நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 02, 2022

வருவாய் முருகா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 16
வெள்ளிக்கிழமை

இன்றொரு திருப்புகழ்
-: பொது :-


தத்ததன தானத் ... தனதான

இத்தரணி மீதிற் ... பிறவாதே
எத்தரொடு கூடிக் ... கலவாதே

முத்தமிழை ஓதித் ... தளராதே
முத்தியடி யேனுக் ... கருள்வாயே

தத்துவமெய்ஞ் ஞானக் ... குருநாதா
சத்தசொரு பாபுத் ... தமுதோனே

நித்தியக்ரு தாநற் ... பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி : கௌமாரம்)


இந்தப் புவியில் நான் மீண்டும் பிறவாமலும்
(அப்படிப் பிறப்பினும்) ஏமாற்றுக்காரருடன் கூடிக் கலக்காமலும்

முத்தமிழைப் படித்துத் தளராமலும்
முக்திநிலையை எனக்குத்
தந்தருள்வாயே..

தத்துவப் பொருளாகிய
மெய்ஞ்ஞானத்தை அருளும் குருமூர்த்தியே
(ஓம் எனும்) ஒலியாகத் திகழ்பவனே
புத்தமுதாகப் பொலிபவனே..

தினமும் எனக்கு நன்மைகளைச் செய்பவனே
(நான் பெற்ற) பெருவாழ்வாக இருப்பவனே
ஆடலில் வல்லவனே
உலகின் பேரொளியாய்த் 
திகழ்கின்ற பெருமாளே..
**
முருகா முருகா
வருவாய் அருள்வாய்
***

15 கருத்துகள்:

  1. முருகா சரணம், குருபரா சரணம். அறுமுகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரணம் சரணம்
      சண்முகா சரணம்..

      மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முருகன் படங்கள் அழகு. இனிமையான திருப்புகழ் பாடலைப் பாடி, அதன் பொருளுணர்ந்து முருக தரிசனம் பெற்றுக் கொண்டேன்.

    /தினமும் எனக்கு நன்மைகளைச் செய்பவனே
    நான் பெற்ற) பெருவாழ்வாக இருப்பவனே/

    அவனை மெய்யுருகி வேண்டும் போது இந்த நல்ல வார்த்தைகள் அவசியம். அவனை முழுதாக சரணடைந்து விட்டால், அவன் தருவது அனைத்துமே நன்மைகள்தானே...!
    முருகா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவனை மெய்யுருகி வேண்டும் போது இந்த நல்ல வார்த்தைகள் அவசியம்.//

      உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      முருகா சரணம்..

      நீக்கு
  3. திருப்புகழைப்பாடப் பாட வாய் மணக்கும். முருகனின் தரிசனத்திற்கும் திருப்புகழ்ப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. திருப்புகழை வாய்விட்டு வாசித்து மகிழ்ந்தேன். பள்ளியில் செய்யுளை எல்லாம் வாய் விட்டுவாசிக்கச் சொல்வாங்க வகுப்பில்....அது அருமையான பயிற்சி. அப்புறம் விட்டுப் போயிற்று. இப்போது நீங்கள் திருப்புகழ் பகிரும் நாளெல்லாம் வாசித்து அந்த சந்தம் மற்றும் தாள லய ஒலியை ரசித்து வாசிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருப்புகழ் பகிரும் நாளெல்லாம் வாசித்து அந்த சந்தம் மற்றும் தாள லய ஒலியை ரசித்து வாசிக்கிறேன்.//

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  5. 'நிர்த்த ஜெகஜோதி பெருமாளே' உனது பாதம் பணிகின்றோம். வெள்ளி நாளில் படித்து இன்புற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      முருகா சரணம்..

      நீக்கு
  6. பின் தொடரும் கருத்துகளும் அதுக்குத் தம்பியோட பதில்களும் கரெக்டா வந்துடுது. ஆனால் என்னோட கருத்தை மட்டும் ஒளிச்சு வைக்குது! :( இதுக்குப் போட்ட கருத்தைத் தேடினாலும் கிடைக்கலை! ஆனால்"ஆடலில் வல்லவனே" பற்றிச் சொல்லி இருந்த நினைவு. என்னமோ போங்க. தொடர்ந்து என்னோட கருத்துக்களை மட்டும் ப்ளாகர் நிராகரிக்கிறதே! :(

    பதிலளிநீக்கு
  7. பானுமதியும் நேற்று இதைத் தான் சொன்னார். கருத்துகள் காணாமல் போவதாலேயே தான் பதிவுகளில் கருத்து இடுவது இல்லை என்றார்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..