மங்கலகரமான மகா தீபத்திருநாளை அனுசரித்து
ஜோதி ஸ்வரூபமாகிய
திரு அண்ணாமலை திருக்கோயிலில்
கார்த்திகைப் பெருந்திருவிழா
கடந்த முதல் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..
இந்நிகழ்வின் திருக்காட்சிகளை
அன்பர்களால் வலையேற்றப்பட்டுள்ளது...
அத்திருக்காட்சிகளுள் சில
இன்றைய பதிவில்..
வலையேற்றிய அன்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்...
திருக்கோயில்
திரு அண்ணாமலை
இறைவன் - அண்ணாமலையார்
அம்பிகை - உண்ணாமுலையாள்
தீர்த்தம் - சிவகங்கை
பதிவில் இடம்பெற்றுள்ள திருப்பாடல்கள்
ஞானசம்பந்தப் பெருமான் அருளியவை..
முதலாம் திருமுறை..
திருப்பதிக எண் 69..
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவித் தொருவின் நிரை ஓடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே..
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
தழைத்த சடையர் விடையொன்றேறித் தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே...
எனைத்தோரூழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர் உறைகோயில்
கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேற் குழலூத
அனைத்துஞ்சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே...
பந்தித்து இருந்த பாவந்தீர்க்கும் பரமன் உறைகோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை முதுகல் வரைகண்மேல்
அந்திப்பிறை வந்தணையுஞ் சாரல் அண்ணாமலையாரே..
அல்லாடரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை
நல்லார்பரவப் படுவான் காழி ஞான சம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடலான பத்தும் இவைகற்று
வல்லாரெல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே...
***
தீபத் திருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்
தருமபுரம் ஸ்ரீ குரு மகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள்
கடந்த 4.12.2019 அன்று தமது தொண்ணூற்று மூன்றாவது வயதில்
சிவ மகாஜோதியுள் பரிபூணம் எய்தினார்கள்...
அன்னாரது திருவடிகளுக்கு
எளியேனின் அஞ்சலி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
எல்லாப் படங்களும் அருமையான பகிர்வு என்றாலும் நம்மாளு நின்ற திருக்கோலத்தில் மிக அழகாய்க் காணப்படுகிறார். பகிரக் கொடுத்த அன்பர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...
நீக்குஅண்ணாமலை தரிசனம் செய்தேன். அருமையான படங்கள், காணொளி.
பதிலளிநீக்குகுருமகா சந்நிதானத்தை பல முறை சந்தித்து இருக்கிறோம்.
நேற்று முழுக்க என் கணவர் அவர்களின் நினைவுகளை பேசி கொண்டே இருந்தார்கள்.
பூம்புகார் கல்லூரி பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தருமைஆதீனகலைகல்லூரியில் தான் பணிபுரிந்தார்கள்.
என் கணவரின் பெரியப்பாவிற்கும் சந்நிதானத்திற்கும் நெருங்கிய நட்பு பெரியப்பாவிடம் தேவாரம் படித்தவர்கள் . இவர்களை பார்க்கும் போது நினைவாக பெரியப்பாவை பற்றி பேசுவார்கள்.
என் கணவர் கல்லூரி விழாவில் பேசும் பேச்சுகளை தனியாக அழைத்து பாராட்டுவார்கள்.
அன்னாராது திருவடிகளுக்கு என் அஞ்சலிகளும்.
இதைப் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கலாமே கோமதி அரசு மேடம்.
நீக்குஆதீனங்களைப் பற்றிய பதிவில், உங்கள் கணவரது கருத்துக்களும் இடம் பெறட்டும்
நீங்கள் கேட்டதை கணவரிடம் சொல்லி விட்டேன்.
நீக்குஎழுதி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள், அவர்கள் எண்ணங்களை.
நன்றி உங்களுக்கு நெல்லைத் தமிழன்
குரு மகா சன்னிதானம் அவர்களை வைத்தீஸ்வரன் கோயில் மண்டலாபிஷேகக் கிருத்திகை விழாவின் போது தரிசனம் செய்திருக்கிறேன்...
நீக்குஎனக்குத் தெரியும்...
தருமபுரம் ஆதீனத்துடன் தங்கள் குடும்பத்தினருக்குப் பழக்கம் இருக்கும் என்று...
நெல்லை அவர்களது கோரிக்கை தங்களது தளத்தில் பதிவாக வர இருப்பதில் மகிழ்ச்சி...
ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்...
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பதிலளிநீக்குபெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமுழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்னம் அறுமே!
மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅண்ணாமலையாரை தரிசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
தீபத் திருவிழா படங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன.
பதிலளிநீக்குதருமபுரம் மஹா சன்னிதானம், தன் இவ்வுலகக் கடமைகளை முடித்துகொண்டு இறைவனிடம் ஐக்கியமாகியிருப்பார்.
அன்பின் நெல்லை...
நீக்குஇத்தகைய குரு ஸ்வாமிகளைத் தரிசிப்பதே புண்ணியம்...
தருமபுரம் சன்னிதானத்தின் கீழ்தானே வைத்தீஸ்வரன் கோவில்
பதிலளிநீக்குஆம் ஐயா...
நீக்குவைத்தீஸ்வரன் கோயில். திருக்கடவூர். திருவையாறு முதலான 25 திருக்கோயில்கள் தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளவை...
கடந்த ஆகஸ்ட் மாதம் தான்
வைத்தீஸ்வரன் கோயில் திருப்பணி தொடங்கப் பெற்றது...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அழகான படங்கள்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
தீபத் திருவிழா படங்களை ரசித்து தரிசித்தேன்.
பதிலளிநீக்கு