நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 14, 2017

வழி திறக்கட்டும்..

அனைவருக்கும்
அன்பின் இனிய 
பொங்கல் நல்வாழ்த்துகள்!..


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்..(1033)

உண்மையில்
நிலைமை அப்படியில்லை!..

மிகவும் கடினமான பாதை..
நடந்து கொண்டிருக்கின்றோம்..

சோதனைகளைக் -
கடந்து கொண்டிருக்கின்றோம்!..

நீராதாரங்களை நாம் ஒழித்தது போக
நீர்வழிகளைப் பிறத்தியாரும் சிதைப்பதற்கு ஆயிற்று...

வானமும் தனது பங்கிற்கு வதைத்து விட்டது...

எதற்காகவும் யாருக்காகவும் 
காத்திருந்தறியாத காலம் விரைந்தோடியதில்

இதோ - தைத் திங்கள்..

பழைய குதுகலங்கள் கொண்டாட்டங்கள் குறைவுதான்..

எனினும்,
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவேண்டியதாக இருக்கின்றது..

தை பிறந்தால் வழி பிறக்கும்!.. என்பார்கள்..


தை பிறந்து விட்டது..

வழி பிறக்கும்.. வழி சிறக்கும்!.. - என்று எதிர்பார்ப்பதை விட -

வழியைத் திறக்க வேண்டும்!..

வழி திறக்கப்படும் நொடி சாலச் சிறந்தது..


பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் 
சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு!.

பொங்கு தமிழர்க்கு இன்னல் என்பது மட்டுமல்ல!..

தமிழர்தம் அடையாளங்களுக்கு
இன்னல் நேர்ந்தாலும்
சங்காரம் நிஜம் என்று சங்கு முழங்கும்!.. 

வீரத்தினாலும் விவேகத்தினாலும்
வெற்றி மாலை தோள்களில் விளையாடட்டும்!..

சோதனைகள் சூழ்ந்திருப்பினும்
சாதனைகளை விளைத்திடல் வேண்டும்..

துன்பங்களையும் துயரங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு
உற்சாகத்துடன் தை முதல் நாளைக் கொண்டாடுவோம்..
  பழைய வளங்களையும் நலங்களையும்
மீட்டெடுப்பதற்கு உறுதி கொள்வோம்!..


வாழ்க தமிழ்.. 
வளர்க தமிழினம்!...

பொங்கலோ.. பொங்கல்..
பொங்கலோ பொங்கல்!.. 
***

7 கருத்துகள்:

 1. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும் தங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் உள்ள உறவினர்கள் + நட்புகள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிவும் படங்களும் மிகவும் அருமை.

  பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 5. பொங்கும் மங்களம் எங்கும் தங்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. நல்ல பகிர்வு.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு