நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 13
புதன் கிழமை
தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழரின் சிலை 1972 ஏப்ரல் (தமிழ்ப் புத்தாண்டு) நாளில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் வெகு சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது..
அப்போதிருந்து மன்னரின் சிலை
தகரக் குடையின்
கீழாகத் தான் இருக்கின்றது..
வெண் கொற்றக் குடையின் கீழிருந்து
மும்முடி கொண்ட மன்னனுக்கு
தகரக் குடை தான் தமிழனின் பரிசு..
திறப்பு விழா கல்வெட்டும் பீடத்தில் உள்ளது.. என்ன காரணமோ தமிழ் ஆண்டின் பெயர் குறிப்பிடப்படவில்லை..
கீழுள்ள கல்வெட்டின் வாசகங்களைப் படித்துப்
புரிந்து கொள்ளவும்..
இன்றுவரை பற்பல மாற்றங்கள் தமிழ்நாட்டிலும் தஞ்சையிலும் நடந்திருக்கின்றன..
ஆனால் இச்சிலையின் நிலையில் மட்டும் இன்றுவரை மாற்றம் ஏற்படவே இல்லை..
பூங்கா அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும்
காற்றோடு போயிற்று..
ஒரு புல்லும் முளைக்காமல் வறணடு கிடக்கும் காட்சி
நீரூற்றுக்காக அமைக்கப்பட்ட தொட்டி
பெரும் பொருட்செலவில் நம்மTHANJAVUR என்றிருப்பதைக் காணும் போது
இங்கே தமிழுக்குப் பல்கலைக்கழகம் இருப்பதும் நினைவுக்கு வந்தது..
புதிதாக வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும்
பழைய பேருந்து நிலையத்திற்குள்
தாறுமாறான ஒரு காட்சி..
பதிவின் பகுதி
இரண்டு
தஞ்சை பெரிய கோயில்
திருவிழாவின் காட்சிகள்
நன்றி :
நம்ம தஞ்சாவூரு நண்பர்கள்,
SFA Studios
***
ராஜராஜன் சிலை திறப்பின்போதும், அந்த இரத்தில் நிகழ்ந்த பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின்போதும் நான் தஞ்சையில்தான் வசித்தேன். செம கூட்டத்தில் மாட்டி வேஷ்டி இழந்தேன்!
பதிலளிநீக்கு//அந்த இரத்தில் //
நீக்குஅந்த நேரத்தில்
சோழன் சிலை திறப்பு விழாவின் போது
நீக்குநான் கிராமத்தில் இருந்தேன்..
அன்பின் வருகையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
பாவம் ராஜராஜன். பகுத்தறிவு ஆட்சியாளர்களின் மூட நம்பிக்கையால் தொடப்படாமல் நிற்கிறார்.
பதிலளிநீக்குஎன்ன செய்வது?..
நீக்குஎல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
திருவள்ளுவர் தியேட்டர் இன்னும் இருக்குரியதா? அதை ஒட்டித்தான் அப்போது மத்திய பேருந்து நிலையம் அமைந்திருந்தது. அதன் பின் பக்க வரிசையில் வாசவி கஃபே இருந்தது. காசு போட்டு பாட்டு கேட்கும் ஒரு டீக்கடையும் அப்போது வந்திருந்தது. பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தால் ஆர்ச்சத் தாண்டியதும் மங்களாம்பிகா இருந்ததது. அதன் வழி சென்றால் ஞானம் தியேட்டர் வரும். ஜூபிடரும் அங்குதான் இருந்ததாக நினைவு! மேலும் சென்றால் ராஜா கலையரங்கம் தியேட்டர் வரும். அங்கிருந்து ஒரு சந்து வழியாக யாகப்பாவை அடைந்து விடலாம்!
பதிலளிநீக்கு// திருவள்ளுவர் தியேட்டர் இன்னும் இருக்குரியதா? //
நீக்குஇருக்கிறதா?
//ஆர்ச்சத் தாண்டியதும்//
ஆர்ச்சைத் தாண்டியதும்
திருவள்ளுவர் தியேட்டர் முற்றாக இடித்துத் தள்ளப்பட்டு அந்த இடத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகின்றது..
