நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 6
புதன் கிழமை.
தமிழமுதம்
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.. 37
*
திவ்யதேச தரிசனம்
திருப்பேர் நகர்
(கோயிலடி)
அப்பக்குடத்தான்
இந்த்ராதேவி கமலவல்லி நாச்சியார்
புரசமரம்
இந்திர புஷ்கரணி
மேற்கு நோக்கிய
புஜங்க சயனத் திருக்கோலம்
இந்திர விமானம்
மங்களாசாசனம்
பெரியாழ்வார், நம்மாழ்வார்,
திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்
33 பாசுரங்கள்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்..479
*
திவ்யதேசத் திருப்பாசுரம்
வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே.. 1429
-: திருமங்கையாழ்வார் :-
( நன்றி: நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**
சிவதரிசனம்
திருத்தலம்
திருகருவிலிக் கொட்டிட்டை
பிறவி நீக்கும் தலம்
தலம் கருவிலி
கோயில் கொட்டிட்டை
ஸ்ரீ சற்குணேஸ்வரர்
ஸ்ரீ சர்வாங்கசுந்தரி
வில்வம்
யம தீர்த்தம்
திருப்பதிகம் அருளியோர்
திருநாவுக்கரசர்
**
தேவாரம்
பிணித்த நோய்ப் பிறவிப் பிரிவு எய்துமாறு
உணர்த்தலாம் இது கேண்மின் உருத்திர
கணத்தினார் தொழுது ஏத்துங் கருவிலிக்
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்மினே.. 5/69/8
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி
பாடல் 6
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார் அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே..
(நன்றி: பன்னிரு திருமுறை)
-: மாணிக்கவாசகர் :-
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
நமச்சிவாய என்று சொல்வோமே.. நாராயணா என்று சொல்வோமே...
பதிலளிநீக்குநம சிவாய என்று சொல்வோமே.. நாராயணா என்று சொல்வோமே..
நீக்குசொல்வோமே..
சொல்வோமே..
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
இன்றைய தரிசனம் நன்று வாழ்க வையகம்
பதிலளிநீக்குவாழ்க வையகம்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
ஹரி ஹரி ஹரி ஹரி
பதிலளிநீக்குஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரிஓம்
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம ஓம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
மார்கழி அதற்குள் 6 ஆம் நாள் வந்துவிட்டது! புள்ளும் சிலம்பின காண் இப்போதெல்லாம் குறைந்துவிட்டதோ! இல்லை நாம் கட்டிடங்களுக்கு நடுவில் வாழ்வதால் - வண்டிச் சத்தம் பிளக்குது காண்!!!!!!!
பதிலளிநீக்குகீதா
புள்ளும் சிலம்புகின்றன..
நீக்குகேட்கத்தான் நமக்கு நேரம் இல்லை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
திருப்பெரும்துறை சிவனே போற்றி. வணங்குகின்றோம்
பதிலளிநீக்குபோற்றி. வணங்குகின்றோம்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
திவ்ய தேச தரிசனம் , சிவ தரிசனம் அருமை.
பதிலளிநீக்குஉடல் நோய், மற்றும் மனநோயை போக்கி நம்மை ஆட்கொள்ள வேண்டும்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..