நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 12, 2026

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 27
புதன்கிழமை


இன்று ஆடி அமாவாசை


அப்பர் ஸ்வாமிகள் 
திரு ஐயாற்றில்  கயிலாயக் காட்சி கண்ட நாள்..


கயிலாயக் காட்சி கண்டபோது
ஸ்வாமிகள் பாடித் துதித்த திருப்பதிகத்தில் இருந்து சில பாடல்கள்..

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறி யாதன கண்டேன்.. 4/3/1

ஏடு மதிக்கண்ணி யானை ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆடல் அமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்.. 5

திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொல் எந்தை எனக்கினி என்னா வருவேன்
அங்கிள மங்கையர் ஆடும் ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்.. 10

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய
***

2 கருத்துகள்:

  1. திருப்பாதம் கண்ட திருமகனார் புண்ணியம் செய்தவர். 

    பேறு. 

    அடியவர் தாள் வணங்கினால் ஆதிசிவன் தாள் பணிவதற்கு சமம்.  ஆடி அமாவாசை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடி அமாவாசை வாழ்த்துகள்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..