நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 12, 2021

தேவி தரிசனம்

      


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின்
வெள்ளிக்கிழமை..


சஞ்சலங்கள் தீர்த்து வைக்கும் சமயபுரம்
அந்தச் சந்நதிக்குச் செல்ல ஒரு
நேரம் வரும்
அஞ்சல் என்று அன்னை விழி
அபயம் தரும்
அந்த அம்பிகையின் அருட்கரம்
வாழ்வு தரும்..


தஞ்சம் என்று வருவோரைத்
தாங்கியருள் தாயே..
நெஞ்சம் என்ற மலர் தனிலே
நின்று வளர்வாயே!..


புன்னை வனப் புற்றினிலே
எழுந்தவளும் நீயே..
புவி எங்கும் நலம் வாழ
வகுப்பவளும் நீயே..

உன்னையும் தான்  உய்த்துணர
ஒளிர்பவளும் நீயே..
என் குலத்தில் சுடராக இருந்த ருள்வாய் தாயே!..

ஆனந்த மாரியைப் பொழிபவளே 
அடுந்துயர் மாறிடச் செய்பவளே..
நானுந்தன் பேர்தனை மறவாமல்
நாளும் வாழ்ந்திட அருள்வாயே!...

அம்மா.. அம்மா..
அம்மா..

அன்னையின் திருவடிகளில்
தலை வைத்து வணங்கி
அமைதியையும் ஆனந்தத்தையும்
ஆயுளையும் ஆரோக்கியத்தையும்
வேண்டிக் கொள்வோம்..


சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாம் கரமுள நாக பாசாங்குசம்
மாலங் கயன் அறியாத வடிவுக்கு
மேலங் கமாய் நின்ற மெல்லியலாளே!..
-: திருமூலர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. அன்னையின் திருவடிகளில் 
    தலைவைத்து வணங்கி 
    அமைதியையும் ஆனந்தத்தையும் 
    ஆயுளையும் ஆரோக்கியத்தையும் 
    வேண்டிக்கொள்வோம்.


    திருவடி பணிந்து வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
  2. கடைசி வெள்ளிக்கிழமை. அனைவர் வாழ்விலும் அம்பிகையின் அருள் கிடைத்து அமைதியான முறையில் வாழவும் பிரார்த்திப்போம். அம்பிகை தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
  3. அன்னையின் திருவடிகளில்

    பணிந்து வேண்டுவோம்.

    நீங்கள் எழுதிய பாடலை பாடி வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. தரிசனம் , பாடல், சிறப்புடைத்து. 'உங்கள் தொடர் பதிவுகள் இப்போது தான் கவனித்தேன். 
    வாழ்த்துக்கள்.
    சுப்பு தாத்தா. 

    பதிலளிநீக்கு
  5. அன்னையின் சிறப்பு தரிசனம். அம்பிகை அருள் புரியட்டும்

    பதிலளிநீக்கு
  6. அன்னையின் பூரண அருள் இந்த நாள் மட்டுமன்றி வரும் எல்லா நாட்களிலும் கிடைத்திடட்டும். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மனதிற்கு நிறைவைத் தருகின்ற தேவியர் தரிசனம்.
    அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தை கடைசி வெள்ளியன்று அருமையான தெய்வ பகிர்வு. சமயபுரம் அம்மன் படங்கள் மிக அருமையாக இருக்கின்றன. அன்னையை மனமுருகி தரிசனம் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. சமயபுரம் மாரியம்மனின் படம் அழகு. பாடல் நீங்கள் இயற்றியதா? நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..