நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
யாவருக்குமாம் பசுவினுக்கு ஒருவாயுறை..
என்பது திருமூலர் அருளிய
திருமந்திரம்..
பசு எனில் நம் வீட்டுப் பசு அல்ல..
ஆதரவற்றுத் தெருவில்
திரியும் அப்பாவி உயிர்கள்..
அப்படியான பசுவிற்குக்
கொடுப்பது கொடையெனில்
பசுவே கொடுப்பதற்கு
என்ன பெயர்?..
பசித்த வயிற்றில்
உணவு தெய்வம்
பாலை வனத்தில்
தண்ணீர் தெய்வம்..
என்றார் கவியரசர்..
பசிக்கான
உணவு மட்டும் அல்ல!..
பசியறிந்து
உண்ணக் கொடுப்பவரும்
கொடுப்பதுவும்
தெய்வம் தான்!..
கீழுள்ள காணொளி
எதையெல்லாம்
உணர்த்துகின்றது?..
தாய்மையைச்
சக்தி என்பது நமது மரபு..
ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ
தாய்மைதான் எவ்வளவு உயர்ந்தது... கண்களை நனையச்செய்து மனதை ஈரமாக்குகிறது காணொளி. தன்னைக் காணொளி எடுப்பவரால் ஆபத்து எதுவும் உண்டா என்றும் ஒரு பார்வை பார்த்துக்கொள்கிறது பசு.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசிறந்த பதிவு. காணொளி சிறப்பாக உள்ளது. எதையும் காலமறிந்து தருவதற்கு மனம் வேண்டும். அது தன்னினம் இல்லையென்பதை அறிந்தும், அவைகளின் பசியின் தேவையறிந்து, தன்னிடமிருப்பதை கொடுக்கும் அந்த பசு மாட்டின் செயல் வியக்க வைக்கிறது. அதனால்தான் பசுவை தெய்வத்திற்கு ஒப்பிட்டு அந்தக் காலங்களிலிருந்து சொல்வழக்கு கூறி வருகிறது. வாழ்க அதன் தாய் மனது.. நல்ல பகிர்வினுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆகா...! காணொளி சிறப்பு...
பதிலளிநீக்குதாய்மைக்கு ஈடேது..
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
இது ஏற்கெனவே பார்த்திருக்கேன். என்றாலும் கண்ணில் நீரை வர வைக்கும். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநீங்கள் சொன்ன பாடல்களும் காணொளியும் அருமை.
பதிலளிநீக்குதன் குட்டியைதவிர மற்ற குட்டிகளுக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லாமல் ஆட்டுக்குட்டிகளுக்கு பால் தரும் பசு உயர்ந்த தாய் தான். கோமாதா ,
செல்லில் படம் பிடிப்பதை பார்த்தும் பயப்ப்டாமல் பசியாறும் குட்டிகளும் கொடுக்கும் பசுவும் அருமை.
இதுதான் தாய்மை.
பதிலளிநீக்குதங்கள் தாயார் விரைவில் நலம்பெற வேணும். ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு