நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 23, 2017

சொல்மாலை 1

ஸ்ரீ வானமுட்டிப்பெருமாள்
கோழிகுத்தி - மயிலாடுதுறை
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று..(2082)

திருஅரங்கன்
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங் கத்துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை..(2087)

ஸ்ரீஒப்பிலியப்பன்
வாயவனை அல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை அல்லாது தாந்தொழா - பேய்முலைநஞ்
சூணாக உண்டான் உருவோடு வேறல்லால்
காணாகண் கேளா செவி..(2092)

ஸ்ரீராஜகோபாலன் - மன்னார்குடி
பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண்வளரும் செங்கண்
அடலோத வண்ணர் அடி..( 2097)


பெற்றார் தளைகழலப் போந்தோர் குறளுருவாய்
செற்றார் படிகடந்த செங்கண்மால் - நற்றா
மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி
நிரைமலர் கொண்டு ஏத்துவரால் நின்று..(2101)


கைய வலம்புரியும் நேமியும் கார்வண்ணத்
தைய மலர்மகள்நின் ஆகத்தாள் - செய்ய
மறையான்நின் உந்தியான் மாமதிள் மூன்றெய்த
இறையான்நின் ஆகத் திறை..(2109)
* * *
இன்று புரட்டாசி மாதத்தின் 
முதல் சனிக்கிழமை..

இன்றைய பதிவில்
பொய்கையாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்கள் திகழ்கின்றன..

நாடு நலம் பெறுதற்கு 
நாராயணன் திருவடிகள் காப்பு

ஓம் ஹரி ஓம் 
* * *

10 கருத்துகள்:

  1. ​சிறப்பு. புரட்டாசி முதல் சனிக்கிழமை பதிவு வெகு சிறப்பு.​

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    சொல்மாலை கோர்த்த விதம் அருமை.
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  3. (2173)

    வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்

    தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி

    வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்

    மண்ணை உமிழ்ந்த வயிறு.

    -பொய்கையாழ்வார்

    பதிலளிநீக்கு
  4. புரட்டாசி முதல் சனிக்கிழமைக்கானத் தொகுப்பு சொல்மாலை வெகு சிறப்பு!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  5. பொய்கையாழ்வார் பாடல்களை இதுவரை படிக்கவில்லை. இனி படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  6. வலை உலகில் நான் தொடரும் பல பதிவர்கள் கோவில் பக்கமும் கடவுள் பக்கமும் போய் விட்டார்கள் ஒரு வேளை இது விழாக்காலம் என்பதாலா

    பதிலளிநீக்கு
  7. ரொம்பவும் ரசித்துப் படித்தேன். முதல் திருவந்தாதி பாடல்கள். "சொல் மாலை", "அல்லாது-அல்லது என்று வரணும். இரண்டிலுமே பொருள் மாறவில்லை.

    பதிலளிநீக்கு
  8. வானமுட்டிப் பெருமாள் எனக்கு தரிசனத்துக்கு ப்ராப்தம் தரவேண்டும். இந்தக் கோவிலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..