நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி இரண்டாம்
சனிக்கிழமை..
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
புண்ணியனின் பூம்பாதங்களைப்
போற்றுவோம்..
***
தஞ்சை மகர்நோன்புச்சாவடி
ஸ்ரீ ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள்
திவ்ய தரிசனம்..
***
தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணாஅவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மாமலைமேய
கோணாகணையாய் குறிக்கொள் எனைநீயே.. (1042)
-: திருமங்கையாழ்வார் :-
வரங்கருதித் தன்னை வணங்காத வண்மை
உரங்கருதி மூர்க்கத் தவனை நரங் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே
அங்கண்மா ஞாலத்து அமுது.. (2265)
-: பூதத்தாழ்வார் :-
***
புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம் சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து..(2376)
-: பேயாழ்வார் :-
***
சென்று வருக பாலு..
சென்று வருக..
மீண்டும் இங்கே பிறந்து
இசையை மழையாய் பொழிக..
***
கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ
இன்றைய தரிசனம் நன்று
பதிலளிநீக்குஎஸ்.பி.பி. அவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல்கள்...
பெருமாளின் இனிய தரிசனம்.
பதிலளிநீக்குஎஸ்பிபி என்றும் வாழ்வார் நம்முடன் தன் இனிய பாடல்கள் வழியாக.
ஆழ்ந்த இரங்கல்கள்...
பதிலளிநீக்குஅவரின் பாடல் கேளாத நாள் இல்லை... பாடல்களில் என்றும் வாழ்வார்...
நரசிங்கனின் தரிசனம் நன்று.
பதிலளிநீக்குஎஸ்பிபி - அவரது ஆன்மா நற்கதியடைய எனது பிரார்த்தனைகளும்.
சார்வரியில் போய்ச் சேர்ந்திட்டார் - ஒரு
பதிலளிநீக்குசோர்விலாது பாடி மகிழ்வித்தவர்
நரசிம்மரின் தரிசனம் மிக அருமை.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக அழகு. பாசுரங்களை படித்து தரிசனம் செய்து கொண்டேன்.
அவரின் பாட்டு காலை பக்தி பாடலாக ஒலிக்கும், இரவு மனதை மகிழ்விக்கும் .
நாள் முழுவதும் அவர் பாடல் ஒலித்து கொண்டே இருக்கும்.
அவர் பாடிய பாடல்களில் என்றும் வாழ்வார்.
இந்தக் கொரோனா பல நல்லுயிர்களைக் கொண்டு சென்று விட்டது. எஸ்பிபியும் அதற்கு பலியாகி விட்டார். வீடு திரும்புவார் என்னும்போது மரணம் வந்து அழைத்துச் சென்று விட்டது. :(
பதிலளிநீக்குநரசிம்மர் தரிசனம் அருமை, பரவசம். பாசுரங்களும் தேர்ந்தெடுத்த முத்துக்கள்.
பதிலளிநீக்கு