நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 31, 2017

வாழ்வும் வளமும்



பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப்
பசு மிக நல்லதடி பாப்பா..


வா.. வா.. ஒத்தைக்கு ஒத்தை.. வாடா.. வா!.


வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுது வரும் மாடு..
அண்டிப் பிழைக்கும் அந்த ஆடு - இதை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!..






பால் குடிக்கிற நேரத்தில பாட்டு வேறயா!..
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு
அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப் பசு - பாலை 
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி..




பாரம்பர்ய ஓங்கோல் பசு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு..
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்துனைக் காப்பதென் பாடு!..


சொக்கருக்கு அங்கயற்கண்ணி
தோள்கொடுத்து மாலையணிந்து
மதுரையிலே ஊர்வலம் போக
வாங்கி வந்த காளையடா!..






வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!..

ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
அன்பினில் உற்றது..
அனைத்தும் நிறையப் பெற்றது!..
உயிருள் உணரத் தக்கது..
உய்யும்வழி அருளத் தக்கது!..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!.. 
***

21 கருத்துகள்:

  1. அழகிய புகைப்படங்கள் கண்கொள்ளாக்காட்சி பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. முத்திரையில் ஆனிறை என்றுள்ளதே, ஆநிரை தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      ஆநிரை தான் சரி.. திருத்தம் செய்து விட்டேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அத்தனைப் படங்களும் அழகோ அழகு !

    வாழ்வும் வளமும் செழிக்கட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்களும் அழகு. வரிகளும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  7. படங்களுடன் விளக்கம் - மிகவும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  8. என்ன திடீரென்று வீட்டு விலங்குகள் பற்றி . நோக்கம் வேறேதோவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      சில தினங்களாகவே அரசியல்வாதிகளும் ஏனையோரும் -
      நாடு முழுவதையும் பரபரப்பாக வைத்திருக்கின்றார்கள்..

      சில மாதங்களுக்கு முன்பாக, தமிழகத்தில் - காப்பது எங்கள் உரிமை.. என்று முழங்கினார்கள்..

      சில நாட்களாக - உண்பது எங்கள் உரிமை.. என்று பேசுகின்றார்கள்..

      கால்நடைகளைச் செல்வம் என்று கொண்டாடிய பாரம்பர்யம் நம்முடையது...

      தமிழகத்தின் ஊடகம் ஒன்று -
      ஒவ்வொரு வீட்டின் சமையலறையையும் உற்றுக் நோக்கிய மாதிரி தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இதைத்தான் உண்டு காலம் கழிக்கின்றார்கள் என்று சொல்கின்றது...

      இளமையில் ஆடு மாடுகளோடு வளர்ந்தோம்.. வாழ்ந்தோம்..
      ஆனால் இன்னமும் மனிதம் மாறவில்லை.. மறக்கவில்லை..

      அதனால் வாயில்லா ஜீவன்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளைக் கண்டு மனம் கசிகின்றது...

      அந்த ஆற்றாமையினால் தான் இந்தப் பதிவு..

      கால்நடைகளை உயர்த்திப் பாடிய - கோதை நாச்சியார், மகாகவி பாரதியார், மருதகாசி மற்றும் கண்ணதாசன் ஆகியோரின் பாடல் வரிகளுடன் பதிவை வழங்கினேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
    2. உங்கள் பதிவின் ஆற்றாமை தெரிந்தது நானும் நினைத்தேன் அதையே நீங்களும் இங்கு சொல்லியிருக்கிறீர்கள்..ஆம் உண்மைதான்...

      கீதா

      நீக்கு
  9. மனதை கொள்ளைகொண்ட படங்களும் அதற்கேற்ற வரிகளும் .அருமை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  10. அருமையான படங்கள் அதற்கான வரிகளும் அதே போன்று!!! படங்கள் பல செய்திகளைச் சொல்லுது...ஆம் சமீபத்திய நிகழ்வுகளின் அடிப்படையில் அதை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடும் பல நிகழ்வுகள் அதற்கு மக்களின் கருத்துகளும் மனதை வேதனைப்படுத்துகிறதுதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அழகிய படங்கள்.

    அனைத்திலும் அரசியல் புகுந்து விட்டது வேறென்ன சொல்ல! அரசியல் யாரையும், எதையும் விட்டு விடுவதில்லை!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..