நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 12
செவ்வாய்க்கிழமை
பெரிய கோயிலில் எடுக்கப்பட்ட படங்கள் இப்போதைக்கு இந்தப் பதிவுடன் நிறைவு பெறுகின்றன..
அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் -
கால சம்ஹார மூர்த்தி, அம்பிகையின் சிவ பூஜை, ஆரத் தழுவிய அம்பிகை, புலிக்கு அஞ்சிய வேடன் - எனும் புராணங்கள் நான்கு சுதை சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன..
காலக் கொடுமையால் இந்த சிற்பங்கள் மெல்ல மெல்ல
சிதைந்து கொண்டிருக்கின்றன..
இவற்றை மீண்டும்
பொலிவுடன் சீரமைப்பதற்கு எந்த மாதிரியான சட்டங்கள் தடையாக இருக்கின்றனவோ தெரியவில்லை..
கைத் தொலைபேசியின் மூன்றாவது கண் தாறுமாறாகி விட்டது..
இந்நிலையில் -
சுதை சிற்பங்களை இன்னும் அழகாக எடுத்திருக்கலாம் - என்ற எண்ணம் மனதில் எழுகின்றது..
ஸ்ரீ விநாயகர் |
ஸ்ரீ வில்லேந்திய வேலன் |
ஸ்ரீ வீரபத்ரர் |
ஸ்ரீ வயிரவர் |
முருகன் சந்நிதியின் சிற்பங்களையும் வேறு சில கோணங்களையும் மறுபடி படம் பிடிக்க வேண்டும்..
மீண்டும் ஒரு நல்ல பொழுதைத் தந்தருள எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்..
ராஜ கோபுரத்தைக் கடந்த நிலையில் காலணிகள் காப்பகம்..
அங்கே ஒரு பையை எடுத்து அதற்குள் செருப்பைப் போட்டு அங்கிருக்கும் நூற்றுக் கணக்கான கொக்கிகளில் ஏதாவதொன்றில் மாட்டி விட்டு அதற்கான எண்ணைச் சொன்னால் சிறு தாள் ஒன்றில் எழுதிக் கொடுக்கின்றார் ஒருவர்.. அதற்கு மூன்று ரூபாய்.. சுய சேவை மாதிரி இருக்கின்றது..
செருப்பு வைத்த பை மாறிப் போய் விட்டால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று தெரிய வில்லை..
பக்கத்திலேயே சிற்றுண்டிகள்.. ஐஸ்கிரீம்கள்..
குளிர் பானங்கள்.. கலைப் பொருட்கள் விற்கும் கடைகள்.. குறுகலான நடைபாதையில் எதற்கும் கவலைப் படாதவர்களாக பெண்கள்..
பதிவின் பகுதி இரண்டு
தஞ்சை பெரிய கோயில் திருவிழா
நன்றி : நம்ம தஞ்சாவூரு நண்பர்கள்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
வெயிலிலும் வியர்வையிலும் பொறுமையாக படங்கள் எடுத்துள்ளீர்கள். படங்களை பெரிதாகப் பார்த்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
ஓம் நம சிவாய..
நல்லதொரு தரிசனம் கிடைத்தது நன்றி ஜி
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி. நன்றி ஜி..
நீக்குஓம் நம சிவாய..
அருமை... நண்பர்களுக்கும் நன்றி...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குஓம் நம சிவாய..
அண்ணா எல்லப் படங்களுமே நல்லா வந்திருக்கு....வெயில்லயும் நின்று நிதானமா எடுத்திருக்கீங்களே! பாராட்டுகள்! படங்களை ரொம்ப ரசித்தேன் சுதைச்சிற்பங்கள் நல்லாதான் வந்திருக்கு.
பதிலளிநீக்குமுதல் சிற்பம் என்ன காலசம்ஹார மூர்த்தி என்பது நீங்கள் சொல்லியிருப்பதிலிருந்து தெரிந்துகொண்டேன். சிற்பங்கள் வழியே செய்திகளை எவ்வளவு அழகா சொல்லியிருக்காங்க இல்லையா?
எல்லாக் கோயில்களிலுமே, மண்டபங்களிலுமேதான்...பாறைகளில் கூட...
கீதா
சிற்பங்கள் வழியே புராணங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
ஓம் நம சிவாய..
கஷ்டப்பட்டு எடுத்திருக்கும் எல்லாப் படங்களுமே அருமையாக வந்திருக்கு. இத்தனை நிதானமாகவும் பொறுமையாகவும் தஞ்சைக்கோயிலைப்பார்ப்பதெனில் குறைந்தது 2,3 நாட்களாவது தேவை. பார்க்காத பல சிற்பங்களையும் இப்போது (?) புதிதாகத் தோன்றி இருக்கும் கடைகளையும் பார்த்து ரசித்தேன்.
பதிலளிநீக்கு// நிதானமாகவும் பொறுமையாகவும் தஞ்சைக் கோயிலைப் பார்ப்பதெனில் குறைந்தது 2,3 நாட்களாவது தேவை //
நீக்குஉண்மை தான்...
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
ஓம் நம சிவாய
தஞ்சை பெரிய கோவில் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. எப்போது போனாலும் படம் எடுக்கலாம். அவ்வளவு கலைச்சிற்பங்கள் நிறைந்த கோவில். மீண்டும் போகும் போது எடுக்கலாம்.
பதிலளிநீக்குதிருவிழா படங்களும் அருமையாக இருக்கிறது. நண்பர்கள் நன்றாக எடுத்து இருக்கிறார்கள்.
// கலைச் சிற்பங்கள் நிறைந்த கோவில். மீண்டும் போகும் போது எடுக்கலாம்..//
நீக்குஅதைத் தான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நம சிவாய..
சுதை சிற்பங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்கு