நீக்குஞானம் தியேட்டர் - ஹோட்டலாக மாறி பல வருடங்கள் ஆகின்றன..
மற்ற தியேட்டர்கள் பற்றித் தெரிய வில்லை.. ஒருநாளைக்கு சென்று எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்...
ராஜராஜன் சிலையை இன்னும் கொஞ்ச தூரத்தில் நின்று தகர கொட்டாய் மூடிய முழு நிலையில் படமொன்று எடுத்திருக்கலாம்!
பதிலளிநீக்குவெயிலாக இருந்தபோது ம் செருப்பைக் கழற்றி வைத்து விட்டு தான் சிலை அருகே சென்றேன்.. அந்த இடத்தின் அவலத்தைக் கண்டதும் மனம் வெதும்பி விட்டது.. இப்படி ஒரு எண்ணம் தோன்றவில்லை..
நீக்குமறுமுறை முயற்சிக்கிறேன்..
தஞ்சை படங்கள் நன்றாக இருக்கிறது. பூங்கா அமைத்தால் நன்றாக இருக்கும். திருவிழா படங்கள் காணொளி அருமை.
பதிலளிநீக்குஇந்த இடத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
திராவிட ஆட்சியாளர்களுக்குத் தமிழ் மன்னர்களையே பிடிக்காதே! ராசியில்லாதவங்கனு ஒதுக்கி இருப்பாங்க. அது சரி, இத்தனை வருஷங்களாகத் தஞ்சை அரசராவது இதை எல்லாம் செய்திருக்கலாமே! அவர் தானே கோயிலின் அறங்காவலர்?
பதிலளிநீக்கு// தஞ்சை அரசராவது இதை எல்லாம் செய்திருக்கலாமே.. //
நீக்குஅவர் என்ன செய்யமுடியும்?. பெயருக்குத் தானே..
உள்ளாட்சி அமைப்புகள் தான் முயற்சிக்க வேண்டும்..
அது இப்போது நடக்காது..
அன்பின் வருகையும் கருத்தும் நன்றியக்கா..
நலம் வாழ்க..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. ராஜராஜசோழனின் திருவுருவம் நன்றாக உள்ளது நங்கள் சொல்வது போல் அங்கு பூங்கா அமைத்து அவர்தம் உருவத்தையும் செப்பனிட்டு பாதுகாத்தால் நன்றாக இருக்கும். அது நம் கடமையென்று எவரும் உணரவில்லையே..
கோவில் திருவிழா படங்கள் நன்றாக உள்ளது. காணொளியில் சுவாமியை தரிசித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// நம் கடமையென்று எவரும் உணரவில்லை.. //
நீக்குஇதுதான் அடிப்படை பிரச்னை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..நன்றி..
நலம் வாழ்க..
நேற்றே கருத்து அடித்து போகவே இல்லை போல..உங்களுக்கு வரவில்லை என்பது தெரிகிறது, துரை அண்ணா.
பதிலளிநீக்குசிலை ரொம்ப அழகாக இருக்கு. பூங்கா, நீரூற்று எல்லாம் வந்தால் எவ்வளவு அழகா இருக்கும்! நம்ம தஞ்சை, நம்ம பங்களூருன்னு சொல்லிக்குவாங்க ஆனா உள்ள போய் பாத்தாதான் தெரியும்!! எந்தப் பேருந்து நிலையமுமே நல்ல ஒழுங்குமுறையோடு இல்லை என்றே தோன்றுகிறது. வளர்ச்சி என்று சொல்றாங்க ஆனால் அது நல்ல முறையில் இல்லையே
கீதா
படங்கள் அழகா இருக்கு.
// நம்ம தஞ்சை, நம்ம பங்களூருன்னு சொல்லிக்குவாங்க ஆனா உள்ள போய் பாத்தாதான் தெரியும்.. //
நீக்குஉண்மை தான்.. எல்லாமே வெளி வேஷம்..
ஒன்றும் சொல்வதற்கு இல்லை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
நலம் வாழ்க..
பழைய வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடங்களை பேணிக்காப்பதில் எமது நாடு உட்பட எல்லா அரசாங்கங்களுமே தவறு இழைக்கின்றன.
பதிலளிநீக்குமனதுக்கு வருத்தமான விஷயங்கள்.