நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 23, 2023

தரிசனம் 4

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 10
 ஞாயிற்றுக்கிழமை

அக்ஷயத் திரிதியை நல்வாழ்த்துகள்

பதிவின் முதல் பகுதி

திருச்சோற்றுத்துறை


இறைவன்
ஸ்ரீ சோற்றுத்துறை நாதர்
அம்பிகை
ஸ்ரீ அன்னபூரணி
தல விருட்சம் 
பன்னீர்மரம்
தீர்த்தம் 
காவிரி குடமுருட்டி


மக்கள் பசிப்பிணி தீர்த்த அடியார் ஒருவர் துயர் கண்டு வருந்தியபோது இறைவன் அடியார்க்கு அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரது பசியையும் போக்கிய தலம்..



அருளுடைய மூவரால் 
பாடப்பெற்ற திருத்தலம்..


கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையராய் இனியர் ஆகித் தனியராய்ப் பனிவெண் திங்கட்
பிறையராய்ச் செய்த எல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்து என் உள்ளச் சோர்வுகண்டு அருளி னாரே.. 4/41/4
-: திருநாவுக்கரசர் :-

தஞ்சையை அடுத்துள்ள திருக்கண்டியூர் வீரட்டத்திற்குக் கிழக்கே ஐந்து கிமீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென் கரையில் - (கண்டியூர் ஐயம்பேட்டை சாலையி ல்) அமைந்துள்ளது திருச்சோற்றுத்துறை.

தஞ்சையில் இருந்து இன்னமும் நேரடியான பேருந்து வசதி இல்லை. கண்டியூர் சென்று அங்கிருந்து சிற்றுந்தில் செல்ல வேண்டும்..

மேலே உள்ள படங்கள்
 நன்றி:
திருச்சோற்றுத்துறை
சிவனடியார் திருக்கூட்டத்தினர்..

அக்ஷய திரிதியையின்
உண்மை உணர்ந்து நலம் பெறுவோமாக..

பதிவின்
இரண்டாம் பகுதி

கந்த கோட்டத்தில் விளங்கும் 
அழகிய சிற்பங்கள் இன்றும் 
தொடர்கின்றன..










கதை சொல்லும் கற்சிறபங்கள்




முன் மண்டபத்தின் வாசலின் 
இருபுறமும் விளங்கும
புருஷா மிருக சிற்பங்கள்..

ஸ்ரீ சண்டேஸ்வரர்



 கோமுகம்

சோழன் வடிவமைத்த ஸ்ரீ துர்கை

அருள் திரு ஆடல் வல்லான்

கீழுள்ள படங்களும்
காணொளியும்
முருகன் உலா..
Fb ல் வந்தவை
நன்றி:  SFA Studios






வேறொரு சந்தர்ப்பத்தில் 
கந்த கோட்டத்தின் படங்கள் பலவற்றைத் 
தருவதற்கு இறைவன் அருள் புரிவானாக!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. அட்சயத் திருதியை நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிலுள்ள படங்களைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம் ..

      நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  2. படங்கள் அற்புதம்...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  3. திருச்சோற்றுத்துறை இறைவன் , தாய் அன்னபூரணி தரிசனம் கிடைத்தது இன்று.,மகிழ்ச்சி. அப்பர் பாடலை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    தஞ்சை கோவில் படங்கள், முருகன் உலா படங்கள், காணொளி எல்லாம் அருமை. மேலும் கந்த கோட்டத்து முருகன் படங்களை பார்க்க தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இன்று அப்பர் பாடலை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.//

      மகிழ்ச்சி.. நன்றி..

      // மேலும் கந்த கோட்டத்து முருகன் படங்களை பார்க்க தொடர்கிறேன்..//

      சற்று வெயில் குறைந்ததும் கோயிலுக்குச் செல்லலாம் என்று இருக்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  4. கந்த கோட்டம் எத்தனை முறை போயிருப்போம் என்பது கணக்கே இல்லை. ஆனால் இத்தனை நுணுக்கமாகப் பார்த்து ரசிக்கலை. அனைத்துப் படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  5. படங்கள் மிக அழகு. புருஷா மிருகத்தைப் பற்றிப் படித்தது நினைவுக்கு வரலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களது
      அன்பின் வருகையும் கருத்தும் நன்றி ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  6. நேற்றே கேட்க நினைச்சு விட்டுப் போயிருக்கு. இது சென்னை கந்த கோட்டம் தானே? சில இடங்களில் தாராசுரக் கோயில் சிற்பங்களை நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை பெரிய கோயிலுக்குள் உள்ள முருகன் கோயிலைத் தான் கந்த கோட்டம் என்று எழுதினேன்..
      இப்படி அர்த்தம் மாறிவிடும் என்று நினைக்க வில்லை..
      மன்னிக்கவும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  7. பட்ங்கள் எல்லாம் செமையா இருக்கு துரை அண்ணா. புருஷா மிருகம் - இப்பதான் இது என்பது தெரிகிறது. அத்தனை படங்களும் அழகா எடுத்திருக்கீங்க ஒவ்வொரு நுணுக்கமான சிற்பங்களும் என்ன அழகு!! ரசித்துப் பார்த்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளத்தில் சிவாலய ஓட்டத்துக்குக் காரணமே பீமனை புருஷா மிருகம் துரத்தியது தானே!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.
      நன்றி சகோ..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  8. அட்சய திருத்தியை நாளில் இனிய ஆலய தரிசனங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..