நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
இன்று
ஸ்ரீ கந்த சஷ்டி விரதத்தின்
நான்காம் நாள்..
***
ஏ.. மனமே
படிக்கின்றிலை நீ
பழனிமலைப் பரமனின் திருநாமம்..
சரி.. போகட்டும்..
பரமனின் பெரும்புகழைப்
படித்துப் பண்பட்டவர் தம்மை
நினைத்து அவர்தம்
வழியில் நடக்கின்றாயா?..
- என்றால்,
அதுவும் இல்லை..
பால் என்பது மொழி
சேல் என்பது விழி
என்று அலைகின்றாயே..
எங்ஙனம் நீ முன்னேறுவாய்?..
இனியாவது உய்வடைவதற்கான
வழியைத் தேடு!..
அப்படித் தேடிக்
காண்பது சிரமம்..
எனவே தான்
அருணகிரிப் பெருமான்
நம்மை உய்விக்கும்
ஞானப் பேரொளியை
நமக்குக் காண்பிக்கின்றார்..
கண்ணாரக் கண்டு கொள்..
கந்தனைக் கண்டு கொள்..
கந்தனின் கழலடியைக்
கைகளால் பற்றிக் கொள்..
திருமகள் உலாவும் இருபுய
முராரி திருமருக நாமப் .. பெருமாள் காண்..
செகதலமும் வானும் மிகுதி பெறு பாடல் தெரிதரு குமாரப் .. பெருமாள் காண்..
மருவும் அடி யார்கள் மனதில் விளை யாடு மரகத மயூரப் .. பெருமாள்காண்.
மணிதரளம் வீசி அணிஅருவி சூழ மருவுகதிர் காமப் .. பெருமாள்காண்..
அருவரைகள் நீறு படஅசுரர் மாள அமர்பொருத வீரப் ..
பெருமாள் காண்..
அரவுபிறை வாரி விரவுசடை வேணி அமலர்குரு நாதப் .. பெருமாள்காண்..
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குலேசப் .. பெருமாள் காண்..
இலகுசிலை வேடர் கொடியின் அதி பார இருதன விநோதப் .. பெருமாளே..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
***
கந்தா சரணம் சரணம் சரணம்
கதிர்வேல் அரசே சரணம் சரணம்..
வெற்றிவேல் முருனுக்கு
அரோகரா..
-:- -:- -:-
திக்கிலாதவர்களுக்கு தெய்வமே துணை. இஷ்டதெய்வம் முருகன் அனைவரையும் காக்கட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களது வருகைக்கு மகிழ்ச்சி..
முருகன் திருவருள் முன்னின்று காக்க...
நன்றி..
முருகா...
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குமுருகா சரணம்...
பதிலளிநீக்குமுருகா.. முருகா..
நீக்குபகிர்ந்த திருப்புகழ் பாடல் மிக அருமை.
பதிலளிநீக்குதிருப்புகழ் வகுப்பு வியாழன் தோறும் நடக்கும் அலைபேசி மூலம் பாடி மகிழ்வோம்.
ஊர் திரும்பிய பின் தான் அவை எல்லாம்.
கந்தன் எல்லோருக்கும் துணை .
தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குமுருகன் திருவருள் முன்னின்று காக்க...
நன்றி.. வாழ்க நலம்..
சரணம், சரணம் ஷண்முகா சரணம்
பதிலளிநீக்கு