தமிழமுதம்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு..(081)
***
அருளமுதம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 14
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***
ஆழ்வார் அமுதம்
ஓம் ஹரி ஓம்
***
எம்பிரான் எனக்கமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழலேந்து கையானும்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக் கண்டன்
வம்புலாம் பொழிற் பிரமபுரத் துறையும் வானவனே..(2/40)
-: திருஞானசம்பந்தர் :-
***
***
தேவி தரிசனம்
- அபிராமிபட்டர் -
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
படித் தேனை படித்தேன், பருகினேன், ருசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மகிழ்ச்சி... நன்றி...
கட்டுமலையின் மேலே ஏறிச் சட்டைநாதரைப் பார்த்துட்டு வந்த நினைவுகள் எல்லாம் நெஞ்சில் மோதுகின்றன. அருமையான இறை தரிசனத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதோணிபுரம் எனப்படுவது சீர்காழி...
நீக்குஅங்கே தரிசனம் செய்யும் பாக்கியம் இன்னும் எனக்குக் கிட்டவில்லை...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...
இன்று சீர்காழி தோணியப்பர் தரிசனம் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபாடல்கள் , படங்களுடன் பதிவு மிக அருமை.
வாழ்த்துக்கள்.
தரிசனம் அருமை...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
தமிழமுதம் நன்று ஜி
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
படித்தேன். ரசித்தேன்.... அனைத்தும் தேன்.
பதிலளிநீக்குலக்ஷ்மி வராகர் படம் ரொம்பவே பிடித்தது. நன்றி.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...