நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 19, 2021

தீபத் திருநாள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
திருக்கார்த்திகை
தீபத் திருநாள்..


ஈசனுக்கும்
எம்பெருமான்
முருகவேளுக்கும்
உரிய பொன்னாள்

ஞானசம்பந்த மூர்த்தி
தமது திருவாக்கினால்
குறித்தருளும்
நன்னாள்..

அடியும் முடியும் காண்பதற்கு
இயலாதபடி
அக்னிப் பிழம்பாக
அண்ணா மலையில்
ஈசன் விளங்கி நின்ற நாள்
இதுவே..

அண்ணா மலை எனில்
அணுக இயலாத மலை
என்பர் ஆன்றோர்..

அண்ணாமலையைத் தரிசித்து
திருஞானசம்பந்தப் பெருமானும்
திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
அருளிச் செய்த
திருப்பதிகங்களின்
திருப் பாடல்கள்
இன்றைய பதிவில்!..


உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள்
மழலைம் முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை
வழுவா வண்ணம் அறுமே..(1/10)
-: திருஞானசம்பந்தர் :-

பூவார்மலர் கொண்டு அடியார் தொழுவார்
புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று
மூவர்க் கருள் செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவித்
தொறுவின் நிரை ஓடும்
ஆமாம்பிணை வந்து அணையுஞ் சாரல்
அண்ணா மலையாரே..(1/69)
-: திருஞானசம்பந்தர் :-


உருவமும் உயிரும் ஆகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்ற எம்பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும்
அண்ணாமலை யுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லால்
மற்றொருமாடி லேனே..
(4/63)
-: திருநாவுக்கரசர் :-

வானனை மதிசூடிய மைந்தனைத்
தேனனைத் திரு அண்ணா மலையனை
ஏனனை இகழ்ந்தார் புர மூன்றெய்த
ஆனனை அடியேன் மறந் துய்வனோ.. (5/04)
-: திருநாவுக்கரசர் :-

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே..(5/05)
-: திருநாவுக்கரசர் :-
***
சில தினங்களுக்கு முன்பு
நான் உடல் நலம் குன்றியிருந்தபோது
அன்புடன் நலம் கேட்ட
வலைத்தள அன்பர்கள்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

பாசமும் நேசமும்
மகிழ்வும் நெகிழ்வுமாக
அன்பெனும் தீபங்கள்
இல்லங்கள்தோறும்
ஒளிர்வதற்கு வேண்டிக் கொள்வோம்..

அனைவருக்கும்
கார்த்திகைத் திருநாள்
நல்வாழ்த்துகள்..
-:-

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும்
காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. இனிய திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      தீபத் திருநாள் நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உடல் நலம் தேறி விட்டீர்களா? ஜோதியாய் நின்ற எம்பெருமானை பக்தியுடன் தொழுது பணிவோம். இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள். உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      உடல் நலம் சற்று தேறியிருக்கின்றது..

      தீபத் திருநாள் நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  3. இனிய திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
    படங்கள் எல்லாம் அருமை.

    பகிர்ந்த தேவார பாடல்களும் பாடிதரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      தீபத் திருநாள் நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      தீபத் திருநாள் நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  5. தீபத்திருநாள் வாழ்த்துகள் துரை அண்ணா.

    உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      தீபத் திருநாள் நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  6. நலமாக இருக்கிறீர்களா? ஒரு வருடம் கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் இருக்கும் பாக்கியம் வாய்த்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நலமாக இருக்கின்றேன்.

      தீபத் திருநாள் நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு
  7. உடல் நலம் தேறி வருவது குறித்து மகிழ்ச்சி. அனைவருக்கும் தாமதமான தீபத்திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      தாமதம் என்று ஏதுமில்லை..

      தீபத் திருநாள் நல்வாழ்த்துகளுடன்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..