நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின்
மூன்றாம் நாள்..
காணும் பொங்கல்..
கிராமங்களில்
இளையோருக்கான
குறிப்பாக
இளம்பெண்களுக்கான
திருநாள்..
ஊர் மந்தையில்
அல்லது
கோயில் வாசலில்
கோலாட்டம் கும்மி - என
குதுகலிக்கும் நன்னாள்.
கிராம தேவதையை அழைத்துப்
பொங்கலிடும் வழக்கம்
தஞ்சை கும்பகோணம்
பகுதிகளில்
இன்றும் நிகழ்கின்றது..
***
இன்றைய கவிதை
அன்பின் ஸ்ரீராம் அவர்கள்
எபியில் கொடுத்த
ஈற்றடிக்கானது..
அவர் தமக்கு நன்றி..
பாளைப் பனி முகத்தில்
புதுமஞ்சள் திலகமிட்டு
நாளை நமது என்று
நகர்வீதி நடந்துவந்தால்
காளைக்கும் வந்திடுமே காதல்..
***
பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்..
ஃஃஃ
கொரோனா பயங்கள், கட்டுப்படுகள் இலலாதிருந்தால் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய திருநாள்...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதாமதத்திற்கு மன்னிக்க..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
சும்மாவே கவிதைகளையும் செ(ம்)மையாய் பின்னுவீர்கள். ஈற்றடி கொடுத்தால் அதை மட்டும் விட்டு வைப்பீர்களா என்ன... அருமையான கவிதை.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குஇந்த ஈற்றடி தாங்கள் கொடுத்ததே..
மறந்து விட்டீர்களா!..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அதெப்படி மறக்கும்? நன்றாய் நினைவிருக்கிறது.
நீக்குநன்றி.. நன்றி..
நீக்குஅன்பான பொங்கல் வாழ்த்துகள். ஶ்ரீராம் எப்போ ஈற்றடி கொடுத்தார் எனத் தெரியலைனாலும் கவிதை அருமை. உங்களுக்குச் சொல்லணுமா? எப்போவும் போல் அழகான தமிழில் எழில் கொஞ்சும் கவிதை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குதாமதத்திற்கு மன்னிக்க...
வாழ்த்துரைக்கு நன்றியக்கா..
அழகிய படங்கள்
பதிலளிநீக்குபொங்கலோ பொங்கல் ஜி
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
தாமதத்திற்கு மன்னிக்கவும்...
வாழ்த்துரைக்கு நன்றி..
குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
தாமதத்திற்கு மன்னிக்க...
வாழ்த்துரைக்கு நன்றி..
சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குபாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வரும் காலம் அனைவருக்கும் சிறப்பாகவே அமைந்திட பிரார்த்தனைகள்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
தாமதத்திற்கு மன்னிக்க...
வாழ்த்துரைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி..
அன்பின் நல்வாழ்த்துகளுடன்...