நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 05, 2019

பூம்புகார் 5

சிலப்பதிகாரக் கலைக்கூடத்தைப் பார்த்தாகி விட்டது...

மற்ற இடங்களைக் காட்டிலும்
கலைக்கூட வளாகம் சுத்தமாக இருக்கின்றது..

இருந்தாலும் இன்னும் பிரகாசமான விளக்குகளைப் பொருத்துவது நல்லது...

சிற்பப் பலகைகளுக்குக் கீழாக
அதன் விவரங்களை எழுதி வைத்திருக்கின்றார்கள்..

ஆனாலும் அவை அழிந்தும் அழிக்கப்பட்டும் இருக்கின்றது...

சென்றைய பதிவில் - ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள்
பூம்புகார் நகரின் மாதிரி வடிவமைப்பு இருக்குமே!..
அதைப் பார்த்தீர்களா?..  - என்று கேட்டிருந்தார்கள்...

அப்படி ஒன்றினைப் பார்த்ததாக நினைவில்லை...

அதேபோல - முனைவர் திரு ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்
அங்கிருக்கும் புத்த விஹாரைப் பார்த்தீர்களா?.. - என்று கேட்டிருந்தார்கள்...

அந்த விவரம் இப்போது தான் அறிகிறேன்...
புத்த விஹாரைக் குறித்த வழிகாட்டிப் பலகையை கவனித்ததாக நினைவு இல்லை...

இன்னும் சதுக்கப் பூதத்தின் சிலை கூட இருக்கிறது என்கிறார்கள்...

இன்றைய பதிவில்
கலைக்கூடத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தொடர்கின்றன...

சேரன் செங்குட்டுவனின் வடதிசைப் படையெடுப்பு
கங்கைக் கரையில் பாடி வீடு 
கனக விசயரின் முடித்தலை நெறித்து..
பத்தினிக் கோட்டத்தில் கண்ணகி தேவி 





கலைக்கூடத்தின் நடு முற்றத்தில் புல்வெளிக்கு நடுவே கண்ணகிக்கும் மாதவிக்கும் ஆளுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது..


கலைக்கூடத்தின் வெளியே
இருபுறமும் கரிகால் சோழனுக்கும் இளங்கோவடிகளுக்கும்
சிலை வடிக்கப்பட்டுள்ளது...

ஆனால் பராமரிப்பு தான் இல்லை...

கரிகாற்சோழன் 
இளங்கோவடிகள்  
அப்படி இப்படி பிரச்னைகள் இருந்தாலும்
கலைக்கூடத்தை விட்டு வெளியே வரும்போது
பெருமிதமாகத் தான் இருந்தது...



எப்படியெல்லாமோ சிறப்புற்றிருக்க வேண்டிய
பூம்புகார் கலைக்கூட வளாகங்கள்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அழகு குன்றியிருக்கின்றன...

இனி திருவெண்காடு செல்லவேண்டும்...
பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம்..

கடற்கரை ஓரமாக அசைவப் பிரியர்களுக்கு
சுடச்சுட மீன் வகைகள் கிடைக்கின்றன...

நம்மை மாதிரி அப்பாவிகளுக்கு
ஒரு சில குளிர்பானக் கடைகள் மட்டுமே...

விடுமுறை நாட்களில்
மட்டுமே பலவகையான கடைகள் அமைக்கப்படுகின்றன...

சாலையின் அந்தப் பக்கம் - சிவனே!... - என்று காவல் நிலையம்!...

மயிலாடுதுறைக்குச் செல்லும் பேருந்து புறப்பட்டது..
அதில் ஏறி இரண்டு கிமீ., தொலைவில் மேலையூர் பிரிவு சாலையில் இறங்கிக் கொண்டோம்..

அங்கிருந்து திருவெண்காட்டுக்குப் பயணப்பட வேண்டும்...

பேருந்துக்காக காத்திருந்த இடத்திலிருந்து -
சாலையின் தென்புறமாக ஒரு கோயில்...

அது பத்தினிக் கோட்டம்.. கண்ணகியின் கோயில்...

வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் திறக்கப்படுவதாக செய்தி...

ஸ்ரீ கண்ணகி தேவி - மேலையூர் - பூம்புகார்  
ஆடி மாதத்தின் அனுஷ நட்சத்திரத்தை
கண்ணகி வீடு பேறடைந்த நாளாகக் கொண்டு விசேஷங்கள் நிகழ்கின்றன...
மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் - கண்ணகி 
இன்னொரு சமயம் இங்கு சில நாட்கள் தங்கியாவது எல்லா இடங்களையும் காண வேண்டும் என்று நினைத்துக் கொண்ட வேளையில் -

திருவெண்காடு செல்வதற்கான பேருந்து வந்து நின்றது...

