நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 23
வியாழக்கிழமை
கடந்த ஞாயிறு (2/4)
எங்கள் Blog ல்
அன்பின் திரு நெல்லை அவர்கள்,
எனது கருத்து ஒன்றிற்கு அளித்திருந்த
கருத்துரை இதோ:
" இப்போ உங்களுக்கு சிறிய இடைவெளி விட்டிருக்கிறார். உடல்நிலை சரியாகிடும், கிரகங்கள் மாறும்போது. பிறகு நிச்சயம் தரிசனம் கிடைக்கும். உங்களுடன் சேர்ந்து நாச்சியார் கோவில் கல்கருடன் உற்சவத்தைச் சேவிக்கும் காலம் வரும்.."
ஸ்ரீ கருடனைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும் மேலும் தேடி எடுத்த தொகுப்பு - இந்தப் பதிவு..
அன்பின் திரு நெல்லை அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
நேற்று தஞ்சை அரசூர் முருகன் கோயிலில் பாற்குட உற்சவம்.. ஒரு சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.. அவை இங்கே..
மரீஷி முனிவருக்கு மகனாகப் பிறந்தவர் காச்யபர்..
இவர் இறைவன் ஆணைப்படி தட்சப் பிரஜாபதியின் மகள்களான கத்ரு, விநதை என்பவர்களை மணந்து கொண்டார்..
கத்ருவுக்கு சக்தி வாய்ந்த நாகங்கள் ஆயிரம் தோன்றின..
அவற்றில் அநந்தனும், சங்கபாலனும் வெண்மை நிறம்.
வாசுகியும் பத்மனும் சிவப்பு நிறம். மஹாபத்மனும் தட்சகனும் மஞ்சள் நிறம்.கார்க்கோடகனும் குளிகனும் கறுப்பு நிறம்..
விநதைக்கு இரண்டு முட்டைகள் தோன்றின.. அவற்றில் ஒன்றை விநதை அவசரப்பட்டு உடைத்து விட்டதால் இடுப்புக்குக் கீழ் வளர்ச்சியற்ற அருணன் தோன்றினான்..
இவனே சூரியனின் தேர்ச்சாரதி.. இவனது வழித்தோன்றல்களே சம்பாதி, ஜடாயு..
முட்டையைத் தவறுதலாக உடைத்த விநதா அருணனின் சாபத்தினால் கத்ருவுக்கு அடிமையானாள்..
மீதமாக இருந்த முட்டையிலிருந்து
ஆவணி மாத வளர்பிறை (சுக்ல பட்சம்) பஞ்சமியன்று சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினான் கருடன்.
கருடன் தனது தாயின் விடுதலைக்காக தேவலோகத்தில் அமிர்தம் எடுக்கச் சென்றபோது அங்கே சண்டை மூண்டது..
தேவர்களுக்கு ஆதரவாக வந்த திருமாலையும் எதிர்த்தான். சண்டையிட்டான். பகவானை உணர்ந்து கொண்ட கருடன் அவருக்கே அன்பன் ஆனான்.. பெரிய திருவடி எனும் பட்டத்தையும் பெற்றான்..
தாயையும் அடிமைத் தளையில் இருந்து மீட்டெடுத்தான்.. பெரியன்னையிடம் இருந்து தோன்றிய நாக குமாரர்களில் தலை சிறந்து விளங்கிய எட்டு பேரையும் தன் வசப்படுத்தி தனது மேனியில் அணிந்து கொண்டான்..
,
1.சிரசில் சங்கபாலன்
2.வலக்காதில் பத்மன்
3.இடக்காதில் மகாபத்மன்
4.கழுத்தில் கார்க்கோடகன்
5.பூணூலாக வாசுகி
6.இடுப்பில் தட்சகன்
7.வலக்கையில் குளிகன்
8.இடக்கையில் சேஷன்
திருமலையின் ஏழு மலைகளில் கருடாத்ரி என, கருடன் பெயரில் ஒரு மலையும் உள்ளது.
ஆதி தஞ்சபுரியின் (தஞ்சை நகர்) அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவம்..
இதனால் தஞ்சை நகரில் விஷ தீண்டுதல் கிடையாது..
தஞ்சை கருட சேவை |
தஞ்சையில் இருபத்து நான்கு கருட சேவை
காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் பதினைந்து கருட சேவை
கும்பகோணத்தில் அட்சய திருதியை அன்று பன்னிரண்டு கருட சேவை
சீர்காழிக்கு அருகில் திருநாங்கூரில் பதினொரு கருட சேவை
திருநெல்வேலி ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவை
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐந்து கருட சேவை ஆகியன
கருடனின் பெருமைக்குச் சான்றாகும்.
திருநறையூர் எனும்
நாச்சியார்கோயிலில் கல் கருடன் - தானே மூலவராகவும், உற்சவராகவும், வாகனமாகவும் திகழ்கின்றார்..
குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம:
ஓம் ஹரி ஓம்
***
சுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம் ..
நீக்குஓம் ஹரி ஓம்..
சிறப்பான தரிசனம் கிடைத்தது நன்றி ஜி
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி ..
நீக்குஓம் ஹரி ஓம்..
கருடன் பற்றிய தகவல்கள் நன்று.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி நெல்லை ..
ஓம் ஹரி ஓம்..
அறிந்த செய்தியானாலும் கருடனைப் பற்றிய தொகுப்புப் பிரமாதம். இரு முறை கல்கருடன் தரிசனம் கிட்டி இருக்கு. ஆனால் வீதி உலாவில் பார்த்தது இல்லை.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மேலதிக செய்தியும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றியக்கா ..
ஓம் ஹரி ஓம்..
தகவல்கள் அருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
ஓம் ஹரி ஓம்..
மிக சிறப்பு
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஓம் ஹரி ஓம்..
கோமதிஅரசு அவர்கள் வரக் காணோமே!..
பதிலளிநீக்குநானும் அவர்களை தேடினேன். வெளியில் எங்காவது சென்றுள்ளார்கள் என நினைக்கிறேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கருடன் பற்றிய பல தகவல்களை தெரிந்து கொண்டேன். ஸ்வாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள். இந்த ஸ்லோகம் நானும் தினமும் சொல்வேன். வானில் வட்டமிடும் கருடனை கண்டதும் இந்த ஸ்லோகம் வாய் சொல்ல ஆரம்பித்து விடும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஓம் ஹரி ஓம்..
நேற்று மகள் ஊருக்கு வந்தேன் . இன்று தான் இணைய இணைப்பு கொடுத்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் இருவர் விசாரிப்புக்கும், தேடலுக்கும் நன்றி.
அனைவரும் நலம் தானே!..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
அனைவரும் நலம்
நீக்குவாழத்துக்கு நன்றி.
அரசூர் முருகன் பால்குட தரிசனம், கருட சேவை தரிசனம் கிடைத்தது.
பதிலளிநீக்குகருடன் வரலாறு தெரிந்தது இருந்தாலும் மிக அருமையான உங்கள் எழுத்து நடையில் மீண்டும் வாசித்தேன்.
படங்கள் எல்லாம் அருமை.
நேரம் வித்தியாசம் ஏற்படுகிறது. அதனால் படிப்பது, பின்னூட்டம் கொடுப்பது கொஞ்சம் சிரமம். இருந்தாலும் வருவேன்.
நலம் வாழ்க..
நீக்குஇயன்றபோது வாசியுங்கள்..
பிரச்னை இல்லை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நம சிவாய..
பால்குட தரிசனம் அருமை. கருட சேவையும் சிறப் பாக இருந்தது.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ..
ஓம் ஹரி ஓம்..