நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 02, 2020

வாழ்க நீ எம்மான்


நாடும் வீடும் நலம பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஸ்ரீ காந்தி ஜெயந்தி
அண்ணலின் மலரடி
போற்றுவோம்..


வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க!..
-: மகாகவி பாரதியார் :-


பாரதத்தின்
தவப்புதல்வர்களுள் ஒருவரான
ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி
அவர்களது பிறந்த நாளும்
(2.10.1904)
இன்று தான்..


நல்லோர் பலர் வாழ்ந்த
இத்திருநாட்டில்
எளிமையின் இலக்கணமாகத்
திகழ்ந்த பெருந்தலைவர்
ஜோதியாகிய (2.10.1975) நாள்
இன்று..
***

பன்னிரண்டாண்டில்
ஒருமுறை மலரும்
குறிஞ்சி மலர்களைப் போலே
தன்னலம் இல்லாத்
தலைவர்கள் பிறப்பார்
ஆயிரத்தில் ஒருநாளே!..
-: கவியரசர் :-
***
தன்னலம் இல்லாத
தலைவர்கள் பிறப்பது
எந்நாளோ!..
அந்நாளுக்காகப்
பிரார்த்திப்போம்!..
 ***
 நாடு வாழ்க..
நல்லோர் தம் புகழ் வாழ்க!..
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. மகானின் நினைவைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அருமையான நினைவஞ்சலி. அவர் பெருமையை காலம் உள்ளவரை போற்றுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வாழ்க ! வாழ்க ! வாழ்கவே!
    வாழ்க நீ எம்மான்
    நினைவஞ்சலி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க பாரதம்..

      நீக்கு
  5. சென்ற வருடம் நீங்கள் கர்ம வீரரையும் நினைவு கூர்ந்திருந்தீர்கள். இந்த வருடமும் எதிர்பார்த்தேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      புரட்டாசி மாதம் அனுசரித்துக் கொண்டு இருக்கையில் மிகக் கடுமையான பணிச் சுமை..
      ஏதொன்றையும் நினைத்துப் பார்க்க முடிய வில்லை...

      வழக்கமாக சமைத்து உண்பதற்கும் பிரச்னையாகி விட்டது..

      கொஞ்சம் தடுமாறி விட்டேன்.. பதிவினை சரி செய்திருக்கிறேன்...

      அன்பின் கருத்துரைக்கு மீண்டும் நன்றி..

      நீக்கு
    2. காந்தியுடன் சேர்த்து சாஸ்திரிஜி, காமராஜர் ஆகியோரையும் நினைவு கூர்ந்தமை சிறப்பு.யாருமே சாஸ்திரிஜிக்கும் இன்றுதான் பிறந்தநாள் என்பதை நினைவு கூரவே இல்லை. :(

      நீக்கு
  6. ஆகா... சிறப்பித்து விட்டீர்கள் ஐயா... அருமை... நன்றி...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..