இன்று காந்தி ஜயந்தி!..
நான் பெறுவதற்கு விரும்பும் ஒரே நல்லொழுக்கம்
உண்மையும் அஹிம்சையும் தான்..
: மகாத்மா :-
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். - See more at: http://gandhiworld.in/tamil/quotessan.html#sthash.Us4mFTgr.dpuf

தன்னம்பிக்கையும் அடக்கமும் ஒருவனிடம்
இருக்குமானால் அவன் வாழ்வு தித்திக்கும்..
-: மகாத்மா :-
காந்திஜி - நேதாஜி - வல்லபபாய் படேல்
|
எளிமையான வாழ்க்கை என்பதிலிருந்து
மாறுகின்ற மனிதனுக்கு
தேவைகள் அதிகரித்து விடும்
மாமனிதர்
லால்பகதூர் சாஸ்திரி அவர்களின்
பிறந்த நாள் - இன்று..
(02.10.1904 - 11.01.1966)
|
மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்..
சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்..
ஓடக்காரனுக்குக் கொடுக்க காசில்லாததால்
கங்கையை நீந்திக் கடக்கும் அளவுக்கு
வாழ்வில் வறுமையைச் சந்தித்தவர்..
தாய் மாமன் அளித்த ஆதரவினால்
காசி வித்யாசாலாவில் கல்வி கற்று
சாஸ்திரி எனும் பட்டம் பெற்றவர்..
மகாத்மாவின் உரைகளினால் கவரப்பட்டு
சுதந்திர வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்டவர்..
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு
ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில்
1951ல் இரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்..
1956 நவம்பர் 23
அரியலூருக்கு அருகில் நிகழ்ந்த
ரயில் விபத்துக்குத் தார்மீக பொறுப்பேற்று
பதவியை விட்டு விலகிய வீரமகன்!..
படிக்காத மேதையும் பண்பின் சிகரமும்
|
நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து ரஷ்யாவில்
அகால மரணம் அடைந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு
ஒரு வீடு கூட சொந்தமாகக் கிடையாது.
காலம் முழுதும் வாடகை வீட்டிலேயே
வாழ்ந்து முடித்தவர்..
தன் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றதெல்லாம்
தவணை முறையில் வாங்கிய கார் ஒன்றின்
கடன் தொகை மட்டுமே!...
***
தியாக தீபம்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்
நினைவு நாள் இன்று..
15 ஜூலை1903 .. 02 அக்டோபர் 1975
|
அறியாமையும் வறுமையும் போனாலன்றி
நாடு முன்னேறியதாகச் சொல்லமுடியாது..
-: பெருந்தலைவர் :-
தமிழகத்தை முன்னேற்றிய சிறப்புறு முதல்வர்..
கல்விக்கண் கொடுத்த கர்மவீரர்..
அனைவரும் செயலாற்ற வேண்டும். எதிர்காலத்தை அறிவது நம் நோக்கமல்ல. நிகழ்காலத்தில் நாம் எப்படிச் செயலாற்றுகிறோம் என்பதுதான் முக்கியம். - See more at: http://gandhiworld.in/tamil/action_ta.php#sthash.J8IAM8Dc.dpuf
பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது,
அவரின் கை இருப்பாக இருந்தது -
நூறு ரூபாயும் சில்லறைக் காசுகள் மட்டுமே!..
தாய் சிவகாமி அம்மாளுடன்
|
தாய்க்குத் தலை மகனாகப் பிறந்தும் தாய் முகத்தினைப் பாராமல்
தாய் நாட்டின் நலனையே சிந்தித்த தங்க மகன்.
![]() |
சிவகாமி அம்மையாருடன் லால்பகதூர் சாஸ்திரி
|
இந்திரா - டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன்
|
எளியவரிடம் இரங்கி குறை கேட்கும் ஏந்தல்
|
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. - காமராஜர்
|
மக்களுடன் மக்களாக விளங்கிய பெருந்தலைவர்
|
அரசியலில் அன்றிருந்தவர்கள் காமராஜரின் நிறம் குறித்து
இகழ்வதில் - மகிழ்ந்தனர்.
காமராஜரின் மீது வாரி இறைக்கப்பட்ட
அவதூறுகளுக்கு அளவில்லை.
அதில் முக்கியமான கோஷம் -
ஏழைப்பங்காளரின் ஏழடுக்கு மாளிகையைப் பாரீர்!..
என்பது தான்!..
காமராஜர் வாழ்ந்த வாடகை வீடு
|
ஆனால் - அவர் வாடகை வீட்டில் வாழ்ந்தது பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியாமல் போனது தான் கொடுமை!..