இன்று கார்த்திகை முதல் நாள்.
ஊரெங்கும் சாமியே சரணம் ஐயப்பா!.. - என ஆனந்த வழிபாடுகள் தொடங்கும் நாள்.
இதுதான் இந்த மாதத்திற்குப் பெருமையா!..
கார்த்திகை மாதத்தை - கல்யாண மாதம் என்பர்.
கல்யாணம் என்றால் மங்கலம்.
மங்கலம் எனில் சிவம்.
அதனால் தானே - விண்ணுக்கும் மண்ணுக்குமாக அடிமுடி தெரியாத அளவுக்கு ஐயன் அண்ணாமலையில் அக்னிப் பிழம்பாக எழுந்த வைபவம் நிகழ்ந்தது.
நிலம் நீர் காற்று ஆகாயம் - எனும் இவற்றுக்கு நடு நாயகமாகத் திகழ்வது அக்னி!..
அக்னி ஸ்வரூபமே அண்ணாமலை!..
ஐயனும் அம்பிகையும் அர்த்தநாரியாக விளங்கும் மலையே அண்ணாமலை.
அண்ணாமலை என நினைத்தாலே முக்தி!.. - என்கின்றனர் ஆன்றோர்.
இதன் மெய்ப்பொருள் என்ன?..
அண்ணாமலை என நினைத்தாலே ஆழ்மனதில் அன்பும் அறமும் விளையும்.
அன்பும் அறமும் மலர்ந்த நெஞ்சில் - மறம் எனும் வன்கொடுமை விளைவதற்கில்லை..
ஞானம் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது.
அதன் வெளிப்பாடுதான் கார்த்திகையில் தீபவழிபாடு!..
திருமயிலையில் - அஸ்திக் கலசத்தில் இருந்து பூம்பாவையை எழுப்பும் போது, திருஞானசம்பந்தப் பெருமான் கார்த்திகை விளக்கீடு எனக் குறிப்பதன் மூலம் - இதன் அருமையும் பெருமையும் தொன்மையும் விளங்குகின்றது.
கார்த்திகை மாதம் முழுதுமே சிவ வழிபாட்டுக்கு உரியது.
இந்த மாதத்தின் திங்கட்கிழமைகள் வெகு சிறப்பானவை.
சகல சிவ க்ஷேத்திரங்களிலும் விசேஷ வழிபாடுகள் கோலாகலமாக நிகழ்கின்றன.
அவற்றுள் சங்காபிஷேகம் குறிப்பிடத்தக்கது.
ருத்ர ஜபத்துடன் 108 , 1008 - என சங்குகளில் புனித நீரை நிறைத்து - அவற்றைப் பூஜித்து, சிவலிங்கத் திருமேனியில் அபிஷேகத்து ஆராதனை செய்வர்.
சோம வாரம் எனும் திங்கட்கிழமையில் விரதம் அனுசரிப்பதன் மூலம் பல நன்மைகளை எய்தலாம் என்பது தெளிவு.
கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நாள் முருக பக்தர்களுக்கு மகத்தான நாள்..
கார்த்திகை - கந்தன் கருணை பொழியும் நன்னாள்..
சரவணத் திருக்குளக்கரையில் ஆறு குழந்தைகளாக உதித்த திருமுருகனை அரவணைத்து அமுதூட்டிய தேவமாதர்களுக்கு,
வானில் திருக்கார்த்திகை எனும் நட்சத்திரங்களாகத் திகழ்வீர்களாக!.. - என ஈசன் பெரும் பேறு வழங்கி நல்லருள் புரிந்தார்.
அதனாலேயே - கார்த்திகை நாள் - சிவ குடும்பத்தினர்க்கு நன்னாள் ஆயிற்று.
தஞ்சை மாவட்டம் - பட்டுக்கோட்டையை அடுத்துள்ள பரக்கலக்கோட்டை எனும் கிராமத்தில் உள்ள பொது ஆவுடையார் திருக்கோயிலில் கார்த்திகை மாதத்தின் எல்லா திங்கட்கிழமைகளும் வெகு சிறப்பானவை.
