மியின் வயது பதினாறு!..

அமிலம் வீசியவன் - தந்தை வயதுடையவன்.  சொந்தக்காரனும் கூட!.. தன் மகள் போன்ற லக்ஷ்மியின் மீது காமம் கொண்ட கொடூரன்!..

தீவிர சிகிச்சை - உயிரை மட்டும் காத்தது. அதன்பின், முடங்கிக் கிடக்காமல் வீறு கொண்டு எழுந்த லக்ஷ்மி - 

அமில வீச்சின் கொடூரம் - எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக -

கத்தியை விட,  துப்பாக்கியை விட - கொடூரமான  அமிலத்தை யாரும் எளிதாக வாங்கலாம்  -  என்ற நிலை மாறவேண்டும் என்பதற்காக  -

இருபத்தேழாயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி - உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.  

அதன் அடிப்படையில் நீதிமன்றம்,  இது பற்றிய ஒழுங்கு நடவடிக்கைக்கு மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

லக்ஷ்மி  - இனியும் இப்படி ஒரு சம்பவம் நம் நாட்டில் நடந்து விடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


ஆனாலும்  -  சென்ற ஆண்டு விநோதினி பலியானாள்!.. 

காரணம் - பாழாய்ப் போன ஒருதலைக் காதலும்.. அமிலமும்!..

இதையெல்லாம் பார்த்த பிறகுதான் இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண் என்ற விருதினை லக்ஷ்மிக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.  


அவர்கள் -தேர்தலை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தை முன் நிறுத்துபவர்கள். 
 
வாக்குச் சாவடியை கைப்பற்றுவது, வாக்களிக்க வருபவர்களைத் தாக்குவது, வாக்குப் பெட்டியை உடைத்துத் தூளாக்குவது, வாக்குச்சாவடியை தீ வைத்துக் கொளுத்துவது என்பது இவர்களுக்கு பழகிப்போன ஒன்று.

தேர்தலுக்கு ஆதரவானவர்களை அடிப்பது உதைப்பது கடத்திச் செல்வது கொடூரமாய் கொல்வது - என்பதெல்லாம் இவர்களுக்கு சர்வ சாதாரணம் .

அத்தகையவர்களின் பிடிக்குள் சிக்கிக் கிடக்கும் மாநிலம் சட்டீஸ்கர். 

அங்கே - ஐம்பது சதவீதம் அடர்ந்த காடுகள் நிறைந்த  மாவட்டம் - கான்கேர் . 

இந்த மாவட்டத்தில் மிகப் பெரிய விஷயம் - தேர்தல் நடத்துவது!.. 

ஆனால் - வன்முறையாளர்களுக்கு சிறிதும் அஞ்சாமல், துணிச்சலுடன் - அடர்ந்த காட்டுக்குள் சென்று, பழங்குடி மக்களை அணுகி அவர்களுடன்  பேசி அவர்களுடைய அச்சத்தைப் போக்கி வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்தார் - கான்கேர் மாவட்டத்தின் ஆட்சியர்.

என்ன ஆச்சர்யம்!.. பதிவாகிய வாக்குகள் 78 சதவீதம் . இது கடந்த தேர்தலை விட 13 %  அதிகம். 

இதனை செய்து முடிக்க அவருக்குத் துணை நின்றவை - அவரது தைரியமும் - பழங்குடி மக்களின் கவுண்டி மொழியும், மாநில மொழியான சத்தீஷ்கரியும் ஹிந்தியும்!.. 

ஜனநாயக பாதைக்கு மக்கள் மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்திற்கு பக்கபலமாக இருந்து புதிய சாதனை படைத்த அவருக்கு,   

கடந்த ஜனவரி 25 வாக்களர் தினத்தன்று, டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் விருதும், ஒரு லட்சரூபாய் பணமுடிப்பும் வழங்கி, குடியரசுத் தலைவர் கௌரவப்படுத்தி உள்ளார். அவர் - திருமதி.அலர்மேல் மங்கை. IAS.,


கோவையைச் சேர்ந்த இவரது கணவர் திரு. அன்பழகன் IAS., இவரும் மாவட்ட ஆட்சியர். அதே சதீஸ்கர் மாநிலத்தில் - ஜாங்கீர் மாவட்டத்தில்!.. 


