நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 10, 2023

தக்காளி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 27
  திங்கட்கிழமை

இன்றைய பதிவு
இணையத்தில் சேகரிக்கப்பட்ட 
செய்தித் தொகுப்பு
நன்றி - விக்கி


இன்றைக்கு நமது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்ட -  தக்காளி..

இதன் தாயகம் தென் அமெரிக்கா..

பதினாறாம் நூற்றாண்டில்  இந்தியாவிற்குள நுழைந்ததாக வரலாறு..

இதற்கு முன்பாக இங்கிருந்தது -
மணித் தக்காளி..
மிளகின் அளவில்  கருமையான பழம்... (மணி என்றால் கருமை)

உருளைக்கிழங்கு
சர்க்கரைவள்ளி, மரவள்ளிக்கிழங்கு, மிளகாய், தக்காளி - ஆகிய எல்லாமே தென் அமெரிக்காவிலிருந்து நமது நாட்டுக்கு வந்து சேர்ந்தவை என்று சொல்கின்றது விக்கி..

இவற்றை இங்கே கொண்டு வந்து சேர்த்தவர்கள் -
ஸ்பானிஷ்காரர்களும் போர்ச்சுகீசியரும்..


சர்வதேச  சமையலறைகளில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள
தக்காளிப் பழம் ஏராளமான சத்துக்களைத் தன்னகத்தே  கொண்டுள்ளது..


தக்காளி - கால்சியத்துடன் வைட்டமின் ஏ, பி1, பி3, பி5, பி6, பி7, சி மற்றும் வைட்டமின் கே -  ஆகியனவற்றையும் கொண்டுள்ளது.. 

மேலும்  இதில் ஃபோலேட், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம், கோலின், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் நிறைந்துள்ளன..


தக்காளியில் உள்ள லைகோபீன் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது..

நமது நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதிலும்  உடலில் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதிலும் தக்காளி பெரும் பங்காற்றுகின்றது.. 

தக்காளியின் லைக்கோபீன்
இதய நலனுக்கு உதவுகின்றதாக அறிந்துள்ளனர்..

இதய நோயாளிகள் குறைவான உப்பு மட்டுமே சேர்த்து கொள்ள வேண்டும் என்பதால் அவர்களுக்கு தக்காளி நல்லது.. 

இதய நலன், பார்வைத் திறன், சரும பாதுகாப்பு  நலன்களுக்கு தக்காளி உதவுகின்றது. 

ஆனாலும்,  உடல் நலக் குறைவு உள்ளவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்..

சமீப காலத்தில் 
முக அழகிற்கும்  தோல் பாதுகாப்பிற்கும்  தக்காளி பயன்படுத்தப்படுகின்றது..

தக்காளி அதன் புளிப்புச் சுவையின் காரணமாக இயல்பாகவே  அமிலத் தன்மை உடையதாகின்றது..

எனவே அதிக அளவு தக்காளியினால்  நெஞ்சு எரிச்சல் ஏற்படுகின்றது. இரைப்பையில் ஏற்படும் அமிலத் தன்மையால்
உணவுக் குழாய்  பாதிப்படைகின்றது.. அதன் விளைவு குடற்புண்கள்..

தக்காளியினால் உடல் திசுக்களில் கால்சியத்தின் அளவு அதிகரிக்கின்றது..
இதனால் பலருக்கும் ஒவ்வாமையும் 
மூட்டுகளில் வலியும், வீக்கமும் உண்டாகின்றன..

சிறுநீரகக் கற்களுக்கும் தக்காளி காரணமாக சொல்லப்படுகின்றது..

சிறுநீரகங்களின் செயல் குறைந்து விட்டால் பொட்டாசியம் வெளியேறாமல் உடலில் தங்கி விடும்.. இந்நிலையில்
சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்துள்ள 
தக்காளியை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது..

தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன் என்ற வேதிப் பொருளின் காரணமாக வயதானவர்களுக்கு ஒவ்வாமை  உண்டாகிறது..

உதடுகள், நாக்கு, காது, தொண்டை அரிப்பு அல்லது  தொண்டை வீக்கம், தோலில் வெடிப்பு போன்ற பிரச்னைகளில் தக்காளியின் பங்கும் இருப்பதாக சொல்லப்படுகின்றது..

தக்காளிக் காயைக் கடித்தால் ஒருவித நமைச்சல் வாய்க்குள் ஏற்படும் என்பது நம்மவர்கள் அறிந்ததே..


Salad களில் தக்காளி
செம்பழமாக  இடம் பெறும் போது - பக்குவம் அடையாத இரசாயனங்கள் இவ்வாறான விளைவுகளை ஏற்படுத்துகின்றன..

தற்காலத்தில் சந்தைக்கு வருகின்ற தக்காளி  (வகைகள்) எல்லாமே முளைப்புத் திறன் உடையவை அல்ல.. மடை மாற்றம் செய்யப்பட்ட வகைகளும் இருக்கின்றன..

காலகாலமாக நிறைய சோதனைகள் தக்காளியின் மீது.. 

