நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 04, 2017

பூங்குவளைக் கண்ணி

இன்று மங்கலகரமான
ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை..

இன்றைய பொழுதில் -
சிந்திப்பதற்கும் வந்திப்பதற்கும்
அன்னை அபிராமவல்லியின் திருவடிகள்..


பவளக்கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே...(038)

வாள்நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன்செய் புண்ணியமே...(040)

 பூங்குவளைக்கண்ணி
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்துதம் அடியார்கள் மேல் நடுஇருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல்பத்ம பாதம் பதித்திடவே...(041)

இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே...(042)



பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே...(043)

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்றூ விள்ளும்படி அன்று வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே...(047)

உண்ணாமுலையாள்
அங்கயற்கண்ணி
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி யாதியுடையாள் சரணம் அரண் நமக்கே...(050)

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே...(052)

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி - வேதாரண்யம்
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங் கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந் தனி இருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே...(053)


கண்மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு
இதுபோலும் தவம் இல்லையே!..

ஓம் சக்தி ஓம்..
***  

16 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    காலையில் அன்னை அபிராமவல்லியின் இனிய தரிசனம்.

    பதிலளிநீக்கு
  2. அபிராமவல்லியின் கருணையை இறைஞ்சுகிறேன். இன்று வரலக்ஷ்மி பூஜை. வரம் தரும் வரலக்ஷ்மி அனைவருக்கும் சுபிட்சம் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்னையின் படங்கள் எல்லாம் மிக அருமை.
    அபிராமி அந்தாதி பாடி வழிபட்டேன். நன்றி.
    வாழ்த்துக்கள். நானும் அம்மன் படங்களை தொகுத்துக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இன்று இங்கெல்லாம் வரமஹாலக்ஷ்மி நோன்பு என்று கொண்டாடுகிறார்கள் பாக்யாத லக்ஷ்மி பாரம்மா என்னும் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மூன்றாவது வெள்ளியில் சிறப்பான படங்களும், தகவல்களும்.....

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அடிக்கடி எனது அப்பா பாடிய, தனம்தரும் என்று தொடங்கும் அபிராமி அந்தாதி பாடல் நினைவுக்கு வந்தது. நானும் மனனம் செய்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அன்னையின் படங்கள் எல்லாம் அருமை. பாடல்களும்!!! அபிராமி அந்தத்தியின் தனம் தரும் என்பதை நாங்கள் தினமும் சொல்வதுண்டு...

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..