''..எனது படிப்பை விட நான் சார்ந்துள்ள தமிழ்ச் சமுதாயம் முக்கியமானது. இந்த இனிய சமுதாயம் மதுவிற்கு  அடிமையாகும் கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை!..'' 


இப்படிக் கூறியவர் - மதுரை சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவி - வீரமங்கை நந்தினி!.. 

மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் - தன் தந்தை ஆனந்தன், தங்கை ரஞ்சனாவுடன் வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் மதுவிற்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தியவர்.  அவரது நெடிய போராட்டத்தினால் - உடல் நலம் பாதிக்கப்பட்டது . ஆயினும் மனஉறுதி கனலாக ஜொலிக்கின்றது.


நன்றி :- பதிவில் துணை நின்றவை - தினமணி, தினமலர் - வழங்கிய செய்திகள்.

இந்தமார்ச்- 5 அன்று  FaceBook- ல் அவள் விகடன் வெளியிட்ட செய்தி!..

சில நாட்களுக்கு முன், தேனி - அரசு மருத்துவக் கல்லூரி அருகே,  முட்புதருக்குள் வீசப்பட்ட பெண் குழந்தையை  - மீட்ட மருத்துவமனை ஊழியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில்  இன்குபேட்டரில் பாதுகாத்தனர். 

குழந்தை பசும்பால் குடிக்கவில்லை. அதன் உடல்நிலை மோசமானது. 

தகவல் அறிந்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராதா, அங்கிருந்த பாலூட்டும் தாய்மார்களிடம் - இது குறித்து பேசினார்.  


''இந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியுமா?..''  - எனக் கேட்டார். 

அதைக்கேட்டு - அங்கிருந்த அனைவரும் மகிழ்வுடன் முன்வந்தனர். 

குழந்தைக்கு பசி எடுக்கும்போது, ஒவ்வொரு தாயும் பாலூட்டி வருகின்றனர். குழந்தையும் தாய்ப்பால் குடித்து உடல் தேறியுள்ளது.    

தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களுக்கு நன்றி தெரிவிப்பதாக - டாக்டர் ராதா கூறினார். 

நன்றி எனக் கூறுவதுடன் தாய்மையின் திசை நோக்கிக் கும்பிடுவோம்!..


எளிதாய்க் கிடைத்ததா - மகளிர் தினம்!...  

அதனை - அன்புச் சகோதரர் திரு. கரந்தை ஜெயக்குமார் - மனம் நெகிழ தனது தளத்தில் விவரிக்கின்றார்.  இங்கே படியுங்கள்!..

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல 
மாதவம் செய்திட வேண்டுமம்மா!..

மங்கையராய்ப் பிறந்த மாதவத்தோர் அனைவருக்கும் 
இந்த தருணத்தில் என் வணக்கங்கள்!..


கண்முன்னே காட்சிகள் காணக் கிடைக்கின்றன!..
இருப்பினும் -

விநோதினி, வித்யா - என   அமிலத்தால் பலியாகினர். தில்லியில் மருத்துவ மாணவி,  சென்னையில் உமாமகேஸ்வரி போன்றோர் - வன்கொடுமையால் பலியாகினர். 

தனது மாணவனின் கரங்களால் தன்னுயிர் துறந்தார் ஆசிரியை உமாமகேஸ்வரி. 

இத்தகைய பல இழப்புகளுக்குப் பிறகுதான்  - 

வீட்டில் , அலுவலகத்தில் , பொது இடத்தில்,  பள்ளி, கல்லூரி - என பல நிலைகளில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு குறித்து  பேசப்படுகிறது.  

விடிவு காலம் தான் எப்போது எனத் தெரியவில்லை!