இத்திருக்கோயிலில் கொடிமரம் இல்லை. வேறு சந்நிதிகள் ஏதும் இல்லை.
மூலலிங்கம் என்பது - படர்ந்து விரிந்திருக்கும் வெள்ளால மரத்தின் வேர் தான்.
இந்த வருடம் கார்த்திகை மாதம் - உதயாதி நாழிகையில் உத்திர நட்சத்திரம் விளங்கும் வேளையில் பிறந்துள்ளது.
ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி திருஅவதாரம் செய்தது - உத்திர நட்சத்திரத்தில்!..
சபரிமலை ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியின் திருக்கோயிலில் மண்டல பூஜை தொடங்கும் நன்னாள் - இன்று.
லட்சக்கணக்கான அன்பர்கள், ஜோதி ஸ்வரூபனாகிய ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியின் அருள் வேண்டி மாலையணிந்து கடும் விரதம் ஏற்கும் நன்னாள் - இன்று.
கார்த்திகையின் சிறப்பு விளக்கீடு எனும் கார்த்திகை தீபம்.
அண்ணாமலையின் சிறப்பு - அடிமுடி காணாத ஜோதி வழிபாடு.
அவ்வண்ணமே - சபரிமலையின் சிறப்பு - சங்கராந்தியில் மகரஜோதி வழிபாடு.
நம்முடைய மனமும் சுடராகப் பிரகாசிக்க ஜோதி வழிபாடு செய்வோமாக!..
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா..
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா..
கரிமலை வாசா பாபவிநாசா
சரணம் சரணம் ஐயப்பா..
கருத்தினில் வருவாய்
கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா..
மகிஷி சம்ஹாரா மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா..
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா..
ஆறுவாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காணவந்தோம்
பாலபிஷேகம் உனக்கப்பா - இந்த
பாலனைக் கடைக்கண் பாரப்பா..
முத்திரைத் தேங்காய் உனக்கப்பா..
தித்திக்கும் நாமம் எமக்கப்பா..
கற்பூர தீபம் உனக்கப்பா - உந்தன்
பொற்பத மலர்கள் எனக்கப்பா..
தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா..
நாவினில் தருவாய் கீதமப்பா..
தேவை உன்திருப் பாதமப்பா..
நெய்யபிஷேகம் உனக்கப்பா - உன்
திவ்ய தரிசனம் எமக்கப்பா..
தையினில் வருவோம் ஐயப்பா - அருள்
செய்யப்பா மனம் வையப்பா..
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
பகவான் சரணம்
பகவதி சரணம்
தேவன் பாதம்
தேவி பாதம்
பகவானே
பகவதியே..
தேவனே
தேவியே..
சரணம் சரணம் ஐயப்பா..
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
பகவான் சரணம்
பகவதி சரணம்
தேவன் பாதம்
தேவி பாதம்
பகவானே
பகவதியே..
தேவனே
தேவியே..
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
சரணம் சரணம் ஐயப்பா..
ஸ்வாமி சரணம் ஐயப்பா..
சரணம் சரணம் ஐயப்பா..
ஸ்வாமி சரணம் ஐயப்பா..
அருட்ஜோதியை வழிபட்டு
ஆனந்தம் கொள்வோம்!..
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
***
வடநாட்டில் கார்த்திகை மாதம் திருமணங்கள் அதிகமாக நடக்கும்.
பதிலளிநீக்குஇன்று எங்கள் ஊரில் ;முடவன் முழுக்கு ‘ ஐப்பசி மாதம் 30 நாட்கள் காவிரியில் குளித்த புண்ணியத்தை கார்த்திகை ஒன்று அன்று குளித்தால் பெறலாம் என்கிறார்கள்.
கார்த்திகை மாதம் ஐயப்பன் பக்தர்கள் விரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள் மாலை போட்டு.
