நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 09, 2016

மீண்டும் ஒரு ....

மீண்டும் ஒரு வேதனை..


ஜெர்மனியில் வசித்து வரும் மதிப்புக்குரிய -

சகோதரி இளமதி (திருமதி மாலினி பாலச்சந்திரா) அவர்களுடைய கணவர் இயற்கை எய்தி விட்டார் என்ற செய்தியை -

கில்லர் ஜி அவர்களின் தளத்தில் கண்டதிலிருந்து மனம் ஒரு நிலையில் இல்லை..

சகோதரி இளமதி அவர்களுடைய கணவர் இயற்கை எய்திய செய்தியினை அறிந்து மனம் வருந்துகின்றேன்.. 

நிறைந்த அன்பினொடு பதிவுகளுக்குக் கருத்துரை வழங்கி மகிழ்வார்..

அந்த அன்பினில் -

ஒருமுறை வலைச்சரத்தில் பணியாற்றுதற்கு அழைத்தேன்..

அப்போது தான், தனது சூழ்நிலையை - எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார்..

அதன் பின் அவ்வப்போது மின்னஞ்சல் சில செய்திகளைத் தாங்கிச் சென்றிருக்கின்றது..

ஒருமுறை -

இழந்த பொருளினை மீட்பதற்கு ஏதோ ஸ்லோகம் இருக்கின்றதாமே.. அதை அறியத் தர இயலுமா?..

- எனக் கேட்டிருந்தார்..

அவருக்கான தேடலில் நான் பெற்ற அனுபவம் மிக அரிதானது..

அந்தத் தேடலில் தான் - ஒரு தீர்வு அருளப்பெற்றது..

ஆனாலும், அதை வெளியே சொல்லக் கூடாத நிர்பந்தம்..

மாறாத தமிழ் மணத்துடன் மரபுக் கவிதைகளைத் தன் பதிவினில் வழங்கிய சகோதரி இளமதி அவர்களால் தான் -

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாளின் தரிசனம் கண்டேன்..

இரண்டு ஆண்டுகளுக்கு முன் -  விடுமுறையில் சென்றிருந்தபோது அவர்களுக்காகவே - நான் என் மனைவியுடன் -

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் திருக்கோயிலுக்குச் சென்று -

ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்த்ர காணிக்கையுடன் திருவிளக்கேற்றி வைத்து -

சகோதரியின் குடும்ப நலத்திற்காக வேண்டிக் கொண்டேன்...

அந்த சமயத்தில் - இப்படியோர் தரிசனத்திற்கு வித்திட்ட சகோதரியின் அன்பிற்குத் தலை வணங்கி நின்றேன்..

தெய்வ தரிசனத்தின் புண்ணிய பலனை அவர்களும் எய்த வேண்டுமென வாழ்த்தினேன்..

ஆனால் - இந்த விஷயம் இதுவரை அவர்களுக்குத் தெரியாது..

இப்போது தான் - இதனைப் பொதுவில் அளிக்கின்றேன்..

கடந்த 2014ல் எனது மகளுடைய வளைகாப்பு வைபவத்தின் போது -

சீர்பெருக்கும் செல்வம் சிறப்புமிகு மக்களே
பேர்சிறக்கப் பெற்றனையே பேறொன்று - பார்புகழ்
பக்தனுன் தந்தையொடு பாங்கன் உறவுவக்க
முத்தைப் பெறுநீ முகிழ்த்து..

- என,

வளைகாப்புக் கண்ட வண்ண மகளுக்கு வாஞ்சையுடன் வாழ்த்துரைத்தார்..

அன்னவரின் வாழ்வில் இப்படியோர் சோகம் நிகழ்ந்திருக்கக் கூடாது..

ஆனாலும் - விதி வலியது!..

பதினான்கு ஆண்டு காலம் - விபத்து ஒன்றினால் செயலற்ற நிலையை அடைந்திருந்த தன் கணவரை கண்ணுள்ளும் கருத்தினுள்ளும் பொதிந்து காத்து வந்தவர்..

தனது உடல்நலனையும் பொருட்படுத்தாது -
அன்புக் கணவரின் நலனை காத்து நின்றவர்..

தாயினும் மேலாக அவர் காட்டியிருக்கும் அன்பு ஈடு இணையற்றது..

கால தேவனுடன் உயிர்ப் பறவை சென்று விட்டது..

ஏது செய்ய இயலும்?.. என்ன சொல்ல முடியும்?..

மனோதிடம் மிக்கவர் இளமதி அவர்கள்..

ஆயினும், என்ன வார்த்தை கூறி ஆறுதல் அளிக்க இயலும்?..

