நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது...
காலையில்
யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு -
ஸ்ரீ பெருவுடையாருக்கும் ஸ்ரீ பெரிய நாயகி அம்மனுக்கும்
108 கலச அபிஷேகமும் 48 வகையான திரவியங்களால் பேரபிஷேகமும்
நன்றி - தினத்தந்தி |
புஷ்பாஞ்சலியும் பெருந்தீப ஆராதனையும் நடந்தன...
மஹா அபிஷேகத்தின் போது
பெருவுடையார் சந்நிதிக்கு முன்பாக -
மாமன்னன் ராஜராஜ சோழன், உலகமாதேவியார் மற்றும்
ராஜேந்திர சோழனின் திருமேனிகளை எழுந்தருளச் செய்திருந்தனர்..
மாமன்னன் ராஜராஜ சோழன் உலகமாதேவியார் |
பேரரசன் ஸ்ரீ ராஜேந்திர சோழன் |
அம்பிகையுடன் விடைவாகனத்தில் பெருமான் திருஉலா எழுந்தருளினார்..
விடை வாகனத்தில் எம்பெருமானும் அம்பிகையும் |
அத்திருக்கோலத்தை நேருக்கு நேராக தரிசனம் செய்தவாறே
ராஜராஜ சோழனும் உலகமாதேவியும் ராஜேந்திர சோழனும்
திருவீதி எழுந்தருளினர்...
ஸ்ரீ நாகநாதப் பிள்ளையார் |
மேல ராஜவீதியில் -
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயிலுக்கு எதிரில்
மேற்கு முகமாகக் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நாகநாதப் பிள்ளையார்
விடை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மையப்பனை
மூன்று முறை வலம் செய்து வணங்கிய கோலாகலம் நிகழ்ந்தது...
ராஜவீதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்களிலிருந்து பெருவுடையாருக்கும் மாமன்னனுக்கும் சிறப்புகள் செய்யப்பட்டன...
மக்களும் திரண்டு வந்து வழிபாடு செய்து மகிழ்ந்தனர்...
இன்று காலையில் இங்கே இணைய வேகம் இல்லாததால்
பதிவு சற்றே தாமதமாகி விட்டது...
திருமுறை வீதியுலா (நன்றி - விகடன்) |
சதயத் திருவிழா - 2015 ( நாந்தானுங்கோ!..) |
இன்றைய பதிவில் -
தனியாகக் குறிக்கப்பட்டவை தவிர்த்த
தனியாகக் குறிக்கப்பட்டவை தவிர்த்த
ஏனைய படங்களையும் காணொளியையும் வழங்கிய -
திரு. தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...
***
கடந்த சில ஆண்டுகளாக சதய விழாவினைக்
கண்டு களிக்கும் வகையில் வருடாந்திர விடுப்பு அமையவில்லை...
எனினும்
நெஞ்சமெல்லாம் நேற்றைய நிகழ்வுகளில்
மகிழ்ந்து கிடக்கின்றது...
மாமன்னன் பெரும்புகழ்
என்றென்றும் வாழ்க..
ஃஃஃ
அன்பின் ஜி
பதிலளிநீக்குஅழகிய புகைப்படங்களுடன் விபரங்களை தந்தமைக்கு நன்றி.
உலா கண்டோம், மகிழ்ந்தோம்.
பதிலளிநீக்குஅருமையான தரிசனம்.
பதிலளிநீக்குஅனைத்து விழா படங்களும் அருமை.
அடுத்த திருவிழா போது விடுமுறை கிடைக்கட்டும்.
காணொளி பார்க்க முடியவில்லை. கிடைக்கும் போது பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநீங்க ரொம்ப இளமையாத் தெரியறீங்கோ... அதுக்குத்தான் பெரீய ந்ந்திதேவரின் முன்பு படமெடுத்துக்கொண்டீர்களா? ஹாஹா
பதிலளிநீக்குபடங்களும் இடுகையும் அருமை. ஏற்கனவே படித்த இடுகைதானே என்று நினைத்துத்தான் வந்தேன். தலைப்பினாலோ?
தஞ்சையில் இருந்தபொழுது கூட பெருவுடையாரை இவ்வளவு அருகில் நான் தரிசித்தது இல்லை. நன்றி. மீண்டும் தஞ்சை செல்லும் ஆசை வருகிறது.
பதிலளிநீக்குஅப்படியே திருவையாறு ஆண்டவர் ஸ்வீட்ஸ்.., அசோகா அல்வா . ஹாஹா
நீக்குஇஃகி, இஃகி, இங்கே கிரகப்ரவேசத்தன்று காலை டிஃபன் மெனுவில் அசோகாவும் உண்டு. திருவையாறு ஆண்டவர் கடையை விட நன்றாக இருந்தது. ஆண்டவர் கடை அசோகா பத்தியோ அல்வா பத்தியோ அதிகம் கனவுகள் வேண்டாம்! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! :)))))
நீக்குஅருமை...
பதிலளிநீக்குமிக அருமை. சதயத்திருவிழா இத்தனை கோலாகலத்துடன் நடந்தது குறித்து மகிழ்ச்சி. பெருவுடையாரின் வீதி உலாக்காட்சிகளும் மற்றக் காட்சிகளும் விழாவினை அருகே இருந்து கண்டது போல் மகிழ்வைத் தருகிறது.
பதிலளிநீக்குதொடர்ந்து புகைப்படங்களை உரிய நேரத்தில் அனுப்பி வைக்கும் திரு ஞானசேகரனுக்கு நன்றி.
பதிலளிநீக்கு