நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 9
சனிக்கிழமை
ராஜராஜ சோழனுடன்
சித்தர் கருவூரார் காட்சியளிக்கும் ஓவியமும் இன்னும் பல ஓவியங்களும் மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள உள்திருச்சுற்றில் உள்ளன.
ராஜராஜ சோழனுடன்
சித்தர் கருவூரார் காட்சியளிக்கும் ஓவியத்தை வழக்கம் போல மறுத்து சுந்தரரும் கிழவராக வந்த இறைவனும் தான் - என்ற மாற்றுக் கருத்துகளும் உள்ளன..
இவை - இவற்றின் மேல் நாயக்கர் காலத்தில் எழுதப்பட்ட ஓவியங்களில் இருந்து மீட்டெடுக்கப்பட்டவை..
பாதுகாப்பு கருதி உள்நாழி சுற்றி வருவதும் மேல் தளத்திற்குச் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது..
கருவூரார் சந்நிதி |
ஸ்ரீ கந்தகோட்டம் |
பெரிய கோயிலின் கந்த கோட்டம் கலைக் கோட்டமாக அமைந்த சிறப்பினை உடையது..
நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்ற கந்த கோட்டத்தின் வெளிப்புறச் சுவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முருகன் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர்..
ஸ்ரீ துர்கை |
துவார பாலகர் வடிவமைப்பு
உலோக வார்ப்பு போல
அற்புதத்திலும் அற்புதம்..
விரல் நகம் |
வேறொரு நாளில்
கந்த கோட்டத்தின் சிற்பச் சிறப்புகளை
வழங்குவதற்கு
முருகன் திருவருள் கூட்டுவானாக!..
***
கீழுள்ள படங்களும்
காணொளியும்
முருகன் உலா..
Fb ல் வந்தவை
நன்றி: SFA Studios
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
பெரியகோவிலின் உள் இருக்கும் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகன் கோவிலைக் குறிப்பிடுகிறீர்களா இல்லை இது வேறு கந்தகோட்டமா?
பதிலளிநீக்குபெரிய கோயிலின் முருகன் சந்நிதியைத் தான் கந்த கோட்டம் என்று குறிப்பிடுகின்றேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நலம் வாழ்க..
அதானே பார்த்தேன். சென்னை கந்த கோட்டத்தில் இத்தனை சிற்பங்கள் இல்லையே என நினைச்சேன்.
நீக்குநான் கந்த கோட்டம் என்று குறித்தது வேறு அர்த்தமாகி விட்டது..
நீக்குநன்றியக்கா..
கருத்தைக் கவரும் படங்கள்.. சுவாரஸ்யமான விவரங்கள்..
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம் ..
நீக்குநலம் வாழ்க..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. தஞ்சை பெரிய கோவிலை தரிசனம் செய்து கொண்டேன். முதல் தடவையாக சென்ற வருடம் இங்கு சென்று வந்தோம். இன்னமும் நிதானமாக ஒரு முறை சென்று கலைச்சிற்பங்களை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இன்று தங்களின் பதிவால் இறைவனை தரிசிக்கும் பேறு பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீக்கு// இன்னமும் நிதானமாக ஒரு முறை சென்று கலைச் சிற்பங்களை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.. //
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நலம் வாழ்க..
படங்கள் அருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
நலம் வாழ்க..
படங்களும், காணொளி பகிர்வும் அருமை. 1974 , அல்லது 1975 என்று நினைக்கிறேன். கோவிலின் உள் நாழி சுற்று, மேல் தளம் எல்லாம் பார்த்து இருக்கிறோம்.
பதிலளிநீக்குகோவிலின் கோபுரம் உள் வழியாக பார்த்தது வியப்பு அடைந்தது நினைவில் இருக்கிறது.
முருகன் சன்னதி சிற்பங்கள் மிகவும் அருமையாக இருக்கும்.
அடுத்த பதிவை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.
// கோயிலின் உள் நாழி சுற்று, மேல் தளம் எல்லாம் பார்த்து இருக்கிறோம்... //
நீக்குகொடுத்து வைத்தவர் தாங்கள்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நலம் வாழ்க..
தஞ்சை பெரிய கோவில் கோபுர தரிசனங்கள் , காட்சிகள், ஓவியங்கள், சிற்பங்கள் அருமை
பதிலளிநீக்கு