இன்று விடியற்காலைப் பொழுதில் வேலைத் தளத்தில் அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்..

அந்த நிகழ்வு - வேலை முடிந்து திரும்பியதும் இந்த துயரச் செய்தியைக் கேட்பதற்குத் தானோ?..


சகோதரி இளமதி.. தங்களுடைய அன்புக் கணவரின் ஆன்மா சாந்தியுறட்டும்..

தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தாருக்கும்
ஆறுதலையும் தேறுதலையும் அளித்தருள 
எல்லாம் வல்ல இறைவனிடம் 
பிரார்த்திக்கின்றேன்..
* * *

10 கருத்துகள்:

  1. இளமதியார் அன்புநலம் மிக்கவர்,, என்பதனை பதிவுகளில் இருந்து அறிந்தோம்,, அவர், இந்த ஈடு செய்ய முடியா இழப்பில் இருந்து மீண்டு வரவேண்டும்,,
    எம் ஆழ்ந்த இரங்கல்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி சகோதரி இளமதி அவர்களுக்கு இதை தாங்கும் வல்லமையை இறைவன் அருள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  4. நண்பரே நான் சகோதரி இளமதி அவர்களை பற்றி
    கேள்வி பட்டதே இல்லை....
    ஆனாலும் மனம் கவலை கொள்கிறது....
    அவர்களது கணவர் ஆன்மா
    சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. எங்கள் ஆழ்ந்த இரங்கல்களும். இது மிகவும் வேதனையான ஒன்ற்தான்..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா!

    பக்தி மணம் கமழும் அற்புத வலைத்தளத்தில் என்னவரின்
    இழப்புச் செய்தி அன்று உங்களின் பதிவாகியதா?..
    வாயடைத்துப் போய் நிற்கிறேன் இன்று நான். வணங்குகின்றேன் ஐயா!
    தாங்கள் என்மீதும் என் எழுத்துக்கள் மேலும் வைத்திருக்கும் மரியாதையையும் அன்பினையும் கண்டு திகைத்து நிற்கின்றேன்!..

    நீங்கள் எனக்கெனத்தேடிய அந்த ஸ்லோகத்தின் பின்னணியில் இவ்வளவு விடயங்கள் நடந்தேறியுள்ளதா? மெய்சிலிர்க்கிறது!..
    அம்பிகையைச் சென்று தரிசித்து அருள் பெற்று அதனை எனக்கும் அனுப்பி வைத்திருக்கின்றீர்கள்!.. அடடா... தங்களின் பக்தியையும் அன்னையின் வாஞ்சையையும் என்னவெனச் சொல்வது...
    தேடிக்கிட்டிய அந்த ஸ்லோகத்தினால் தேடியது கிட்டப்பெற்றேன் அதனையும் இங்கு சொல்லிவிடுகிறேன்!
    அன்னை உங்கள் வாக்கிலிருந்து அருளுகிறாள்!..
    புரிந்துகொண்டேன் இப்போது.
    கண்கள் கரைந்தோட ஆத்மார்த்தமாக என் உணர்வுகளையெல்லாம்
    திரட்டி “நன்றி”யென மட்டும் இங்கு எழுதிவிடுகிறேன்!
    நன்றி ஐயா மிக்க நன்றி!

    விதி என்பது வலியதுதான், வலிக்க வைப்பதுதான்! அதை மெல்ல மெல்ல உணர்ந்துகொண்டிருக்கிறேன் இப்போது.
    அதன் அழுத்தம் அதிகம். வெளியில் சிரித்தாலும் உள்ளே மனம் ஓலமிட்டபடிதான் இருக்கிறது.
    உடல் நலனைத் தாக்கவேண்டாமென அதன் பிடியிலிருந்து எனை விடுவிக்க வலையுலகு எனக்கு அருமருந்தாக இப்போதுள்ளது.

    காலத்திற்கும் சொல்லாது போய்விடாமல் இப்போவாவது தெரிந்து, அதனை நீங்களே சொல்லியதால் தெரிந்து இப்பதிவைப் படித்து நன்றி சொல்கிறேன்!

    என்னவரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தித்தும் எனக்கும் ஆறுதல் கூறிய உங்களுக்கும் இங்கு வந்த வலையுலக அன்புள்ளங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      தங்களின் மடலை கண்ணீருடன் தான் வாசிக்கின்றேன்..

      மனம் அமைதி பெறுங்கள்...

      தாங்கள் மன அமைதியுடன் தங்களது நலத்தையும் குடும்ப நலனையும் கவனத்தில் கொள்ளுங்கள்..

      அதுவே தங்களது அன்புக் கணவருடைய நாட்டமாக இருக்கும்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..