Cherry Tomatoes என்றே புதிய வகைகள் உருவாக்கப் பட்டுள்ளன.. 




அடர் சிவப்பு, இளஞ் சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில் அலங்காரத் தக்காளிகள் பிற நாடுகளில் இயல்பாகக் கிடைக்கின்றன.. சாதாரண தக்காளிகளிலும் பல ரகங்கள் அங்கே.. 


Salad Dressing வகைகளுக்குத் தனி.. Sauce, Cassarole  குழம்பு வகைகளுக்குத் தனி - என்றெல்லாம் இருக்கின்றன..

நாள் கணக்கு ஆனாலும் கனிவடையாத தக்காளி ரகங்களும் உள்ளன..

இவையெல்லாம் ஆதியில் இல்லை..  தற்கால சந்தை வளர்ச்சி.. பேராசையின்  கோலம்..

எனவே இன்றைய தக்காளிகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் விஷயங்களை உணர்ந்து கொண்டு வாழ்வோமாக..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

22 கருத்துகள்:

  1. சினிமாக்களிலும் கதைகளிலும் இப்போதெல்லாம் தக்காளி என்கிற வார்த்தையை எதற்கு பயன்படுத்திகிறார்கள் என்று தெரிந்திருக்கும்!  அந்த வகையிலும் தக்காளிக்கு உபயோகம் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தக்காளியால் அவனுங்களை அடிக்க வேண்டியது தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. கத்தரிக்காய் வண்ணத்தில் தக்காளி...  தக்காளி என்றே தொடன்கிறாது போலிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் காலக் கொடுமை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. தக்காளி சமையலின் கவர்ச்சி ராணி.  இருமுறை கற்களால் அவதிப்பட்ட பிறகு நான் பெங்களூர் தக்காளிதான் உபயோகிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூர் தக்காளி, ஒரிஜினல் தக்காளியின் தோல் ஜீனை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தவளைத் தோலின் ஜீனைப் புகுத்தியது என்று படித்திருக்கிறேன். அதனால்.... ஹா ஹா ஹா

      நீக்கு
    2. @ ஸ்ரீராம்..

      மூன்று மாதங்களாக நான் தக்காளி சாப்பிடுவதில்லை..

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
    3. @ நெல்லை..

      தக்காளியைப் புறந்தள்ள வேண்டியது தானே...

      கடல் வழியே வந்தேறியது தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. தக்காளி பற்றிய தகவல்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. இப்போதுள்ள தக்காளிகளில் நாட்டுத் தக்காளி தவிர மற்றவை மாற்றப்பட்ட ரகங்கள். அழுகாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பிள் காய் போல அப்படியே கிடக்கும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. தக்காளி விவரங்கள், படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    தக்காளி இல்லா உணவு செய்வது மிகவும் கஷ்டமாக போய் விட்டது. தக்காளி பயன்பாட்டையும் அளவுடன் வைத்து கொண்டால் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூச்சிக்கடிக்கு மருந்து சாப்பிடுவதால்
      மூன்று மாதங்களாக நான் தக்காளி சேர்த்துக் கொள்ளவதில்லை..

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தக்காளியின் பெயர் விபரங்கள், அதன் பயன்பாடுகள் அனைத்தும் அறிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    அதென்னவோ.. தாங்கள் ஒரு காயைப்பற்றிக் கூறும் போது, அந்தக் காயே எங்கள் வீட்டிலும் பயன்பாட்டுக்கு வருகிறது. நேற்று எங்கள் வீட்டில் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சாதந்தான் மதிய உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து விரும்பி சாப்பிட்டனர். உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நேற்று எங்கள் வீட்டில் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சாதந்தான் மதிய உணவு. ///

      எனக்கும் தக்காளி சாதம் மிகவும் பிடிக்கும்..

      ஆனால்,
      பூச்சிக்கடிக்கு மருந்து சாப்பிடுவதால்
      மூன்று மாதங்களாக நான் தக்காளி சேர்த்துக் கொள்ளவதில்லை..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. தக்காளியின் பயன்பாடு அதிகம் இல்லை என்றாலும் வாங்குவது நாட்டுத்தக்காளி மட்டுமே. அதையும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்க மாட்டேன். விரைவில் பயன்படுத்திவிடுவேன் என்பதால் அதிக பக்ஷமாக அரைக்கிலோ வாங்குவோம். சில சமயங்கள் அதுவே ஒரு வாரம் வந்துடும். அநேகமாகத் தக்காளிச் சட்னி, தொக்குக்குத் தான். ரசத்தில் அரைத்தக்காளி போட்டாலே நம்மவர் புளிப்பு என்பார். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூச்சிக்கடிக்கு மருந்து சாப்பிடுவதால்
      மூன்று மாதங்களாக நான் தக்காளி சேர்த்துக் கொள்ளவதில்லை..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு
  10. நாட்டுத்தக்காளி காயாகப் பச்சையாக இருப்பதில் என் அம்மா பிட்லை செய்வார். ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டுத் தக்காளி க்காய் சாம்பாரும் அருமையாக இருக்கும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..