நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

ஆலவாயில் திருவிழா

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாளும் பரவப்
பொங்கழ லுருவன் பூத நாயகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே!..
திருஞான சம்பந்தர் (3/120)


மாமதுரைத் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவில் நாளை முதல் எம்பெருமானின் திருவிளையாடல்கள் நிகழ்வுகள் தொடங்குகின்றன..

ஆவணி மூலத் திருவிழாவுக்கான திருக்கொடியேற்றம் - கடந்த ஆகஸ்ட் /12  - புதன் அன்று நிகழ்ந்தது..

அருள் தரும் சுந்தரேசர் பிரியாவிடையுடன் எழுந்தருளினார்.. உடனாகி விளங்கும் அங்கயற்கயற்கண் அம்மையும் சர்வ அலங்காரத்துடன் கம்பத்தடி மண்டபத்திற்கு எழுந்தருளினாள்..



அம்மையும் அப்பனும் வீற்றிருக்க - மங்கல வாத்ய முழக்கத்துடன் -
காலை 10.30 மணியளவில் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது..

தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்தன..

அதனைத் தொடர்ந்து - நாளும் - இரவுப் பொழுதில் - திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றிலும், ஆவணி மூல வீதிகளிலும் ஸ்ரீ சந்திரசேகரர் எழுந்தருளினார்..

நாளை (18/ செவ்வாய்) முதற்கொண்டு திருவிளையாடல்கள் நிகழ்கின்றன..

எளியோர்க்கு எளியோனாக - ஈசன் எம்பெருமான் நிகழ்த்தும் லீலைகளின் உட்பொருளை உணர்வதே - ஆவணிப் பெருந்திருவிழாவின் நோக்கம்!..


முதலாம் திருநாள் - 18/8 செவ்வாய்
கருங்குருவிக்கு உபதேசம்.

காலை
தங்கச் சப்பரம்

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் கற்பக விருட்ச வாகனத்திலும் 
கயற்கண்ணி வெள்ளி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளல்.


இரண்டாம் திருநாள் - 19/8 புதன்
நாரைக்கு முக்தி அளித்தல் 

காலை
தங்கச் சப்பரம்

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் பூத வாகனத்திலும் 
அங்கயற்கண்ணி வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளல்.

மூன்றாம் திருநாள் - 20/8 வியாழன்
மாணிக்கம் விற்ற லீலை

காலை
தங்கச் சப்பரம்

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் கையிலாய வாகனத்திலும் 
செங்கயற்கண்ணி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளல்.


நான்காம் திருநாள் - 21/8 வெள்ளி
தருமிக்குப் பொற்கிழி அளித்தல்

காலை
தங்கச் சப்பரம் 

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் தங்க சப்பரத்திலும் 
கருந்தடங்கண்ணி யானை வாகனத்திலும் எழுந்தருளல்.


ஐந்தாம் திருநாள் - 22/8 சனி
உலவாக் கோட்டை அருளல்

காலை
தங்கச் சப்பரம் 

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் அதிகார நந்தி வாகனத்திலும் 
  மரகதவல்லி வெள்ளி யாளி வாகனத்திலும் எழுந்தருளல்.

ஆறாம் திருநாள் - 23/8 ஞாயிறு
பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை

காலை
தங்கச் சப்பரம் 

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் தங்க ரிஷப வாகனத்திலும் 
மாணிக்கவல்லி வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளல்.


ஏழாம் திருநாள் - 24/8 திங்கள்
வளையல் விற்ற லீலை 

காலை
தங்கப் பல்லக்கு 

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் தங்கப் பல்லக்கிலும் 
அபிஷேகவல்லி தங்கப் பல்லக்கிலும் எழுந்தருளல்.


எட்டாம் திருநாள் - 25/8 செவ்வாய்
நரிகளைப் பரியாக்கிய லீலை 

காலை
தங்கச் சப்பரம் 

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் தங்கக் குதிரை வாகனத்திலும் 
கற்பூரவல்லி தங்கக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளல்.

திருப்பரங்குன்றத்திலிருந்து திருமுருகனும்
திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகப் பெருமானும் 
மதுரையம்பதிக்கு எழுந்தருள்கின்றனர்.

ஒன்பதாம் திருநாள் - 26/8 புதன்
பிட்டுக்கு மண் சுமந்த லீலை 

காலை
தங்க சிம்மாசனம் 

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 
மட்டுவார்குழலி வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளல்.


பத்தாம் திருநாள் - 27/8 வியாழன்
விறகு விற்ற லீலை 

பிற்பகல்
தங்கச் சப்பரம் 

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் தங்கச் சப்பரத்திலும் 
ஏலவார்குழலி தங்கச் சப்பரத்திலும் எழுந்தருளல்.

பதினோராம் திருநாள் - 28/8 வெள்ளி

காலை
சப்பரத் தேர்

இரவு 
ஸ்ரீசுந்தரேசரும் ஸ்ரீ கடம்பவன வாசினியும் 
சப்தாவர்ணச் சப்பரத்தில் எழுந்தருளல்


பன்னிரண்டாம் திருநாள் - 29/8 சனி

காலை
பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரி

இரவு 
ஸ்ரீசுந்தரேசர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 
மீனாக்ஷி உமையாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளல்.

திருமுருகனும் 
மாணிக்கவாசகப் பெருமானும் விடை பெற்றுக் கொள்ளுதல்..

திருவிழா மங்கலகரமாக நிறைவு..


முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
 துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!..
திருநாவுக்கரசர் (6/19)

மீனாக்ஷி சுந்தரேசர் திருவடிகள் போற்றி!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *

15 கருத்துகள்:

  1. ஆலவாயில் திருவிழா பற்றிய தங்களின் தொகுப்பு மிகவும் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஆலவாயில் திருவிழாவை
    கோலமயில் தோகை விரித்தாற் போன்று
    காட்சிகளும் ஆவணித் திருமாதத்து சிறப்புகளும்
    எழிலாய் தந்தமைக்கு அருளாளர் அய்யாவுக்கு அன்பின் நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. சிறப்பான தொகுப்பு ஐயா... நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  4. காட்சிகளும் உங்கள் தொகுப்பும் மிக அருமை ஐயா!
    அனைவருக்கும் நல்லருள் கிட்டட்டும்!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பின் ஜி திருவிழா கண்டு களித்தேன் அருமை வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதிவெழுத தலைப்புகளுக்கும் விஷயத்துக்கும் உங்களுக்கு சிரமமே இருக்காது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. படங்கள் மிக மிக அழகு! மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன. கடம்பவன வாகினி யின் அந்த நீல வண்ணம் உகைப்படம் அழகோ அழகு...பளிச் என்று இருக்கின்றது..பகிர்வுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. வணக்கம், ஒவ்வொரு நாள் விழா படங்களும் அழகு, பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..