எல்லாரையும் நல்வழிப்படுத்துக தாயே!.. - என்று வணங்கியபடியே
திருவெண்காட்டிற்குப் புறப்பட்டோம்...

கற்புக்கரசியே போற்றி.. போற்றி..
காளீம் ஸ்ரீகண்ணகீம் நமாமி
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. படங்களுக்கு தகுந்த விளக்கங்கள் அருமை ஜி தெளிவாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு...
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அழகான படங்கள். நன்றாக எடுத்திருக்கிறீர்கள். இந்தச் சிற்பங்கள் கலைக்கூடத்துக்கென உருவாக்கப்பட்ட சிற்பங்களா? அருமையாக வடித்திருக்கின்றனர். இதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அங்கேயே மேலையூரில் கண்ணகிக்குக் கோயில் இருப்பதும் புதிய செய்தி. அடுத்துத் திருவெண்காட்டுப் பயணத்துக்குக் காத்திருக்கோம். 2,3 முறை போயிருக்கோம்! என்றாலும் உங்கள் பார்வையில் பார்க்கக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      திருவெண்காடு பதிவுகள் முன்பே கொடுத்திருக்கிறேன்....

      நாளை இணைப்பு தருகிறேன்...

      மகிழ்ச்சியும் நன்றியும்...

      நீக்கு
  3. படங்கள் அருமையாக இருந்தது. அதிலும் சிற்பத் தொகுதிகள் சுவர்களில் இருக்கும் படம், ஒவ்வொரு சிற்பத்தின் அளவைச் சொன்னது.

    ஆமாம்... சிற்பத்தில் கண்ணகிக்கும் மாதவிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டுமே அழகாகத்தானே இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      அதானே... என்ன வித்தியாசம்?...

      அந்தக் கோவலன் எதுக்கு மயங்கினான்!...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  4. அழகான படங்கள்... அருமையான விளக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  5. புத்தவிஹார் பட்டினத்தார் கோவில் எதிரில் நகரத்தார் சத்திரம் பக்கம் இருக்கிறது தொல்பொருள் ஆராய்ச்சி வசம் உள்ளது. அகழ்வாராய்ச்சி செய்து வருவதால் கட்டம் கட்டி வைத்து இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  6. மேலையூர் கண்ணகியை உங்கள் தளத்தில் தரிசனம் செய்து கொண்டேன்.
    செல்லத்தம்மனை பார்க்க ஓரு நாள் போக வேண்டும்.
    அழகான படங்களுடம் மீண்டும் கலைக்கூடம் நினைவுகள் வந்தன.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இன்று ஆன்மீகதகவலில் திருவெண்காட்டில் நந்திக்கு தொட்டி கட்டி அபிஷேகங்கள் செய்து பூஜை செய்து தண்ணீர் விடபட்ட காட்சியைப் பார்த்தேன். மழை வேண்டி இந்த பிரார்த்தனை. மழை பெய்து மக்கள் துயர் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்... தாமதமான வருகை இன்று. படங்கள் பார்த்து உள்ளே சிற்பங்கள் இருப்பதாய் நினைத்துக்கொண்டிருந்தேன். அங்கு வைக்கப் பட்டிருக்கும் படங்களை சிறப்பாகப் படம் டுத்திருக்கிறீர்கள் என்று புகைப்படம் பார்த்தல் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் சிறப்பு. கண்ணகியும் மாதவியும் சிலைவடிவில் ஒன்றாக நிற்கும்படியானது போலும்! ரசிக்கக் கோவலன் இல்லை.

    பதிலளிநீக்கு
  10. கரிகாற்சோழன் வாழை உருவத் தயாராய் இருக்கிறார்.

    சிம்மாசனம் துறந்த இளங்கோவடிகள் சிலை சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கரிகாற்சோழன் வாழை //

      ச்சே... கூகிள்!

      வாளை என்று படிக்கவும். கரிகாற்பெருவளத்தார் இதைப் படித்திருந்தால் என்னை வெட்டிப்போட்டிருப்பார்!

      நீக்கு
  11. பூம்புகார் செல்லும்வாய்ப்பு கிடைக்கவில்லை

    பதிலளிநீக்கு
  12. படங்கள் மனதை ஈர்க்கிறது மிக அழகாகப் பிடித்திருக்கிறீர்கள். முதலில் டக்கென்று ரயில் போன்று தெரிந்தது. இரு படங்களும். கலைக்கூடத்தின் வெளிப்புற படம் மிக அழகாக இருக்கிறது. கலைக்கூடமும் மிக அழகாக இருக்கிறது. விவரங்களும் அறிந்தோம். தொடர்கிறோம்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..