நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 19, 2019

வளமே நிறைக

அன்பின் நண்பர்கள்
அனைவருக்கும் வணக்கம்...

அடுத்தடுத்த பதிவுகளின் வழியே
தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி...

இங்கு வந்த நாளாக
கைத்தொலைபேசி வழியாகத் தான் பதிவுகளைச் செய்கிறேன்...

இங்கு நோன்புப் பொழுது முடிவதற்கும்
மாலை மயங்கி இரவு சூழ்வதற்கும் சரியாக இருக்கும்...

பகல் பொழுதில் கொடும் வெயிலில்
பயணிக்கலாம்..

ஆனால் -
பொது வெளியில் தாகத்துக்கு
நீர் அருந்தக் கூட இயலாது..

இந்நிலையில் -
எங்கு செல்வது?.. எதைப் படம் பிடிப்பது!...

இன்றைய பதிவில் -
நேற்று வைகாசி விசாகத்தன்று
தஞ்சை பெரிய கோயிலில்
ஸ்ரீ ப்ரஹந்நாயகி அம்பிகை சந்நிதியில்
நிகழ்ந்த பூச்சொரிதல்..

மற்றும்
Fb வழியே கிடைத்த சில காட்சிகள்..



பூக்குவியலின் நடுவே
புவனத்தைப் பூத்தவள்
அம்பிகை மனங்குளிர்ந்து
நல்லோர் அனைவரையும் காத்தருள்வாளாக..

ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி - மேல அலங்கம் - தஞ்சை
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில்
தஞ்சை


திருப்பரங்குன்றம்
சொல்லச் சொல்ல சுகம் கொடுக்கும்
சூழ்ந்து வரும் பகை கெடுக்கும்...
எண்ண எண்ண வரங்கொடுக்கும்
எதிர்ப்புகளை வேல் தடுக்கும்!...

வெற்றி வேல்... வீர வேல்!...



நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்..
-: மகாகவி :-

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
ஃஃஃ

19 கருத்துகள்:

  1. படங்கள் பரவசம் அளிக்கின்றன. குறிப்பாக கோபுரத்தின் மேல் உள்ள நிலவும்,பால் அபிஷேகம் காணும் முருகனும் மனதை குளிர்விக்கின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. குட்மார்னிங்.

    படங்களை ரசித்தேன். மகள் வீட்டில் கணினி இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      மகள் வீட்டில் மடி கணினி இருக்கிறது..

      அது இன்னும் வசப்படவில்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. மொபைல் வழி கஷ்டம் புரிகிறது.

      ஆனாலும் பதிவிட்ட உங்கள் உழைப்பு தெரிகிறது.​

      நீக்கு
  3. அருமையான படங்கள். மொபைல் வழியே இத்தனை அழகாகப் படங்களும் சேர்த்துப் பதிவிட்டிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி. அம்பிகையின் பூச்சொரிதலும், மகனின் பால் அபிஷேஹமும் கண்ணுக்கு விருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  4. அனைத்து படங்களும் அழகு.
    அருமையாக தரிசனம் செய்ய வைத்து விட்டீர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே!
    வாழ்க வையகம்!
    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      வாழ்க வையகம்...

      நீக்கு
  5. அபுதாபியிலிருந்து தஞ்சையின் தரிசனங்கள் அளித்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. வைகாச விசாகத்துக்கு அழகான பதிவு.
    அன்னையும் மகனும் ஆனந்தக் காட்சி அளிக்கிறார்கள்.

    தங்கள் விடுமுறை இனிதே கடக்கும்.
    வெய்யில் அதிகமாகத் தெரியுமே அபுதாபியில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      இங்கு வெயில் அதிகம் தான்..
      வெளியில் சென்று வருவது பிரச்னை..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. அழகான படங்கள் அய்யா...

    சென்ற வாரம் போன் பண்ணினேன் அய்யா... ரிங் போனது... எடுக்கலை.

    வியாழன் இப்தார் பார்ட்டி..

    வெள்ளி சனி வேலை என நகர்ந்து விட்டது...

    இந்த வாரம் கண்டிப்பாக சந்திக்கிறேன் அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. தரிசனம் பெற்றோம். அலைபேசி வழியாக எப்படிப் பதிவிடுகின்றீர்கள். கடினம் என்பதும் தெரிகிறது. அலைபேசி வழியாகக் கருத்திடவே மிகவும் கடினமாக இருக்கிறதே. மிக்க நன்றி ஐயா/அண்ணா

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன் மற்றும் கீதா..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

      கைத்தொலைபேசியில் பதிவிடுவது சிரமம் தான்...

      எனினும்
      எனது பணியைச் செய்தாக வேண்டுமே!...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..