நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 08, 2020

அம்மன் தரிசனம் 3


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
சென்ற ஞாயிறன்று
ஆவணி மாத தொடர் பதிவினை
வெளியிட இயலவில்லை..

இன்றைய தினம்
தென்காசிக்கு அருகிலுள்ள
அச்சங்குட்டம் எனும் ஊரிலுள்ள
ஸ்ரீ முத்தாரம்மன் தரிசனம்..

திருக்கோயில் நிர்வாகத்தினர்
FB  வழியாக
அம்மனின் திருக்கோலங்களை
வழங்கியிருந்தனர்...

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இரவு ஒன்பதரை மணியளவில்
வார்த்தைகளை வழங்கினாள்
அம்பிகை..

அன்னை அவளது அருள்
அனைவரையும் வாழ வைப்பதாக!..



முத்து முத்து சொல்லெடுத்து
முத்தழகைப் பாட வந்தேன்...
முன்வினையைத் தீர்க்க என்று
நின்னடியைத் தேடி வந்தேன்...

நித்தம் எங்கள் வாசலுக்கு
பெத்தவளே நீ காப்பு..
உற்றவளாய் நீ இருக்க
மற்ற துணை வேறெதற்கு..


பித்தங் கொண்ட நெஞ்ச கந்தான்
தத்துங் கிளி ஆகிடுமா...
வித்தகி உன் சந்நிதியில்
முத்து மொழி பேசிடுமா..

என்னென்னவோ தீவினைகள்
எங்களையும் வாட்டுதம்மா..
எந்த பிழை ஆனாலும்
வந்து நீயும் ஓட்டுமம்மா...

முத்தெடுக்கும் வித்தகியாய்
முத்தார மாரியம்மா
முன் நடக்கும் நாயகியாய்
முத்தழகு தேவியம்மா..

குற்றாலச் சாரலிலே
குளிர் காற்றும் பாடுதம்மா..
வற்றாத அருள் சுரந்து
தமிழ்க் குடியை வாழ்த்துமம்மா..

தங்க நிற சூரியனாய்
தாய் முகமும் பளபளக்கும்
மஞ்சள் நிற மல்லிகையாய்
மாரி முத்து சிலுசிலுக்கும்..

தேடிவந்த கண்களுக்குள்
நிம்மதியும் ஊற்றெடுக்கும்
தேவி உந்தன் அருளாலே
தீபங்களில் வழி கிடைக்கும்...

சொல்லெடுத்துச் சொல்லு என்று
சொக்கத் தங்கம் சொல்லுரைத்தாய்
என்ன சொல்லி நான் உரைக்க
என்னை நீயும் வாழ வைக்க!...
***

முத்தாரம்மன் திருவடிகள்
போற்றி.. போற்றி..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. அருமையான அம்மன் தரிசனம். அம்மன் முகத்தின் அழகும், புன்முறுவலில் தெரியும் கருணையும் சிலிர்ப்பைத் தருகிறது. நல்லதொரு பாடலை இரவென்றும் பார்க்காமல் கொடுத்த அன்னைக்கு நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  2. அம்மனின் தரிசனம் கிடைத்தது.
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அம்மன் படங்கள் மிக அழகு. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போன்ற கருணை நிரம்பிய வதனம். படங்களிலிருக்கும் அனைத்து அம்மனின் கண்களிலிருந்து கருணையின் பூரண அருளை நாம் பெற்றுக் கொண்ட உணர்வை தந்தது.

    அம்மனின் அருளால் தாங்கள் இயற்றிய பாடலை பாடி மகிழ்ந்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. தெய்வீக அருளைப் பெற்ற உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள். உலக மக்கள் அனைவரையும் அம்மன் தன்னருளால் காத்து ரட்சிக்கட்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      கருணை மிகும் அம்பிகை அனைவரையும் ரக்ஷிக்கட்டும்...
      கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அம்மன் என்றாலே அழகுதான். அச்சங்குட்டம சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன்.
    என்னைப் பொறுத்தவரை பட்டீஸ்வரம் துர்க்கையம்மனின் பார்வையிலேயே நான் வளர்ந்துவருகிறேன். துர்க்கையம்மனை நினைத்தாலும், பார்த்துவிட்டு வந்தாலும் மனம் மிகவும் நிறைவாக இருப்பதை உணர்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தமிழகத்தின் புகழ்மிக்க சந்நிதிகளுள்
      பட்டீஸ்வரம் துர்கையின் சந்நிதியும் ஒன்று.. ஆனால் -

      அவள் பழையாறை சோழன் மாளிகையில் கொலு வீற்றிருந்தவள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. அம்மன் தரிசனம் செய்தேன் நீங்கள் எழுதிய அம்மன் பாட்டு படித்து.
    அம்மன் அனைவருக்கும் நலம் தர வேண்டும்.

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்...

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..