எல்லாம் வல்ல இறைசக்தி  
இனியதொரு விடியலை நோக்கி 
நம்மை வழி நடத்துவதாக!..

பெண்மையின் திருவடிகளில் 
தலை வைத்து வணங்குகின்றேன்!..
ஓம் சக்தி ஓம்!..

22 கருத்துகள்:

  1. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி, விநோதினி ஆகியோரை நினைவு கூர்ந்தும்

    பழங்குடி மக்களைக் கவர்ந்த மாவட்ட ஆட்சியர் அலர்மேல் மங்கை, மதுவுக்கு எதிரான நந்தினி, தாய்ப்பால் முக்கியத்துவத்தை உணர்த்திய டாக்டர் ராதா – ஆகியோரைப் பாராட்டியும்

    எழுதிய சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூவுக்கு நன்றி!
    உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது மேலான வாழ்த்துகள் மனதில் நிறைகின்றன.
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. அருமையான கருத்துகளுடன் சிறப்பான பகிர்வு ஐயா...

    சர்வ தேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது அன்பான வாழ்த்துகள் மனதில் நிறைகின்றன.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் - மிக்க நன்றி!..

      நீக்கு
  3. அருமையான பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. எல்லாம் வல்ல இறைசக்தி
    இனியதொரு விடியலை நோக்கி
    நம்மை வழி நடத்துவதாக!..

    மகளிர் தினத்தன்று சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.

      நீக்கு
  5. அமில வீச்சுகள் இங்கே மட்டுமல்ல ,அமெரிக்காவிலும் உண்டு என்பதை அறிய உலக மகளிர் தினத்தின் முக்கியத்துவம் புரிகிறது !
    அருமையாய் தொகுத்து தந்து உள்ளீர்கள் .பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.. தங்கள் வரவு நல்வரவாகுக!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  6. தைரியம், சாகசம், துணிவு, உழைப்பு என்ற பல நிலைகளில் தம் முத்திரையைப் பதித்துள்ளவர்களைப் பற்றி தாங்கள் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. தகவலைத் தொகுத்த விதமும், உரிய புகைப்படங்களைத் தெரிவு செய்த விதமும் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கு நன்றி..
      தங்களுடைய இனிய கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  7. அருமையான கருத்துக்களுடன் கூடிய சிறப்பான பதிவு ஐயா.
    என் பதிவினையும் சுட்டிக்காட்டியமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி..

      நீக்கு
  8. மிகச் சிறப்பான பகிர்வு...

    அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், தொடர்ந்து பாதிக்கப்படும் பெண்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி லக்ஷ்மி...... அவரது முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      அனைவரிடமும் நல்லெண்ணங்கள் வளர்ந்து,
      பெண்மை - போற்றப்பட வேண்டும்.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  9. தாமதமான வருகை எனினும் சிறந்த பதிவு பெண்களை பற்றிய பெருமைகளை எடுத்துரைத்து மேம்படுத்துவதும் நல்வழிப் படுத்துவதும் சிறப்பே . நன்றி வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  10. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sir வணக்கம் நான் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட பென் திருமணம் செய்துகொள்ளலாம் விரும்புகிறேன், அவர்கள் details yapati கலைக் பனறது தெறியல உங்களுக்கு தெரிந்தவங்க இருந்தா சொல்லுங்க my name prabath location neyveli my Facebook id:prabath don (message panungka)

      நீக்கு
  11. அன்பின் யாதவன் நம்பி..
    இன்றைய வலைச்சரத்தின் அறிமுகம் பற்றி தகவல் அளித்தமைக்கு நன்றி. தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  12. sir வணக்கம் நான் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட பென் திருமணம் செய்துகொள்ளலாம் விரும்புகிறேன், அவர்கள் details yapati கலைக் பனறது தெறியல உங்களுக்கு தெரிந்தவங்க இருந்தா சொல்லுங்க my name prabath location neyveli my Facebook id:prabath don (message panungka)

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..