தமிழமுதம்
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது..(102)
ஞாலத்தின் மாணப் பெரிது..(102)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 20
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்..
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
*
தித்திக்கும் திருப்பாசுரம்
***
சிவ தரிசனம்
திருத்தலம்
திருநெல்வேலி
திருநெல்வேலி
இறைவன் - ஸ்ரீ நெல்லையப்பர்
அம்பிகை - ஸ்ரீ காந்திமதி
அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலியுறை செல்வர்தாமே..(3/92)
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
அன்பு துரைக்கு
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம். மிக முக்கியமான பாசுரம் முப்பத்து மூவர்.
எல்லாப் பாடல்களுமே சிறப்புதான்.
இந்தப் பாடலுக்கு மேலும் சிறப்புச் சொல்வார்கள்.
துயில் எழுப்புவதிலும் ஆகச் சிறந்த பாசுரம்.
கண்ணன் முப்பத்து மூவருக்கு முன்.
நம்மிடம் வந்து நம் கலியையும் தீர்க்க வேண்டும்.
நெல்லை காந்திமதியையும் அப்பனையும்
தரிசனம் செய்விக்க வைத்ததற்கு மிக நன்றி.
தேர்ந்தெடுத்து அந்தந்த ஊருக்கான பாடல்களையும்
பதிவிடுகிறீர்கள்.
திருக்கோஷ்டியூர் தரிசனம் காணக் கிடைக்காத ஒன்று.
//வான் வந்த அமுதினை'' எங்களையும்
பாட வைத்தீர்கள்.
தங்களுக்கு நல்வரவு...
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... திருக்கோஷ்டியூர் தரிசனம் செய்து பல வருடங்கள் ஆகி விட்டன...
மீண்டும் எப்போது கிடைக்குமோ!..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
இன்றைய மார்கழி முத்து நன்று.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
திருக்கோஷ்டியூர், திருநெல்வேலி போனதெல்லாம் கனவு போல் இருக்கு. திருநெல்வேலிக்கு இரண்டாம் முறை போனப்போப் படிகளில் ஏற முடியலை. :( பிடிமானத்துக்கு எதுவும் கிடைக்கலை. திரும்பிட்டோம். இங்கே அற்புதமான தரிசனம் கிடைக்கப் பெற்றது. நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மார்கழி தொகுப்பும் எப்போதும் போல் மிக அருமை.
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌம்ய நாராயணனை தரிசித்து கொண்டேன். இன்றுதான் இந்த ஊரையும், இந்தப் பெருமாளையும் கண் குளிர கண்டு கொண்டேன்.
ஹரி ஓம்.நமோ நாராயணா.. நாராயணா..
திருநெல்வேலி நெல்லையப்பரையும், அன்னை காந்திமதியையும் சேவித்துக் மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது. முன்பு போல் அடிக்கடி செல்ல முடியவில்லை. இங்கு இன்று காலையிலேயே நெல்லை, அப்பனையும், அம்மையையும் கண்டு பரிபூரண ஆனந்தத்தை அடைந்து விட்டேன். பதிவுக்கு கருத்துகள் தரத்தான் தாமதமாகி விட்டது. வருந்துகிறேன்.. மன்னிக்கவும். இன்றைய பாடல்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாசுரங்களை படித்தேன்.
பதிலளிநீக்கு