உங்கள் தளத்தில் ஐயப்பன் தரிசனம் செய்தேன்.சரணம் சொல்லி பாடினேன். மகிழ்ச்சி.
அன்புடையீர்..
நீக்குசில தினங்களுக்கு முன் மயூர நாதர் திருக்கோயிலில் திருவிழா என்று தரிசனம் செய்ய வந்திருந்தோம். மிக சந்தோஷமாக இருந்தது.
தங்களின் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
கார்த்திகை மாதச் சிறப்பு மிக அருமை ஐயா!
பதிலளிநீக்குமதத்துடன் மனதில் நிறைந்த எங்கள் ஈழமறவர் நாட்களும்
இங்குதான் கலந்து இருக்கின்றன...
நெஞ்சில் நெருப்பேந்தி நினைகூரும் வாரம் இதோ இன்னும் சில நாட்களில் ஆரம்பம்!..
ஐயப்பன் விரதம் ஆரம்பிக்கின்றது இன்று..
மலைபோல் வருந் துயர் பனிபோல் மறைய
நாம ஸ்மரணை செய்வார்கள் எல்லோரும்.
நாமும் சொல்வோம்!..
அண்ணாமலையானும் அழகன் முருகனும் ஐயப்பன் அருளும்
அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்!
சுவாமியே சரணம் ஐயப்பா!..
வாழ்த்துக்கள் ஐயா!
அன்பின் சகோதரி..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
அனைவருக்கும் நலம் உண்டாக வேண்டும்..
தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி..
சுவாமியே சரணம் ஐயப்பா
பதிலளிநீக்குபடித்து மகிழ்ந்தேன் நண்பரே....
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
கார்த்திகை மாதம் மாலையிட்டு சபரி மலைப் பயணத்துக்கு ஆயத்தம் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இன்று மாலை இட்டு நாளை பயணம் என்கிற போக்குத்தான் அதிகம் காணப் படுகிறது.மக்கள் மாறினால் மாதமென்ன செய்யும்.?
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதாங்கள் கூறுவது உண்மையே!..
ஐயப்ப வழிபாடு என்பது நல்லொழுக்கப் பயிற்சி..
அதை ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம்.
மக்கள் மாறினால் மாதமென்ன செய்யும்?..
- என்ற கேள்விக்கு விடை -
எதை விதைத்தார்களோ - அதையே அறுவடை செய்வார்கள்!..
தங்களின் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
இனிய கருத்துரைக்கு நன்றி..
கார்த்திகை சோமவாரம் பற்றிய செய்திகளும், சபரிமலை யாத்திரைப் பற்றியத் தகவல்களும் அருமை தமிழ் சார்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குத்ங்கள் அன்பின் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
தங்கள் தளத்தில் ஐயப்பன் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
அன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
இப்போதெல்லாம் தூய்மையாக விரதமிருந்து செல்வோர் மிகவும் குறைவு! மக்களுக்கு எல்லாமே விளையாட்டாகவும் அலட்சியமாகவும் ஆகிவிட்டது!
பதிலளிநீக்குசுவாமியே சரணம் ஐயப்பா!
அன்பின் துளசிதரன்..
நீக்குதாங்கள் கூறுவது உண்மையே..
தூய்மையுடன் விரதம் இருந்து மலைக்குச் செல்வோர் அடையும் பலன்கள் மிக அதிகம்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
மாயவரம் வந்தீர்களா? தகவல் தெரிவித்து விட்டு வீட்டுக்கு வந்து இருக்கலாமே!
பதிலளிநீக்குதங்கள் அன்பினுக்கு நன்றி,,
நீக்குஆனால், அது எதிர்பாராத பயணம். தாங்கள் மாயூரத்தில் இருப்பதை - நான் நினைக்கவில்லை. அடுத்த பதிவில் அந்தப் பயணத்தைப் பற்றிக் கூறுகின்றேன்.